கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேன வெற்றி
பெற்றுள்ள நிலையில் இலங்கை சுதந்திர கட்சியை முன்னாள் அதிபர் சந்திரிகா
குமாரதுங்க மீண்டும் கைப்பற்றும் நிலை உள்ளது. ராஜபக்சேவின் இலங்கை சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர்
மைத்ரிபால சிறிசேன. அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு எதிராக மைத்ரிபால
சிறிசேனவை களம் இறக்கினார் முன்னாள் அதிபர் சந்திரிகா.
ராஜபக்சே தோல்வி: இலங்கை சுதந்திர கட்சியை மீண்டும் கைப்பற்றி
தலைவராகிறார் சந்திரிகா?
இதனால் சுதந்திர கட்சி இரு அணிகளாக பிரிந்தது. இருப்பினும் மைத்ரிபாலவும்
சந்திரிகாவும் தாங்கள் தொடர்ந்து சுதந்திரக் கட்சியில் நீடிப்பதாகவே கூறி
வந்தனர்.
இந்நிலையில் அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்றுள்ள நிலையில்
சுதந்திரக் கட்சியிலும் மைத்ரி- சந்திரிகா அணியின் கை ஓங்கும் நிலை
உருவாகி உள்ளது. இதனால் சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை சந்திரிகா
குமாரதுங்க கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கொழும்பு செய்திகள்
தெரிவிக்கின்றன. tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக