வியாழன், 30 ஏப்ரல், 2015

ஜெயலலிதாவின் வழக்குகளில் நீதி பரிபாலனம் பிறழ்ந்துள்ளது? சட்டம் ஒரு இருட்டறை? எப்போதும் அல்ல?

சட்டம் ஒரு இருட்டறை.  அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு.  ஏழைக்கு எட்டாத விளக்கு என்றார் அறிஞர் அண்ணா. ஆனால் ஜெயலலிதா போன்ற பணமும் செல்வாக்கும் படைத்தவர்கள், சட்டத்தில் இருக்கும் கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தையும், அணைத்து, இருட்டாக்கிட, இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர்களை வைத்து முயற்சி செய்தனர்.18 ஆண்டுகாலமாக ஜெயலலிதாவின் வழக்கில் இருட்டறையில் இருந்த சட்டத்தின் மீது தற்போது வெளிச்சம் பாய்ச்சப்பட்டுள்ளது.
பராசக்தி படத்தில் குணசேகரன் நீதிமன்றத்தில் பேசுவான் “இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது” என்று.  ஆனால் ஜெயலலிதாவின் வழக்கைப் பொறுத்தவரை, இந்த வழக்குதான் பல விசித்திரமான நீதிமன்றங்களை சந்தித்திருக்கிறது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு திமுக ஆட்சி இருந்தவரை, இந்த வழக்கின் விசாரணை ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டிருந்தது.  2001ல் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக ஆன பிறகு, நிலைமை தலைகீழ் ஆனது.   2001ல் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக ஆன பிறகு, சாட்சிகள் வரிசையாக மீண்டும் அழைக்கப்பட்டனர்.  ஏற்கனவே சாட்சியம் சொன்னவர்களை மீண்டும் விசாரிக்க அழைக்கப்பட்டனர்.   அழைக்கப்பட்ட அத்தனை பேரும் பிறழ் சாட்சியங்களாக மாறினர்.

DSC015763
இந்த வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து, கர்நாடக சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றிய நீதிபதிகள் எஸ்.என்.வரியவா மற்றும், எச்.கே.சேமா இது குறித்து தங்கள் தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்.
It is undisputed that 76 witnesses have been recalled. Many of them had earlier been cross-examined. On a question from Court we were informed that the witnesses were recalled as Senior counsel for the second Respondent had been busy attending to some other case filed against her when they were first examined. This could hardly have been a ground for recall of witnesses. The fact that the public prosecutor now appointed did not object to such an application itself suggests that free and fair trial is not going on. It appears that process of justice is being subverted. This gets reinforced by the fact that even when witness after witness has resiled from what they had stated in the evidence in chief, yet no steps have been taken by the public prosecutor to resort to Section 154 of the Indian Evidence Act. As already noticed, the second respondent became the Chief Minister in May, 2001. The list of witnesses recalled and cross-examined after 14.5.2001 has been set out by the Petitioner in Annexure P-2 of the affidavit of the petitioner.
76  சாட்சியங்கள் மீண்டும் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர் என்பது உண்மையே.   இவர்களில் பலர் ஏற்கனவே குறுக்கு விசாரணை செய்யப்பட்டவர்கள்.   இவர்கள் எதற்காக இப்படி மீண்டும் அழைக்கப்பட்டனர் என்பதற்கு, ஜெயலலிதாவின் வழக்கறிஞர் வேறு வழக்குகளில் பிசியாக இருந்ததால் அவரால் முதல் விசாரணையை கவனிக்க முடியவில்லை என்று கூறப்பட்டது.   இதை சாட்சிகளை மீண்டும் விசாரணைக்கு அழைத்ததற்கு ஒரு காரணமாக ஏற்றுக் கொள்ளவே முடியாது.    இப்போது நியமிக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதே வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறவில்லை என்பதை உணர்த்துகிறது.  இந்த வழக்கில் நீதி பிறழ்ந்துள்ளது.   இந்த சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிய பிறகு கூட, அவர்களை பிறழ் சாட்சிகளாக கருதி, அரசுத் தரப்பு இந்திய சாட்சியச் சட்டப் பிரிவு 154ன் கீழ் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை என்பது, வழக்கு நேர்மையாக நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. ஏற்கனவே கூறியது போல, ஜெயலலிதா, மே 2001ல் முதல்வராகியுள்ளார்.
We have cited only a few instances to show how the prosecution appears to have acted hand in glove with the accused. On examining the facts of this case, as adumbrated above, on the touchstone of the decisions of this Court, as referred to above, the petitioner has made out a case that the public confidence in the fairness of trial is being seriously undermined. As revealed from the aforesaid recited facts, great prejudice appear to have been caused to the prosecution which could culminate in grave miscarriage of justice. The witnesses who had been examined and cross-examined earlier should on such a flimsy ground never have been recalled for cross-examination. The fact that it is done after the second respondent assumed the power as the Chief Minister of the State and the public prosecutor appointed by her government did not oppose and/or give consent to application for recall of witnesses is indicative of how judicial process is being subverted. The public prosecutor not resorting to Section 154 of the Indian Evidence Act nor making any application to take action in perjury taken against the witnesses also indicate that trial is not proceeding fairly. It was the duty of the public prosecutor to have first strenuously opposed any application for recall and in any event to have confronted witnesses with their statements recorded under Section 161 of Cr.P.C. and their examination-in-chief.
அரசுத் தரப்பு குற்றவாளிகளோடு கைகோர்த்துள்ளது என்பதை சுட்டிக்காட்ட, ஒரு சில உதாரணங்களை மட்டும எடுத்துக் காட்டியுள்ளோம்.    இவ்வழக்கின் தன்மைகளை ஆராய்ந்ததில், பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யக் கூடிய பல விஷயங்கள் நடந்துள்ளதாக, மனுதாரர் (பேராசிரியர் அன்பழகன்) நிரூபித்துள்ளார்.    மேற்கூறிய விஷயங்களின் அடிப்படையில், அரசுத் தரப்புக்கு ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதையும், நீதிப் பிறழ்வு நிகழ்ந்துள்ளதையும் காண்கிறோம்.   இது போன்ற அற்பக் காரணங்களுக்காக, ஏற்கனவே விசாரிக்கப்பட்டு, குறுக்கு விசாரணையும் முடிக்கப்பட்ட சாட்சிகள் திரும்ப அழைக்கப்பட்டிருக்கவே கூடாது.   அதுவும் இந்த விவகாரங்கள் எல்லாம், ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பிறகு, அவரால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞரின் துணையோடு நடந்துள்ளது, நீதி பரிபாலனம் எந்த அளவுக்கு பிறழ்ந்துள்ளது என்பதை நிரூபிக்கிறது.  அரசு வழக்கறிஞர் இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 154ன் படி பிறழ் சாட்சிகளான சாட்சிகளின் மீது பொய் சாட்சி சொன்னதற்காக நடவடிக்கை எடுக்க எவ்விதமான முயற்சியும் எடுக்கவில்லை என்பதே இவ்வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடைபெறவில்லை என்பதை உணர்த்துகிறது.  சாட்சிகளை மீண்டும் அழைப்பதை அரசு வழக்கறிஞர் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும். அவர்கள் காவல்துறையிடம் சொன்ன சாட்சியத்திலிருந்து ஏன் மாறியுள்ளார்கள் என்பதை அவர்களிடம் குறுக்கு விசாரணை செய்திருக்க வேண்டும்.
No attempt has been made to elicit or find out whether witnesses were resiling because they are now under pressure to do so. It does appear that the new public prosecutor is hand in glove with the accused thereby creating a reasonable apprehension of likelihood of failure of justice in the minds of the public at large. There is strong indication that the process of justice is being subverted.
சாட்சிகள் ஏன் இவ்வாறு மாற்றி சாட்சியம் கூறுகின்றனர், அவர்கள் மீது மிரட்டல் அல்லது அழுத்தம் இருந்ததா என்பதை கண்டறிய அரசு வழக்றிஞர் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அரசு வழக்கறிஞர் குற்றவாளிகளோடு சேர்ந்து கொண்டு, நீதி பிறழ்வு ஏற்படும் வகையில் நடந்து கொள்கிறார் என்று பொதுமக்கள் இடையே ஒரு நியாயமான அச்சம் எழுந்துள்ளது.    நீதியை தடம் புரளச் செய்யும் முயற்சி நடந்து வருகிறது என்பது உறுதியாக தெரிகிறது.
18TH_SUPREME_COURT_1334414f
ஜெயலலிதா நியமித்த அரசு வழக்கறிஞர், தமிழகத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதை, உச்சநீதிமன்றம் படம் பிடித்துக் காட்டியுள்ளது.  இப்படிப்பட்ட சூழலில், ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு சாதகமாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான பவானி சிங்கை மீண்டும் ஜெயலலிதாவின் அரசு நியமித்தால் அது எப்படி சரியாக இருக்கும் ?
அந்தத் தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கான கண்டனங்கள் இத்தோடு நிற்கவில்லை.     சென்னையில் அப்போது செயல்பட்ட அந்த விசித்திரமான நீதிமன்றம் வேறு என்னென்ன செய்தது என்பதையும் உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.
Mr. Andhyarujina, learned senior counsel for the petitioner, has brought to our notice the manner in which the examination of 2nd respondent under Section 313 is sought to be done, which according to him, is unknown to the procedure established by law. The second respondent filed a criminal M.P.No.230 of 2003 dated 24.2.2003 with the prayer to dispense with the personal appearance and to permit her to answer the questionnaire through the counsel, a copy of which is made available to us. It is averred in paragraph 5 of the application that she has just returned from hectic election campaign after a week’s tour of Thoothukudi District. She has further stated that she is quite exhausted and laid up with fever and the doctor has advised her complete rest for a few days. She is physically incapacitated to attend the Court in person to fulfil the requirement of Section 313 Cr.P.C. The physical hardship, which the applicant may undergo while answering the questions, will further aggravate physical condition. In paragraph 6 she has further stated that she is making the application not because of the position she is holding but purely on the ground of physical condition. The public prosecutor did not oppose the said application. In the aforesaid facts, the trial court allowed the application by an order dated 24.2.2003. Be you ever so high the law is above you. In our view, the grounds recited in the application as referred to above, were not at all mitigating circumstances to have granted dispensation of personal appearance. To say the least, that was a ploy adopted to circumvent the due process of law.
அன்பழகனின் வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313ன் கீழ், கேள்வி கேட்கும் முறை, இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே கேள்விப்பட்டிராதது என்கிறார்.   24 மார்ச் 2003 அன்று ஜெயலலிதா சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்கிறார்.    அதில், தன்னால் நேரடியாக வர முடியாது என்பதால் 313ன் கீழ் கேள்விகள் அனைத்தையும் தன்னிடம் கொடுத்தனுப்பி விட்டு, தான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்குமாறு கேட்டுள்ளார்.   அந்த மனுவில் ஜெயலலிதா, தூத்துக்குடியில் சூறாவளி பிரச்சாரத்தில் ஒரு வாரம் ஈடுபட்டதால், மிகவும் களைப்பாக இருப்பதாகவும், அதனால் காய்ச்சல் வந்திருப்பதாகவும், அதனால் மருத்துவர்கள் படுக்கையில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.    அவரால் நீதிமன்றத்துக்கு வர முடியாத அளவுக்கு உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், நீதிமன்றத்துக்கு வந்து 313ன் கீழ் பதில் சொன்னால் உடல்நிலை மேலும் மோசமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய பதவி காரணமாக இப்படி ஒரு சலுகையை கேட்கவில்லை என்றும், தன் உடல்நிலை காரணமாகவே இப்படியொரு சலுகையை கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.   இதற்கு அரசு வழக்கறிஞர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.   அந்த சிறப்பு நீதிபதியும், இந்த மனுவை 24 பிப்ரவரி 2003 அன்று அனுமதித்துள்ளார்.     நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, ஆனால் சட்டம் உன்னை விட உயர்ந்தது.  நேரில் வராமல் இருப்பதற்கு அந்த மனுவில் கூறியுள்ள காரணங்கள், நேரில் வராமல் தவிர்ப்பதற்கு ஏற்ற காரணங்களே அல்ல.  இன்னும் சுருக்கமாக சொன்னால், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க கடைபிடிக்கப்பட்ட ஒரு தந்திரமே இது.”
இப்படி எதையெல்லாம் செய்யக்கூடாதோ, அத்தனையையும், அன்று இந்த வழக்கை சென்னையில் விசாரித்த நீதிபதி செய்தார்.    அப்படியொரு விசித்திரமான நீதிமன்றத்தை இவ்வழக்கு சந்தித்தது.
இதன் பிறகு, இந்த வழக்கு, பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.   அப்படி மாற்றப்பட்ட பிறகு, எப்படியெல்லாம் ஜெயலலிதா தரப்பு வாய்தா  வாங்கியது என்பதை பி.வி.ஆச்சார்யா தனது சுயசரிதையில் இவ்வாறு கூறுகிறார்
“வழக்கு விசாரணையின்போது, ஜெயலலிதா தரப்பு பலமுறை வாய்தா வாங்கியுள்ளது. வாய்தா வாங்கப் பட்ட விதத்தையும், இவ்வழக்கு இழுத்தடிக்கப்பட்ட விதத்தையும் பற்றி தனி நூலே எழுதலாம். குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அனைத்து பிரிவுகளையும் பயன்படுத்தி வாய்தா வாங்கினார்கள். அது பற்றிய நூலுக்கு ‘வாய்தா சட்டம்’ என பெயர் சூட்டலாம். ஆனால் அந்த நூலை படித்து எதிர்காலத்தில் குற்றவாளிகள் எளிதில் தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.”
aachariya
இப்படி பெங்களுரு நீதிமன்றத்திலும் இந்த வழக்கை எப்படியெல்லாம் இழுத்தடிக்க முடியுமோ அப்படியெல்லாம் இழுத்தடித்தார்கள்.
ஜெயலலிதா மீது 1996ம் ஆண்டு, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. அவை இரண்டு வழக்குகள். ஒன்று சொத்துக் குவிப்பு வழக்கு. இன்னொன்று லண்டன் ஹோட்டல் வழக்கு.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு வந்தது. கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடும் அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆச்சார்யாவை நியமித்து 2005, பிப்ரவரி 19ம் தேதி உத்தரவிட்டார். சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பச்சாப்புரே நியமிக்கப்பட்டார். ஆனால், வழக்கை உரிய விசாரணை நடத்த அவரால் முடியவில்லை. ஏனென்றால், லண்டன் ஹோட்டல் வழக்கையும் பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும், இரண்டு வழக்கையும் ஒரே வழக்காக நடத்த வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் மனு செய்யப்பட்டது. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, முதல் கட்ட விசாரணையே முடிந்திருந்தது. ஆனால், லண்டன் ஹோட்டல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதோடு சரி. அதில் யார் யார் என்னென்ன குற்றம் செய்திருக்கிறார்கள் என்பதுகூட வரையறுக்கப்படவில்லை. இதனால், இரண்டு வழக்குகளையும் சேர்த்து நடத்த முடியாது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி அமர்வில், குற்றவாளிகள் தரப்பில் இரண்டு வழக்குகளையும் சேர்த்து நடத்த வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தனர். அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இரண்டு வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க உத்தரவிட்டது. ஆனால், அதே சமயத்தில் டிடிவி தினகரன்  இரண்டையும் தனித்தனியாகத்தான் விசாரிக்க வேண்டும் என்று ஒரு மனுச் செய்தார். ஜெயலலிதா, ‘இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும்’ என்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். இப்படி பல்வேறு குளறுபடிகளால், மொத்தமாக இரண்டு வழக்குகளும் ஓர் அங்குலம்கூட நகராமல் அப்படியே நின்றன. இதற்கிடையே பேராசிரியர் அன்பழகன் உச்ச நீதிமன்றம் சென்று, இரண்டும் வேறு வேறு வழக்குகள். இரண்டையும் தனித்தனியாகத்தான் நடத்த வேண்டும் என்றும் ஒரே வழக்காக நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக இந்த இரண்டு வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்குத் தடை விதித்தது.
இதன் பிறகு, இந்த வழக்கின் தாமதத்துக்கான காரணத்தை ஆச்சார்யா ஆராய்ந்தார்.  லண்டன் வழக்கு காரணமாக, 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கிலும் ஜெயலலிதா உள்ளிட்டோர் தப்பித்து விடுவார்கள் என்பதை உணர்ந்தார்.    லண்டன் ஹோட்டல் வழக்கின் ஆதாரங்கள் அனைத்தையும் ஆராய்ந்து ஓர் அறிக்கையைத் தயார் செய்து, அதை கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பினார் ஆச்சார்யா.
அந்த அறிக்கையில், லண்டன் ஹோட்டல் வழக்கைப் பொறுத்தவரை அரசுத் தரப்பிடம் எந்தவிதமான உரிய ஆதாரங்களும் இல்லை. அது வாய்மொழியாக அவர்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போடப்பட்ட வழக்கு. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கு அப்படிப்பட்டதல்ல. அதில் குற்றவாளிகளுக்கு எதிராக ஆதாரங்களும் ஆவணங்களும் வலுவாக உள்ளன. ஆனால், லண்டன் ஹோட்டல் வழக்கை இந்த வழக்கோடு சேர்த்து விசாரித்தால், அது இரண்டு வழக்குகளையும் பலவீனப்படுத்திவிடும். ஆதாரங்களை வலுவற்றதாக்கிவிடும். குற்றவாளிகள் எளிதாகத் தப்பித்துவிடுவார்கள். எனவே, லண்டன் ஹோட்டல் வழக்கை அதில் இருந்து தனியாகப் பிரித்துவிடுவதே நீதியை நிலைநாட்டுவதற்கான சரியான நடவடிக்கையாக இருக்கும். லண்டன் ஹோட்டல் வழக்கைப் பொறுத்தவரையில், அதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டுக்காரர்கள். அவர்களில் ஓரிருவரைத் தவிர வேறு யாரையும் இதுவரை போலீஸ்காரர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவர்களுக்கு இந்த வழக்குத் தொடர்பாக சம்மன் அனுப்புவதும் அவர்களை இந்த நீதிமன்றத்துக்கு வரவழைப்பதும் நடைமுறைச் சாத்தியத்தைக் குறைக்கும் வேலை. எனவே, குற்றவியல் சட்டப் பிரிவு  321ன் படி, அரசுத் தரப்புக்கு லண்டன் ஹோட்டல் வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் ஆச்சார்யா குறிப்பிட்டார்.  இதனை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றது. உச்ச நீதிமன்றமும் அதற்கு அனுமதி அளித்தது.
இந்த நேரத்தில் மற்றொரு விசித்திரமும் நடந்தது.   அரசுத் தரப்பே ஜெயலலிதா மீதான லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் வாங்க முன்வந்தபோது, அதை வாபஸ் வாங்கக்கூடாது என்றும் ஜெயலலிதா தரப்பு வாதிட்டது.    ஆனால் இறுதியாக நீதிமன்றம், லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் வாங்கலாம் என்று அனுமதி அளித்தது.
2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு, லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்த ஐஜி கே.ராதாகிருஷ்ணன் ஐபிஎஸ்தான், ஜெயலலிதா வழக்கை கவனித்து வந்தார்.  அப்போது அந்த வழக்கை எப்படியெல்லாம் தாமதப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் தாமதப்படுத்தினார்.  வழக்கை ஒழித்துக் கட்டும் அத்தனை முயற்சிகளிலும் இறங்கினார்.    அதன் விளைவாகத்தான், ஜெயலலிதா அவரது மகன் சந்தீப்புக்கு, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் சீட் வழங்கினார்.  ஆனால் விசித்திரம் என்ன        தெரியுமா ?    அந்த ராதாகிருஷ்ணனைத்தான், சென்னை மாநகர ஆணையராக்கி அழகு பார்த்தார் கருணாநிதி.
radhakrishnan
அதன்பிறகுதான், இந்த வழக்கு மீண்டும் பெங்களுரில் தொடங்கியது.    ஏற்கனவே சென்னை நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டு பிறழ் சாட்சிகளாக ஆனவர்கள் மீண்டும் பெங்களுரு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள்.    இப்போது இந்த வழக்கு கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் செல்லத் தொடங்கி விட்டது என்பதை ஜெயலலிதா தரப்பு உணரத்தொடங்கியது.   இனி இதை தாமதப்படுத்த, புதிய மனு எதையும் உயர்நீதிமன்றத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ தாக்கல் செய்ய முடியாது என்ற நிலை.
இதற்குள், ஜெயலலிதா மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறார்.     வந்ததும் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா ?   ஜெயலலிதாவின் வழக்கில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன என்றும், அதை சரி செய்ய, மீண்டும் புலனாய்வு செய்ய வேண்டும் என்றும் ஒரு நடவடிக்கையை எடுத்தது. தலைமைச் செயலாளரின் கடிதம், லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி குணசீலனை அடைந்து அவரின் உத்தரவுப்படி, புலயாய்வு அதிகாரி ஜி.சம்பந்தம், பெங்களுரு சிறப்பு நீதிபதிக்கு நேரடியாக கடிதம் எழுதினார்.    அரசு   வழக்கறிஞர் இருக்கையில் நேரடியாக நீதிபதிக்கு ஒரு அதிகாரி எப்படி கடிதம் எழுத முடியும் என்று பி.வி.ஆச்சார்யா கடும் கோபமடைந்து நீதிபதியிடம் முறையிட்டார்.    அதை ஏற்று சிறப்பு நீதிமன்றம், மறு புலனாய்வுக்கான மனுவை தள்ளுபடி செய்தது.
அதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றம் சென்றார் ஜெயலலிதா.    அந்த மனுவை தள்ளுபடி செய்த, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வி.ஜெகந்நாதன் தன் தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
“…. ….. ….  in the instant case, keeping in view the ends of justice is the most paramount consideration, the petitioner has thus made out a case for this court to invoke the extraordinary power conferred on it under Section 482 of the Cr. P.C. and in order to prevent subversion of justice and to meet the ends of justice, this court, under the aforesaid compelling circumstances, has to interfere and stop further investigation which the I.O. intends to take up, as mentioned in the communication dated 15.06.2011″.
இந்த நிலையில்தான் ஜெயலலிதா தரப்பு, பி.வி.ஆச்சார்யா அரசு வழக்கறிஞராக இருக்கும் வரையில், இந்த வழக்கிலிருந்து தப்புவது சிரமம் என்பதை உணர்ந்தது.  அப்போது இவர்கள் கையாண்ட தந்திரம்தான், அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா மீது பொய்க்குற்றச்சாட்டை சுமத்தி அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது.
தனக்கு கொடுக்கப்பட்ட மன உளைச்சலை, பி.வி.ஆச்சார்யா, அவரது வார்த்தைகளிலேயே, தனது சுயசரிதையில் விவரித்திருக்கிறார்.   பாருங்கள்

” அந்த நேரத்தில் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக ஆனார். அவ்வளவுதான். அதுவரை நான் யாருக்காக வாதாடிக்கொண்டிருந்தேனோ அந்த லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறின. அவர்களின் போக்கு வேறுமாதிரியாக ஆனது. உடனடியாக அவர்களுக்காகப் புதிய வழக்கறிஞரை நியமிக்கப் போவதாகச் சொன்னார்கள். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலோடு நடக்கும் இந்த வழக்கில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அவர்கள் இஷ்டத்துக்கு அவர்களுக்கு வழக்கறிஞரை நியமித்துக்கொள்ள முடியாது. இதை எதிர்த்து நான் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்தேன். லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான் வாதாடினார்.
IMG-20150428-WA0078
ஆனால், கர்நாடக உயர் நீதிமன்றம், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அவர்களுக்கான வழக்கறிஞரை அவர்களாக நியமித்துக்கொள்ள முடியாது என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை உச்ச நீதிமன்றம் சென்றனர். எனக்காக நானே வாதாடினேன். இறுதியில் உச்ச நீதிமன்றம், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அவர்களாக அவர்களுக்கான வழக்கறிஞரை நியமித்துக்கொள்ள முடியாது. இந்த வழக்கு தங்களின் மேற்பார்வையில், கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடந்துகொண்டிருக்கிறது. தற்போது வழக்குக்கான எல்லை கர்நாடகா. எனவே, கர்நாடக உயர் நீதிமன்றம்தான் அரசுத்தரப்பு வழக்கறிஞரை நியமிக்க முடியும் என்று சொல்லி உத்தரவிட்டது.
இதையடுத்து கர்நாடக மாநிலத்தின் அரசுத் தலைமை வழக்கறிஞராக நான் நியமிக்கப்பட்டேன். உடனே, அதை ஆயுதமாக எடுத்து என்னை ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் தாக்கத் தொடங்கினார்கள். ஒருவர் இரண்டு பதவியில் இருப்பது கூடாது. எனவே, ஆச்சார்யாவை, சொத்துக் குவிப்பு வழக்கின் சிறப்பு வழக்கறிஞர் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்று கவர்னரைச் சந்தித்து மனுக் கொடுத்தனர். இரண்டு ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தனர். பொதுநல வழக்குப் போட்டார் ஒருவர். ஆனால், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி ஆனது. ஆனால், அரசியல் அழுத்தம் காரணமாக கவர்னரிடம் கொடுத்த மனு வேலை செய்தது. பி.ஜே.பியின் மேலிடத்தில் இருந்து கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. என்னை அரசின் தலைமை வழக்கறிஞர் பொறுப்பில் மட்டும் வைத்துக்கொள்ளவும் சிறப்பு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து விடுவிக்கவும் அந்த அறிவுறுத்தல் இருந்தது. அந்த அழுத்தம் எனக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால், நான் என்னுடைய அரசுத் தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தேன். சொத்துக் குவிப்பு வழக்கை நடத்தும் சிறப்பு அரசுத்தரப்பு  வழக்கறிஞராக செயல்படவே விரும்பினேன்.
சென்னையில் இருந்து இரண்டு வழக்கறிஞர்கள் கர்நாடக உயர் நீதிமன்றப் பதிவாளர் மற்றும் உள் துறை செயலாளர், தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு ஒரு மனுவைக் கொடுத்தனர். அதில் நான், வேண்டுமென்றே ஜெயலலிதா மீது உள்ள வன்மத்தால் இந்த வழக்கை நடத்துகிறேன். எனவே, என்னைச் சிறப்பு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தனர். அவர்களின் அனைத்து அஸ்திரங்களும் அர்த்தம் இழந்த நேரத்தில் கடைசியாக வேறு ஒன்றைக் கையில் எடுத்தனர். நான், பி.எம்.எஸ் கல்வி அறக்கட்டளை ஒன்றில் சேர்மன் பொறுப்பில் இருந்தேன். அந்த அறக்கட்டளை சில பொறியியல் கல்லூரிகளை நடத்திக் கொண்டிருந்தது. அதில், நிர்வாகத்தில் சில முறைகேடுகள் நடப்பதாகவும் அதில் எனக்கும் தொடர்பிருப்பதாகவும் சிலர் என் மீது கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தனர். முதலில், நான் அரசுத் தலைமை வழக்கறிஞராக இருப்பதால் நான் ஓர் அரசு ஊழியர். தனி நபர் ஒருவர் என் மீது வழக்குத் தொடுக்க அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், என் மீது வழக்குத் தொடர அப்படி அந்த தனிநபர் அரசாங்கத்திடம் எந்த அனுமதியும் பெறவில்லை. எனவே, அந்த மனுவே ஏற்கத்தக்கது அல்ல. ஆனால், லோக் ஆயுக்தா நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டதுடன் ஒரு விசித்திரமான உத்தரவையும் பிறப்பித்தது. அது மனுதாரர்களிடம் சொன்னது, நீங்கள் அளித்திருக்கும் புகாரில் உரிய முகாந்திரம் இல்லை. எனவே, இன்னும் முகாந்திரம் உள்ள ஒரு மனுவை தயாரித்துக் கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டது.
இது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. என் மீது வழக்குத் தொடரவே அவர்களுக்கு அனுமதி இல்லை. அந்த ஒரு விஷயத்தை வைத்தே நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்திருக்கலாம். ஆனால், அதோடு போதிய ஆதாரங்கள் இல்லாத மனு என்ற அடிப்படையிலாவது அதை தள்ளுபடி செய்திருக்க வேண்டும், அதையும் செய்யவில்லை. மாறாக நிறைய ஆதாரங்களைக் கொண்டு ஒரு மனுவை தயாரித்துக்கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டதை எப்படி என்றே என்னால் யூகிக்க முடியவில்லை.
மேலும், இந்தப் புகாரை என் மீது அளிப்பதற்கு முன்பு என்னைச் சந்தித்த ஒரு நபர், ‘நீங்கள் உடனடியாகச் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விலகிக்கொள்ளாவிட்டால், உங்கள் மீது ஏராளமான புகார்களை வைத்து லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகச் சொல்கிறார்கள். எனவே, தயவுசெய்து அதில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்’ என்று வேண்டுகோள் வைக்கும்தொனியில் என்னை மிரட்டவும் செய்தார்.
வழக்கறிஞர் தொழிலில் அடியெடுத்து வைத்ததில் இருந்து நான் நீதியின் பக்கமே செயல்பட்டிருக்கிறேன். கடந்த 56 ஆண்டுகளாக என்னுடைய நேர்மையின் மூலம் கட்டி வைத்திருந்த என்னுடைய மாண்பு தகர்க்கப்பட்டதாக எண்ணி அயர்ச்சி அடைந்தேன். நான் அப்போதே இந்த வழக்கில் நான் சிறப்பு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால், அதே சமயம், என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து என் மீது படிந்திருந்த கறையை நீக்கிவிட்டுத்தான் நான் அதைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு நான் பதவி விலக வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
அதனால், லோக் ஆயுக்தா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நான் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்தேன். அப்போது கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் அனைவரும், என் பின்னால் இருந்தனர். கர்நாடக உயர் நீதிமன்றம் அந்த உத்தரவுகளை தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவு 2012, ஆகஸ்ட் 2ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. நான் அதற்கு அடுத்த நாள் அதாவது 3ம் தேதி என்னுடைய ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தேன்.
maxresdefault
ஆனால், தலைமை நீதிபதி என்னை அழைத்து என்னுடைய முடிவை மறு பரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், நான் எந்த நிலையிலும் அதைச் செய்யமாட்டேன் என்று சொல்லி என்னுடைய முடிவில் உறுதியாக நின்றேன். ஆனால், என்னுடைய ராஜினாமாவை அவர்களும் உடனடியாக ஏற்கவில்லை. 2013, ஜனவரி 17ம் தேதி ஏற்றுக்கொண்டனர். அன்றோடு எனக்கும் சொத்துக் குவிப்பு வழக்குக்கும் இருந்த தொடர்பு முடிந்தது. என்னை நம்பி ஒப்படைக்கப்பட்ட வழக்குகளில் இறுதிவரை போராடாமல் நான் இடையில் விலகிக்கொண்ட வழக்கு இது ஒன்றுதான். அந்த அளவுக்கு எனக்கு இடையூறுகள் கொடுக்கப்பட்டன”
இப்படி மனவேதனைக்கு ஆளான ஆச்சார்யாவே இன்று உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாட மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளது காலத்தின் கோலம்தானே ?
மீதத்தை அடுத்த பகுதியில் காண்போம்  .savukkuonline.com

கருத்துகள் இல்லை: