பொதுவாகவே லயோலா கல்லூரி
கருத்துக்கணிப்புகள் துல்லியமாக இருக்கும் என்பது கடந்த கால கால்குலேஷன்.
அரசியல் ஏரியாவில் மட்டுமே இப்படி கருத்துக்கணிப்புகள் நடத்தி புளியை
கரைத்து வந்த அக்கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம், இந்த முறை
அப்படியே சினிமாவையும் கொஞ்சம் டச் பண்ணியதுதான் குய்யோ முய்யோ! “இப்படி
வச்சு செஞ்சுட்டாரே…” என்று ராஜநாயகம் குறித்து அதிகம் மனம் வருந்தப் போவது
கமல் ரசிகர்கள்தான். ஏனென்றால் நாலாவது இடத்தில் இருக்கிறார் உலக நாயகன்.
விஜய் ரசிகர்களுக்குதான் பலத்த அதிர்ச்சி.
அரசியல்வாதிகளும், நடுநிலைவாதிகளும், பொதுமக்களும், ரசிகர்களும் எப்போதும்
தலை மேல் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி
மயிரிழையில் ஒரு ஸ்டெப் கீழே இறங்கிவிட்டார்.
மக்களுக்கு அதிகம் பிடித்த நடிகர் யார்?
இதுதான் ராஜநாயகம் தலைமையிலான குழு எடுத்து சர்வே. இதில் 16 சதவீதம்
அஜீத்திற்கும், 15.9 சதவீதம் ரஜினிக்கும், 9 சதவீதம் விஜய்க்கும், 5.9
சதவீதம் கமலுக்கும், 4.3 சதவீதம் சூர்யாவுக்கும் கிடைத்திருக்கிறது.
அடுத்த சூப்பர் ஸ்டார் என்று விஜய்யை
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். பல சினிமா மேடைகளில்
விஜய்யை சூப்பர் ஸ்டார் என்றே பேசி வருகிறார்கள் சினிமா பிரபலங்கள். இந்த
நேரத்தில்தான் இப்படியொரு சர்வே முடிவு.
வழக்கம் போல அஜீத் ரசிகர்கள் இதை
கொண்டாடிக் கொண்டிருக்க, “அடப் போய்யா டுபாக்கூர்” என்று திட்டி
தீர்க்கிறார்கள் விஜய் ரசிகர்கள். பொதுத் தேர்தல் ரிசல்ட்டை விட பெரிய
அதிர்ச்சியை தந்திருக்கும் இந்த ரிசல்ட், எதிர்காலத்தில் என்னென்ன
விளைவுகளை ஏற்படுத்துமோ?newtamilcinema.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக