நாக்பூர் : மகாராஷ்ட்டிராவில் சனி பகவான் கோயிலுக்குள் பெண்கள் அமைப்பினர் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது .மகாராஷ்ட்டிர
மாநிலம் அகம்மதுநகர் மாவட்ட சிங்னாபூரில் புகழ்பெற்ற சனி பகவான்கோயில்
உள்ளது. இங்கு புனித இடத்தில் வழிபாடு செய்ய பெண்கள் அமைப்பினர் உரிமை கோரி
வருகின்றனர். இதனை வலியுறுத்தி இன்று ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர் . ஆனால்
அகம்மதுநகர் பகுதியில் வாழும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
இதனால் கோயிலில் இருந்து 100 கிமீட்டர் தொலைவில் போலீசாரால் தடுத்து
நிறுத்தப்பட்டனர். கோயில் ஆதரவாளர்களான பெண்கள், ஆண்கள் இந்த
அமைப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்டதால் மோதிக்கொள்ளும் நிலை
உருவானது. இதனால் இங்கு பரபரப்பு நிலவுகிறது .கோயிலுக்குள் நுழையாமல் திரும்ப மாட்டோம் என அடம் பிடித்துள்ளனர் .இதனால் இப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் . தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக