ஞாயிறு, 12 ஜனவரி, 2014

தேமுதிகவுக்கு அழைப்பு: விஜயகாந்தை சந்தித்த திருமாவளவன் பேட்டி

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சனிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,
விடுதலைச் சிறுத்தைகள் இருக்கும் அணியில் தேமுதிகவும் இடம்பெற வேண்டும் என்று தொடர்ந்து நான் விடுத்து வருகின்ற வேண்டுகோளை இன்று நேரிலே அவரிடத்தில் கூறினேன். எந்த அணியில் இடம்பெறுவது, எவ்வாறு கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டியது அவருடைய தனிப்பட்ட உரிமை. இருந்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருப்பதை நேரிடையாக அவரிடம் கூறியுள்ளோம். வகுப்புவாத, மதவாத கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டது.
உளுந்தூர்பேட்டையில் நடைபெற இருக்கும் தேமுதிக மாநாட்டின்போது தொண்டர்களின் விருப்பத்தை அறிந்து கூட்டணி குறித்து தமது முடிவை அறிவிப்பதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
திமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்க்கவே இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: