வியாழன், 8 ஜனவரி, 2015

சங்கீதா சடலம் தோண்டியெடுப்பு: உடல் பாகங்கள் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டன( படங்கள்)

பெங்களூரு நித்தியானந்தா ஆசிரமத்தில் இறந்த திருச்சி பெண்ணின் சடலம் நேற்று தோண்டி யெடுக்கப்பட்டது. >திருச்சி நவலூர் குட்டப்பட்டு மேலத்தெருவை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மனைவி ஜான்சிராணி. இவர்களது 3வது மகள் சங்கீதா (24). பிசிஏ முடித்துவிட்டு கடந்த 4 வருடமாக பெங்களூரு பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கி பணியாற்றி வந்தார்.>2014 டிசம்பர் 28ம் தேதி ஆசிரமத்தில் இருந்து சங்கீதாவின் தந்தைக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது சங்கீதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினர். இதையடுத்து சங்கீதாவின் பெற்றோர் பெங்களூரு புறப்பட்டு சென்றனர்.>அங்கு சென்று விசாரித்தபோது, சங்கீதாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது, வழியிலேயே இறந்துவிட்டார் என்று கூறினர். அதன்பின் அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல் கடந்த 29ம் தேதி">திருச்சி கொண்டு வரப்பட்டு மறுநாள் நவலூர் குட்டப்பட்டு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி சங்கீதாவின் பெற்றோர் திருச்சி ராம்ஜிநகர் போலீஸ் ஸ்டேஷனில் சங்கீதாவின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்தனர். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்து திருப்பி அனுப்பினர். பின்னர் தனது உறவினர் இளையராஜாவுடன் பெங்களூரு சென்ற அவரது தாய் ஜான்சிராணி தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக அங்கு ராம்நகரில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி சந்திரகுப்தாவிடம் புகார் மனு அளித்து கதறி அழுதார். 

புகாரை பெற்றுக்கொண்ட சந்திரகுப்தா, உரிய நடவடிக்கை எடுக்க பிடதி போலீ சாரு க்கு உத்தரவிட்டார். இதையடுத்து எஸ்ஐ லோகித், உதவி எஸ்ஐ அனுமேஸ், போலீஸ் காரர் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் பிடதியில் இருந்து கடந்த 5ம் தேதி நள்ளிரவு திருச்சி வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை ராம்ஜிநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து விசாரித்தனர்.

பின்னர் சங்கீதாவின் உடலை தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை செய்ய ஸ்ரீரங்கம் ஆர்டிஓ மனோகரனிடம் அனுமதி கேட்டனர். அவர் அனுமதி தர மறுத்ததை அடுத்து, திருச்சி கலெக்டர் பழனிச்சாமியிடம் அனுமதி கோரினர். கலெக்டர் அனுமதி அளித்ததால், நேற்று சங்கீதாவின் உடல் தோண்டி எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ராம்ஜிநகர் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பிற்பகல் 1.40 மணிக்கு ஸ்ரீரங்கம் தாசில்தார் காதர்மைதீன், ஆர்ஐ சரவணன், விஏஓ செந்தில்குமார் மற்றும் டாக்டர்கள் சரவணன், ரவிக்குமார் ஆகியோர் இடுகாட்டிற்கு வந்தனர். சங்கீதாவின் பெற்றோரும் காரில் அழைத்து வரப்பட்டனர். 

வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பிடதி போலீசார் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அழுகிய நிலையில் இருந்த உடலை டாக்டர்கள் இடுகாட்டின் வலதுபுறத்தில் இருந்த ஆஸ்பெட்டாஸ் சீட் கொட்டகையில் மறுபிரேத பரிசோதனை செய்தனர். உடலில் இருந்து இதயம், சீறுநீரகம் உள்ளிட்ட பாகங்களை ஆய்வுக்காக எடுத்தனர். 

பின்னர் அவற்றை பாதுகாப்பான முறையில் சீலிட்டு, பெங்களூரு ஆய்வகத்திற்கு எடுத்து செல்ல பிடதி போலீசாரிடம் ஒப்படைத்தனர். மீண்டும் 4 மணிக்கு ஏற்கனவே புதைக்கப்பட்ட குழியில் உடல் புதைக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வு அறிக்கைக்கு பின்பு தான் சங்கீதா சாவில் உள்ள மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபிரேத பரிசோதனையை காண ஏராளமானோர் இடுகாட்டில் திரண்டனர்.


கதறி அழும் சங்கீதாவின் தந்தை அர்ஜூனன்.
கதறி அழுத பெற்றோர்

இடுகாட்டுக்கு வரும் போது தாய் ஜான்சிராணி அழுது கொண்டே வந்தார். ஆண் மகனை போல வளர்த்த என் மகளை கொடுமைப்படுத்தி கொன்று விட்டார்களே. தமிழக கர்நாடக அரசு கள் கூட்டாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனக்கூறி தந்தை அர்ஜூணனும் கதறி அழுதார்.

பெங்களூருவில் நித்யானந்தா ஆசிரமத்தில் இறந்த சங்கீதாவின் உடல் மறு பிரேத பரிசோத னைக்காக திருச்சி நவலூர் குட்டப்பட்டு இடுகாட்டில் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.

பட்டதாரி மகளை
இழந்த தம்பதி

அர்ஜூனன் &ஜான்சி ராணி தம்பதிக்கு விஜி, சிவசங்கரி, சங்கீதா என 3 மகள்கள். மூத்த மகள் விஜி 15 வயதிலேயே இறந்துவிட்டார். 2வது மகள் சிவசங்கரி வாய் பேச முடியாதவர். 3வது மகளான சங்கீதாவை பட்டப்படிப்பு படிக்க வைத்தனர். நித்தியானந்தா மீதுள்ள பற்றால் சங்கீதாவை பெங்களூருவில் உள்ள நித்தி ஆசிரமத்தில் சேர்த்தனர். தற்போது அவர் மர்மமான முறை யில் இறந்து விட்டார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: