சனி, 18 ஜனவரி, 2014

அரவிந்த் கேஜ்ரிவால்: லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன்

புதுடெல்லி: கட்சி கட்டளையிட்டால் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்த டெல்லி முதல்வரும் அரவிந்த் கேஜ்ரிவால், தான் டெல்லி லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் தங்களது கட்சி எம் எல் ஏக்களும் லோக்சபா தேர்தலிலும் போட்டியிட மாட்டார்கள். கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என கூறியிருந்தார். இதன் பின்னர், எம் எல் ஏக்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்ற முடிவை கெஜ்ரிவால் மறுபரீசிலனை செய்வார் என தகவல் வெளியாகின.
இந்நிலையில் அரவிந்த் கேஜ்ரிவால், தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் சாதாரண மனிதனாகவே இருக்க விரும்புகிறேன். அரசை நடத்துவதென்பது மிகப் பெரிய சவால் என்ற பெரிய பாடத்தை நான் கற்றுள்ளேன். ஆம் ஆத்மி கட்சியை ஏற்க இந்தியா தயாராக உள்ளது. அரசியல் கணக்கு போடும் அளவுக்கு நான் பெரிய மனிதனல்ல. இந்திய பாதுகாப்பாக, செழிப்பாக இருக்க வேண்டு்ம் என்பதே எனது ஆசை. கட்சி கட்டளை இட்டால் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன். ஆம் ஆத்மி கட்சி 400 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும். வெற்றி பெறப்போது நாங்கள் அல்ல மக்கள்தான் என்று கேஜ்ரிவால் கூறினார்.

சுனந்தா உடலில் காயங்கள் ! சசிதரூரிடம் இறுதிச்சடங்கு முடிந்ததும் விசாரணை !

டெல்லியில்  நேற்று  உயிரிழந்த சுனந்தா புஷ்கருக்கு உடல்கூரைவு முடிந்தது.  ஆய்வில் விஷம் ஏதும் உட்கொண்டு சுனந்தா இறந்ததற்கான  ஆதாரம் இல்லை என தகவல் தெரிவித்துள்ளது. இயற்கைக்கு எதிரான திடீர் உயிரிழப்பு என கண்டரியப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதிகாரப்பூர்வ ஆய்வு அறிக்கை 2 அல்லது  3 நாளில் வெளியிட மருத்துவர் குழு முடிவு செய்துள்ளனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுனந்தாவுக்கு உடற் கூரைய்வு  நடைபெற்றது.சுனந்தா உடலில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிந்ததை அடுத்து சுனந்தா உடலை அவரது கணவர் சசிதரூர் பெற்றுக்கொண்டார். இன்று மாலை 4 மணிக்கு  சுனந்தா புஷ்கர் இறுதிச்சடங்கிற்க்கு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் சுனந்தா உடலில்  கண்டறிந்த காயங்கள் வைத்து இயற்கைக்கு மாறான  திடீர் மரணமாக இருக்கலாம்  என  மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  மேலும் மரணத்துக்கான  காரணத்தை  கண்டு அறிய அவரது உடலை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினர். இறுதிச்சடங்கு முடிந்ததும் சசிதரூரிடம்  விசாரணை நடத்தப்படும் என  டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிக்விகின்றன மற்றும் சுனந்தா தங்கிருந்த ஹோட்டலில் கண்காணிப்பு கேமராவில் பிடிக்கப்பட்ட காட்சியை போலிஸார் எடுத்து சென்றனர்.dinakaran.com 

எல்லா கிரிமினல் வேலைகளையும் அரங்கேற்றும் போலீசு அதிகாரிகள்,

சி.பி.ஐ. எஸ்.பி. தியாகராசன்
பேரறிவாளனின் வாக்குமூலத்தை உள்நோக்கத்தோடு வெட்டிச் சுருக்கியதை ஒப்புக் கொண்டுள்ள ஓய்வு பெற்ற சி.பி.ஐ. எஸ்.பி. தியாகராசன்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனது “வாக்குமூலம்” பொய் என்று அந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்த மையப் புலனாய்வுத் துறையின்(சி.பி.ஐ.) ஓய்வு பெற்ற எஸ்.பி. தியாகராசன், “உயிர்வலி” என்ற ஆவணப் படத்திலும் பின்னர் பல பேட்டிகளிலும் கூறியிருக்கிறார்.
போலீசு மற்றும் நீதிமன்ற மோசடிகளால் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டுள்ள பேரறிவாளன்.
“சிவராசனுக்கு பாட்டரிகள் வாங்கித் தந்தேன். ஆனால் அந்த பாட்டரிகளை எதற்காக வாங்கி வரச் சோன்னார் என்று எனக்குத் தெரியாது” என பேரறிவாளன் தனது வாக்குமூலத்தில் கூறியதாகவும், அதை அப்படியே பதிவு செய்தால், வழக்கிற்குப் பாதகமாகப் போவிடும் என்பதால், “எதற்காக வாங்கி வரச் சோன்னார் என்று தெரியாது” என்ற பகுதியை நீக்கி விட்டு, பாட்டரி வாங்கித் தந்தேன்” என்பதை மட்டும் பதிவு செய்ததாகவும் அவர் கூறுகிறார். தனது இந்த “அறங்கொன்ற” செயல், பேரறிவாளனின் உயிரைப் பறிக்கப் போகிறது என்பதால், மனச்சான்றின் உறுத்தலால் தற்போது உண்மையை வெளியிடுவதாகவும் சொல்லியிருக்கிறார் தியாகராசன்.

இத்தாலி கன்னியாஸ்திரி ஆண் குழந்தையை பிரசவித்தார் ! எப்படி கர்ப்பம் வந்தது என்று தெரியாதாம்

nun
A Salvadorean nun who said she had no idea she was pregnant gave birth in Italy this week after she felt stomach cramps in her convent and was rushed to hospital, Italian media reported on Friday.
The 31-year-old mother and her baby boy, who weighs 3.5 kilogrammes (nine pounds), are doing well and other new mothers in Rieti hospital have begun collecting clothes and donations for herஇத்தாலியின் சல்வடோரைச் சேர்ந்த 31 வயதான கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த புதன்கிழமை 3.5 கிலோ எடையுள்ள ஆண் குழந்தையொன்றை ரெய்ட்டி நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் பிரசவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் தற்போது குழந்தையும் தாயும் நலமாக உள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த கன்னியாஸ்திரி தான் கர்ப்பமடைந்ததை அறிந்திருக்கவில்லை எனவும் வயிற்றுவலி ஏற்பட்டதால் வைத்தியசாலைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனை விட தற்போது பிறந்துள்ள தனது குழந்தைக்கு இத்தாலியில் மிகப் பிரபலமான பெயர்களில் ஒன்றான புனித பிரான்சிஸ் அடிகளாரின் நினைவாக அவரது பெயரான பிரான்சிஸ் என்ற பெயரை குழந்தைகளுக்கு சூட்டியதாக தெரிவித்துள்ளார். இதே வேளை மேற்படி கன்னியாஸ்திரி, இத்தாலியின் ரெய்ட்டி நகரில் வயோதிபர் இல்லமொன்றை பராமரித்துவரும் கன்னியாஸ்திரிகள் சபையொன்றை சேர்ந்தவராவாராவார் என்பதுடன் அவர் குழந்தையொன்றை பிரசவித்தமை குறித்து தாம் பெரும் வியப்படைந்துள்ளதாக அவரின் சக கன்னியாஸ்திரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆம் ஆத்மி விஜயகாந்துடன் கூட்டணியா ? சந்தனம் சேறாகுமா ?

சென்னை: லோக்சபா தேர்தலில் புதிய திருப்பமாக தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்படுகிறது. உளுந்தூர்பேட்டையில் பிப்ரவரி 2-ந் தேதி தேமுதிகவின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில்தான் யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பை வெளியிடப் போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்திருக்கிறார். கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்கையில், என் மனதுக்குள் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்.. யாரும் எதிர்பார்க்காத வியூகம் அது.. என்று பூடகமாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசி வருகிறார். இந்நிலையில் தேமுதிகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று திமுக அறிவித்த கையோடு ராஜ்யசபா தேர்தலில் வேட்பாளரையும் நிறுத்தியுள்ளது.

சசி தரூருக்கு மாரடைப்பு ! குணப்படுத்த முடியாத நோயால் சுனந்தா அவதி ?

புதுடெல்லி: மனைவி சுனந்தா புஷ்கரின் மர்ம மரணத்தை தொடர்ந்து நெஞ்சு வலி காரணமாக மத்திய அமைச்சர் சசிதரூர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சசிதரூருக்கு சிறிய அளவிலான மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி நட்சத்திர விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த விவகாரம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல் மாசிஸ்திரேட் உத்தரவுக்கு பிறகு இன்று கூறாய்வு செய்யப்படும். அதன் பிறகே மரணத்திற்கான காரணம் தெளிவாகும் என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. சுனந்தாவின் மரணத்தை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் சசிதரூரின் அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுனந்தாவின் மரணம் குறித்து மத்திய அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் தலைவரும், முன்னாள் கேரள கல்வி அமைச்சருமான எம்.ஏ. பேபி திருவனந்தபுரத்தில் வலியுறுத்தியுள்ளார்.

டைரக்டர் கவுதம் மேனன் மீது வழக்கு:! மோசடி செய்தல், ஏமாற்றுதல், 406, 417, 419, 426 ஆகிய பிரிவுகளின் கீழ்

விண்ணை தாண்டி வருவாயா’ என்ற திரைப்படத்தை கவுதம் மேனன் டைரக்டு செய்திருந்தார். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெயராமன். தமிழில் வெளிவந்த இந்த படத்தை இந்தியில் ‘‘டப்பிங்’’ செய்ய கவுதம்மேனன் முடிவு செய்தார். ‘‘ரேஷ்மா கட்டாலா’’ என்பவர் உதவியுடன் போட்டோ நிறுவனம் மூலம் டப்பிங் செய்யும் பணி நடந்தது. இந்த படத்தை இந்தியில் ‘டப்’ செய்ய வேண்டுமானால் தனக்கு ரூ.99 லட்சம் ‘ராயல்டி’ தர வேண்டும் என்று படத் தயாரிப்பாளர் ஜெயராமன் போலீசில் புகார் கொடுத்தும் ஏற்கவில்லை. இதையடுத்து சைதாப்பேட்டை கோர்ட்டின் உதவியை அவர் நாடினார். போலீசார் வழக்குபதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார். அதன்பேரில் மாஜிஸ்திரேட், போலீஸ் துணை கமிஷனர் நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையில் ஜெயராமன் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார். இதையடுத்து ஐகோர்ட்டு நீதிபதி போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கம்போடிய தேசியக் கொடியில் கோயிலின் உருவம்: ‘கம்போடியக் கலைக் கோயில்கள்’-7


அங்கோர்வாட்­டுக்கு வடக்கே 20 கிலோ­மீற்­ற­ருக்கு அப்பால் குலன் மலையின் (Kulen Mountain) கால­டியில் ராஜேந்­தி­ர­வர்மன் காலத்தில் கட்­டப்­பட்ட அழ­கான முக்­கி­ய­மான ஆல­ய­மாகும்.
இதன் இன்­றைய பெயர் Banteay Srei என்­றாலும் அதன் உண்­மை­யான பெயர் சமஸ்­கி­ரு­தத்தில் திரி­பு­வனேஸ்­வரா ஆலயம் (மூவு­லகக் கடவுள் ஆலயம்). ஆனால், இப்­பொ­ழுது வழங்­கப்­படும் Bantay Srei என்­ப­தற்கு ‘பெண்­களின் கோட்டை’ என்று சொல்­லப்­ப­டு­கி­றது. இது மன்­னரின் கோயி­லன்று. மன்னர் ராஜேந்­தி­ர­வர்­மனின் ஆலோ­சகர் யஜ்­ந­வ­ராஷா என்­பவர் கட்­டி­யது. இவர் ஐந்­தா­வது ஜெய­வர்­ம­னுக்கும் குரு­வாக இருந்­தவர்.
கெமர் கலையின் இரத்­தினம் என புகழப்­பட்ட இந்த அழ­கான கோயில் 1912இல்தான் வெளி உல­கிற்கு தெரி­ய­வந்­தது. இது மற்ை­றய கோயில்­க­ளை­விட சற்று வித்­தி­யா­ச­மாகத் தெரி­வ­தற்கு முக்­கிய காரணம் இளஞ்­சி­வப்பு நிறத்து மண்­ணா­லான  கற்­களால் கட்­டப்­பட்­டுள்­ள­மை­யே­யாகும். இந்த  நிறத்­தினால்   கோயிலில்  ஆங்­காங்கே செதுக்­கப்­பட்­டுள்ள சிலைகள் பளிச்­சி­டு­கின்­றன.

கெஜ்ரிவால் போலீசுடன் மோதல் ! டெல்லி மாநில அரசுக்கு போலீஸ் அதிகாரம் கேட்கிறார்

புதுடில்லி: கடமையை செய்ய தவறிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கதவறினால் போராட்டத்தில் ஈடுபட போவதாக புதுடில்லி முதல்வர் எச்சரித்துள்ளார்.உள்துறை அமைச்சருடன்சந்திப்பு:கடந்தசில தினங்களுக்குமுன்னர் டென்மார்க்நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை மர்ம கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இதனை தொடர்நது காவல் துறை மீது நடவடிக்கை எடு்க்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவை முதல்வர் கெஜ்ரிவால், அமைச்சர்க் ராக்கி பிர்லா, சோம்நாத் பார்தி, மணீஷ்சிசோடியா ஆகியோர் சந்தித்தனர். மாநில அரசிடம் ஒப்படைக்க கோரிக்கை:தலைநகர் புதுடில்லியில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்த மக்கள் மாநில அரசிடம் மட்டுமே கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே காவல்துறையை மாநில அரசின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும். தேவையெனில் மாநகராட்சி கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதி, மண்டலப்பாதுகாப்பு பகுதியையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளட்டும்.ஆட்சி அமைத்ததற்கு பின்னும் போராட்டமுன்னு போனா அன்றாட அரசு வேலைகளை யார் சாமி பார்த்துக்குவா???..வேண்டும்னா ரெண்டு அமைச்சர்களை முடிவு தெரியும் வரை உள்துறை அமைச்சக அலுவலகத்திலேயே உட்க்கார சொல்லுங்க...

தே.மு.தி.க., வந்தால் திருச்சி சிவா ராஜ்யசபா போட்டியில் இருந்து வாபஸ் பெற வாய்ப்பு உள்ளது

சென்னை: அடுத்த மாதம், 7ம்தேதி, ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இருந்து, ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அ.தி.மு.க.,வுக்கு, நான்கு; அ.தி.மு.க., ஆதரவில், கம்யூ., கட்சிக்கு ஒன்று உறுதியாக வாய்ப்பு உள்ளது. ஆறாவது 'சீட்'டை தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கீடு செய்ய, தி.மு.க., தலைமை தயாராக இருந்தது.லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்திய போது, ராஜ்யசபா 'சீட்' தருவதாக பேரம் பேசப்பட்டது. ஆனால், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் எந்த பதிலையும் தெரிவிக்காமல், மவுனம் காத்து வருகிறார். மேலும், சில நாள் பயணமாக, மலேசியாவுக்கும் சென்று விட்டார். இந்நிலையில், விஜயகாந்திற்கு, 'செக்' வைக்கும் வகையில், 'ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., சார்பில், திருச்சி சிவா போட்டியிடுகிறார்' என்ற அறிவிப்பை, கருணாநிதி நேற்று வெளியிட்டார். இதனால், தி.மு.க., தே.மு.தி.க., கூட்டணி மலருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க., வந்தால், திருச்சி சிவா,போட்டியில் இருந்து வாபஸ் பெற வாய்ப்பு உள்ளது. மீறி போட்டி என்று வந்து விட்டாலும் சிவா வெற்றி உறுதி.

வெள்ளி, 17 ஜனவரி, 2014

அம்பேத்கர் Film எல்லோராலும் சேர்த்து புறக்கணிக்கப்பட்டது ! இந்திய வரலாற்றை திருத்தி எழுதிய திரைப்படம்

 வே.மதிமாறன்
1544970_10201259014299488_92700046_n
கமர்சியல் படம், கலை படம், மிடில் சினிமா, ஜாதி உணர்வோடு படம் எடுக்கிறவர்கள், ஜாதி உணர்வற்ற நிலையிருந்து படம் எடுக்கிறவர்கள்; இவைகளை இவர்களின் படங்களை எல்லாம் ‘மயிர்’ பிளக்கும் விவாதங்களோடு ரசிக்கிறவர்கள், விமர்சிக்கிறவர்கள் எல்லோராலும் சேர்த்து புறக்கணிக்கப்பட்டது டாக்டர் அம்பேத்கர் படம்.
‘ச்சீ இது குப்பை..’ என்று எழுதுவதற்கு கூட பல முற்போக்காளர்கள் தயாராக இல்லை.

மாநிலங்களவைத் தேர்தலில் திருச்சி சிவா மீண்டும் போட்டி:

நாடு முழுவதும் உள்ள 16 மாநிலங்களில் 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியில் இருந்து 12-ம் தேதிக்குள் முடிவடைகிறது. தமிழகத்தில் ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன், டி.கே. ரங்கராஜன், பாலகங்கா, அமிர் அலி ஜின்னா மற்றும் வசந்தி ஸ்டான்லி ஆகிய எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதி முடிகிறது. காலியாகும் இந்த உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது.இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் திருச்சி சிவா மீண்டும் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்!புரியல்லியே  கணக்கு சரியாகிட்டதா என்ன ?

சோ: 1991-1996 அ.தி.மு.க. ஆட்சியின்போது ஊழல் நடந்தது ! .

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கை:
கேள்வி :- ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி பதிலளித்த சோ, “ஏற்கனவே 11 வழக்குகளில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார். அதுபோல இந்த வழக்கிலும் அவர் விடுவிக்கப்படுவார்” என்று சொல்லியிருக்கிறாரே?
கலைஞர் :- 14.1.2002 அன்று சென்னையில் ‘துக்ளக்’ ஆண்டு விழா நிகழ்ச்சியில், என் நண்பர் சோ ராமசாமி , ‘‘இப்போது டான்சி உட்பட ஐந்து வழக்குகளில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
 விடுதலை என்று தீர்ப்பு வந்து விட்டதாலேயே ஜெயலலிதா நிரபராதி என்று சொல்ல மாட்டேன். 1991-1996 ஆண்டுகளில் பதவி வகித்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஊழல் நடந்தது உண்மையே. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தொடர்ந்த வழக்குகளை பொய் வழக்கு என்றும் கூறமாட்டேன். அ.தி.மு.க. ஆட்சியில் அதிக அளவுக்கு ஊழல் நடந்தது என்பது மறுக்க முடியாது. அப்படி நான் குற்றம் சாட்டியதில் எந்த தவறும் இல்லை. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவ்வளவு தான்’’ என்று நண்பர் சோ  பேசியதை, இப்போது அவருக்கும், அவரது வாசகர்களுக்கும் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

சசி தரூரின் மனைவி சுனந்தா மர்ம மரணம்- டெல்லி ஹோட்டலில் உடல் கண்டுபிடிப்பு


A day after Twitter controversy, Union minister Shashi Tharoor's wife Sunanda Pushkar has been found dead in New Delhi's Leela Hotel, where she had moved due to construction work in her house.
Shashi Tharoor is currently at the hotel where he was called by the police. The police suspect Sunanda Pushkar may have committed suicide by hanging herself.
டெல்லி: மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். தி லீலா பேலஸ் ஹோட்டலின் 345-வது அறையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்கொலையாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். தனது மனைவியின் மரணம் குறித்து தரூர், போலீஸாருக்குத் தகவல் தெரிவித்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தனது கணவருக்கும், பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் மெஹர் தராருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக பரபரப்புப் புகார் கூறியிருந்தார்

லஞ்சம் பேரத்தின் வீடியோ ஆதாரம் மற்றும் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் பட்டியல் வெளியீடு


1. மாநகராட்சி கமிஷனர் விஜயலட்சுமி மற்றும் பாலசந்திரன் ரூ.36 லட்சம்.
2. வடிவேல், நகர பொறியாளர் ரூ.7 லட்சம்.
3. ஞானமணி, பாதாள திட்ட பொறியாளர் ரூ.6 லட்சம்.
4.முருகேசன், செயற்பொறியாளர் ரூ.6 லட்சம்.
5. பரமசிவம், உதவி செயற்பொறியாளர் ரூ.5.5 லட்சம்.
6. ரவி, உதவி செயற்பொறியாளர் ரூ.7 லட்சம்.
7.சுரேஷ் குமார், உதவி செயற்பொறியாளர் ரூ.6.5 லட்சம்.
8. ரவிசந்திரன், உதவி பொறியாளர் ரூ.5.5 லட்சம்
9. நடேசன், உதவி பொறியாளர் ரூ.2.5 லட்சம்
10. ராஜேந்திரன், உதவி பொறியாளர் ரூ.5.5 லட்சம்

ஈரோடு மாநகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம், 2008-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 2010-ல் வேலை துவக்கப்பட்டது. ஜெர்மன் வங்கி, 60%மும், தமிழக அரசு மானியம், 20%மும், பொது மக்கள் தொகை- 20%வீதம் பங்களிப்புடன் இத்திட்டத்துக்கு, 209.22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.2015-ம் ஆண்டில் பணிகள் நிறைவு செய்யும் வகையில், இப்பணி ஐந்து தொகுதிகளாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. முதல் தொகுப்பில், ஈரோடு, வீரப்பன்சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி பகுதியும், இரண்டாம் தொகுப்பில், ஈரோடு, வீரப்பன்சத்திரம் எஞ்சிய பகுதிகள் இணைக்கப்பட்டன.

மதுரையில் திடீரென என்ட்ரி ஆன அழகிரி.. கைவிட மாட்டேன் '!


மதுரையில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் கூட அழகிரிக்குச் சொந்தமான கல்யாண மஹாலில் ஆலோசனை நடத்தினர். அந்தக் கூட்டத்திற்கு சொல்லாமல் கொள்ளாமல் வந்தார் அழகிரி. என்னை நம்பியவர்களை நான் கைவிட மாட்டேன், கவலைப்படாதீங்க என்று கூறி அவர்களுக்கு ஆறுதல் சொல்லிச் சென்றார். மதுரையில், சமீபத்தில் பி.எம். மன்னன், முபாரக் மந்திரி, எழில்மாறன், அன்பரசு, பாலாஜி ஆகிய மு.க.அழகிரி ஆதரவு திமுக நிர்வாகிகள் கட்சிக் கட்டுப்பாட்டுக்கு விரோதமாக செயல்பட்ட காரணத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில், அழகிரிக்குச் சொந்தமான மதுரை தயா மஹாலில் அவரது ஆதரவாளர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது கூட்டத்தில் பேசிய முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் தர்மலிங்கம் பேசுகையில், நாம் எந்த சூழ்நிலையிலும் அழகிரிக்கு விசுவாசமாக இருக்கவேண்டும். இடையில் சிறு பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளத்தை மேடாக்கி, நம்மை அழகிரி காப்பாற்றுவார் என்றார். தயா மஹாலில் ஒரு கூட்டம்.. திடீரென என்ட்ரி ஆன அழகிரி.. கைவிட மாட்டேன் என்று 'மெசேஜ்'!

புரட்சி நடிகை நயன்தாரா பிரபு தேவாவுடனும் நடிப்பார்

சென்னை:மாஜி 1 லவ்வர் சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கும் நயன்தாரா, விரைவில் மாஜி 2 லவ்வர் பிரபுதேவா இயக்கத்திலும் நடிப்பார் என்று பரபரப்பு எழுந்துள்ளது. பிரபுதேவாவுடன் காதல் மலர்ந்த பிறகு நடிக்காமல் ஒதுக்கிய நயன்தாரா. அவரது பிரிவுக்கு பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார். தமிழ், தெலுங்கு என மளமளவென படங்களை ஒப்புக்கொண்டு நடித்தார். படங்களும் ஹிட் ஆனதால் கைநிறைய படங்களை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் மாஜி 1 காதலன் சிம்புவுடன் நடிக்க அழைப்பு வந்தது. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் நயன்தாரா நடிப்பாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சிம்வுடன் நடிக்க ஒப்புக்கொண்ட நயன்தாரா கோலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இருவரும் நடித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.
இதற்கிடையில் இந்தியில் வெளியான ‘கஹானி தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா நடித்துள்ளார். விரைவில் அப்படம் திரைக்கு வரவுள்ளது. இதுதவிர உதயநிதியுடன் ‘இது கதிர்வேலன் காதல்‘ என்ற படத்திலும், ஜெயம் ரவியுடன் ஜெயம் ராஜா இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இப்படங்களை முடித்து கொடுத்தபிறகு  இனி தமிழில் வருடத்துக்கு ஒரு படம் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறாராம். திடீரென்று நயன்தாரா இப்படி முடிவெடுக்க காரணம் அவரது கவனம் இந்தி பக்கம் திரும்பி இருப்பதுதானாம். ஏற்கனவே சிம்பு மீதான கோபம் நீங்கி அவரது ஜோடியாக நயன்தாரா நடித்துவரும் நிலையில் இந்தியில் பிஸியாக இருக்கும் மாஜி 2 காதலன் பிரபுதேவா இயக்கும் படத்திலும் நயன்தாரா நடிக்கக்கூடும் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.புரட்சி நடிகை நயன்தாரா பிரபு தேவாவுடனும் நடிக்க பொகிராரர் 

விதிகளை மீறி TATA, AMBANI கம்பெனிகளுக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு அம்பலம்


புதுடெல்லி,
விதிகளை மீறி பரிந்துரை செய்யப்படாத டாடா, அம்பானி கம்பெனிகளுக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டது அம்பலத்துக்கு வந்துள்ளது. இதுபோன்ற 11 கம்பெனிகளின் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
ஒதுக்கீடு ரத்துக்காக வழக்கு
நிலக்கரி சுரங்கங்களை விதிகளை மீறி பல்வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கியதில் மத்திய அரசு கஜானாவுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே முறைகேடாக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளை ரத்து செய்யுமாறு கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோமாளித்தனமே பிரபலமாவதற்கான மந்திரம். அறிவாளிகளை போல் நடிப்பதே இலக்கியவாதிகளுக்கான பாத்திரம்.சுப்பிரமணிய சுவாமியும் ‘நவீன’ இலக்கிய சு. சுவாமிகளும்

??????????????????????சுப்பிரமணியன் சுவாமி தனி கட்சி நடத்தியபோது அவரும் அவருடன் அவரும் மட்டும்தான் கட்சியில் இருந்தார்கள்.
இன்றைக்கும் அவர் பி.ஜே.பியில் இருக்கும்போதும் அதுவே நிலைமை.
ஆனால் பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் அவரை மாபெரும் மக்கள் தலைவராக சித்தரித்து அவர் செய்திகளை லட்சக்கணக்கான மக்கள் படிப்பதைப்போன்ற பாவனையில் முக்கி முக்கிப் பேசுகிற அவர் தமிழுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.
அதுபோலவே 200, 300 அதிகபட்சம் 500 பிரதிகளை மட்டுமே அச்சடித்து அதை 500 வருடமாக பரணில் பத்திரமாக வைத்திருக்க போகிற சு. சுவாமியைப் போலவே,
அதிகம் சம்ஸ்கிருதத்தோடு கொஞ்சமாக தமிழ் கலந்து எழுதுகிற ‘நவீன’ இலக்கியவாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிற இலக்கிய உலக சுப்பிரமணியன் சுவாமிகளுக்ளுக்கு,
பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், பதிப்பகங்கள் தருகிற முக்கியத்துவம் கோமாளித்தனமானதாக மட்டுமில்லை, தந்திரமானதாகவும் இருக்கிறது.
இந்த இலக்கிய கோமாளிகளை தூக்கி நிறுத்துவதின் மூலம் ஜாதி, மத எதிர்ப்பாளர்களான முற்போக்காளர்களை, சம்ஸ்கிருத எதிர்ப்பு தமிழ் இன உணர்வாளர்களைத் தவிர்ப்பதே இதன் தந்திரம்.

சசி தரூர் - பாக்., பெண் நிருபர் கள்ளக்காதல்? மூன்றாவது மனைவி தகவல்

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மத்திய அமைச்சர், சசி தரூர், 57, பாகிஸ்தானைச் சேர்ந்த, பெண் பத்திரிகையாளர் ஒருவருடன், கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக, அவர் மனைவி, சுனந்தா புஷ்கர், 'ட்விட்டர்' இணையதளத்தில், புகார் தெரிவித்துள்ளார். இதை மறுத்துள்ள சசி தரூர், ''என் ட்விட்டர் கணக்கை யாரோ, 'ஹாக்' செய்து, தவறான தகவல்களை பரப்பியுள்ளனர்,'' என, தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்: ஐக்கிய நாடுகள் சபையில், உயர் பதவியில் பணியாற்றி ஓய்வுபெற்ற சசி தரூர், கடந்த சில ஆண்டுகளாக, அரசியலில் ஈடுபட்டு, காங்கிரஸ் வேட்பாளராக, திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணையமைச்சராகவும் ஆகியுள்ளார். இவர், இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார். 2010ல், காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த, சுனந்தா புஷ்கர் என்ற பெண்ணை, திருமணம் செய்தார். அந்த திருமணத்தில், சசிக்கும், முதல் மனைவிக்கும் பிறந்த, 16, 18 வயது மகன்கள் பங்கேற்றனர். சமூக வலைதளங்களான, ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தி, தனக்கு நெருக்கமானவர்கள் மற்றும் நண்பர்களுடன், நிமிடத்திற்கு நிமிடம் தொடர்பில் இருக்கும் சசி தரூர், சில நேரங்களில், தேவையற்ற தகவல்களை தெரிவித்து, சிக்கல்களிலும் மாட்டிக் கொள்வதுண்டு.பெண் ஏஜெண்டுகள் நல்லமுறையில் பணி செய்வதாக பேச்சுண்டு. சேட்டன நம்பமுடியாது.ஐ பி காரங்க கவனமா இந்தாள தொடர்ந்து கவனியுங்கள். தேர்தல் நேரத்தில் இது வேற தலைவலி.

ராகுலை எதிர்ப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம் ! சல்மான் குர்ஷித் ஜால்ரா

பிந்திய செய்தி :
வரும் லோக்சபா தேர்தலில், பிரதமர் வேட்பாளராக ராகுல் நியமிக்கப்படவில்லை. மாறாக, அவர் பிரசாரத்தை வழிநடத்துவார் என, காங்., உயர்மட்ட ஆலோசனைக் குழுவில், நேற்று முடிவெடுக்கப்பட்டது.
புதுடில்லி : காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக கட்சியின் துணைத் தலைவர் ராகுலை ஏற்க மறுப்பவர்கள், கட்சியில் இருந்து வெளியேறலாம் என மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கர்ஜித் இவ்வாறு தெரிவித்துள்ளார். ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிக்கலாமா என்பது குறித்தும், லோக்சபா தேர்தல் குறித்தும் ஆலோசனை செய்வதற்காக காங்கிரசின் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் மூத்த தலைவர்கள் அனைவரும் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜோதிராதித்ய சிந்தியாவை தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ராகுலை புகழ்ந்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் யாருக்காவது ஏதேனும் பிரச்னை இருந்தால் அவர் தாராளமாக கட்சியை விட்டு வெளியேறலாம்;

இந்தியாவில் பாக்., வங்கிகள் விரைவில் திறக்கப்படும்

இஸ்லாமாபாத்: இரு நாடுகளிடையே வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் பாக்., வங்கிகள் இந்தியாவில் கிளைகளை திறக்க உள்ளது  இந்தியா-பாகிஸ்தான் இடையே உறவுகளை மேம்படுத்தும் விதமாக வர்த்தக ரீதியில் வஙகி கிளைகள் திறக்கப்படும் என கடந்த 2012-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்தியாவின் சார்பில் பாகிஸ்தானில் ஸ்டேட்வங்கி, பாங்க் ஆப் பரோடா வங்கிகளும் பாக்.,சார்பில் இந்தியாவில் தேசியவங்கி, யுனைடெட் வங்கிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவிற்கு வேண்டப்பட்ட நாடு என்ற அந்தஸ்த்தை வழங்க பாகிஸ்தான் தவறியதை அடுத்து வங்கிகிளைகள் திறப்பது குறித்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

வியாழன், 16 ஜனவரி, 2014

பிரதமர் வேட்பாளர்: ராகுலுக்கு காங்கிரசில் கடும் எதிர்ப்பு?

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க காங்கிரசில் கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளது. இதனால் ராகுலை பிரதமர் வேட்பாளராக எதிர்க்க விரும்பாதவர்கள் கட்சியை விட்டு வெளியே போகலாம் என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் 2014 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவக் கூடும் என்பதால் ராகுல் மீது பழிவிழுந்துவிடும் என்பதால் அவரது ஆதரவாளர்கள் ராகுலை பிரதமர் வேட்பாளராக்க கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். பிரதமர் வேட்பாளர்: ராகுலுக்கு காங்கிரசில் கடும் எதிர்ப்பு? அதே நேரத்தில் சில மூத்த தலைவர்கள், ராகுலை பிரதமர் வேட்பாளராக்க எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், ராகுலுடன் இணைந்து பணியாற்ற முடியாதவர்கள் காங்கிரஸை விட்டு வெளியே போகலாம் என்று கூறியிருக்கிறார்.
tamil.oneindia

டபேதார் முறை அப்பட்டமான மனித உரிமை மீறல்! ஆட்சியரின் ஷூவை சுமந்த உதவியாளர்

ஆட்சியரின் ஷூவை கையில் சுமந்து நிற்கும் உதவியாளர் ராஜகோபால்.ஆட்சியரின் ஷூவை கையில் சுமந்து நிற்கும் உதவியாளர் ராஜகோபால்ஆட்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் ஷூவை அவரது உதவியாளர் (டபேதார்) சுமந்து நின்ற சம்பவம் அரசு ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காடு ஊராட்சி மன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் மகளிர் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் ஏராளமான பெண்களும், மாவட்ட ஆட்சியர் சி. நடராசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
டபேதார் கையில்...
முன்னதாக காரிலிருந்து இறங்கிய ஆட்சியர் நடராசன், கூட்டம் நடைபெறும் இடம் அருகே கழட்டி வைத்த ஷூவை, டபேதார் ராஜகோபால் கையில் ஏந்தி நீண்டநேரம் (அரை மணிக்கும் மேல்) நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு நான்கு "சீட்' உறுதி:


 சட்டசபையில், தற்போது கட்சிகளுக்கு உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு, நான்கு, "சீட்'களும், மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், தலா ஒரு சீட்டும் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., சேர்ந்தால், அந்தக் கட்சிக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவியை, விட்டுக் கொடுக்க, தி.மு.க., தரப்பு தயாராக உள்ளது.

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது, ராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ள, ஆறு பேரின் பதவிக் காலம், ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. அதனால், அடுத்த மாதம், 7ம் தேதி, புதிய எம்.பி.,க்களை தேர்வு செய்ய, தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபையில், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியையும் சேர்த்து, அ.தி.மு.க., கூட்டணிக்கு, 150 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஒரு வெத்து பதவிக்கு இம்புட்டு கூட்டல் கழித்தல் கணக்கா ?

கேஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பின்னி தாக்கு


வினோத் குமார் பின்னி
வினோத் குமார் பின்னி
தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் மக்களை தமது கட்சி ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. வினோத் குமார் பின்னி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை 'ஒரு சர்வாதிகாரி' என்று தாக்கிப் பேசியுள்ளார்.
மேலும், ஜனவரி 27-ம் தேதிக்குள் ஆம் ஆத்மி அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், தாம் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.
டெல்லியின் லக்ஷ்மி நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் ஏ.கே.வாலியை எதிர்த்து வென்றவர், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த வினோத் குமார் பின்னி.
கடந்த 2009 முதல் காங்கிரஸின் தீவிர தொண்டராக இருந்த இவர், 2011-ம் ஆண்டு அண்ணா ஹசாரே லோக்பால் போராட்டம் தொடங்கியபோது அவருடன் இணைந்தார். பிறகு கேஜ்ரிவாலுடன் சேர்ந்தார்.

காணும் பொங்கல் : தமிழகம் முழுவதும் குவியும் மக்கள் கூட்டம்


தமிழகம் முழுவதும் காணும்பொங்கலையொட்டி மக்கள் பொழுது போக்கிற்காக அந்தந்த பகுதியில் உள்ள பொழுதுபோக்கு இடங்களில் குவிந்து உள்ளனர்.சென்னை அதனை சுற்றி உள்ள மக்கள் சென்னை மெரினா கடற்கரை, பெசட்ட் நகர் பீச், கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களில் குவிந்து உள்ளனர். இதுபோல் மகாபலி புரம் முட்டுக்காடு,கடற்கரைபகுதிகளிலும் பழவேற்காடு, பகுதிகளிலும் ,மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து உள்ளனர்.
இதுபோல் காணும் பொங்கலையொட்டி சேலம் கிருஷ்ண்கிரி, தர்மபுரி மாவட்ட மக்கள்  ஒகேனக்கல்லில் இன்று அதிகாலை முதலே குவியத்தொடங்கினர் அவர்கள் காவிரி ஆற்றில் நீராடி, அங்கு விற்கும் மீன்களை வாங்கி சாப்பிட்டனர். மேலும் அருவியில் குளித்தும், காவிரி ஆற்றில் பரிசல் சவாரி சென்றும் ரசித்தனர்.
இதே போல் மேட்டூர் அணையிலும் கூட்டம் அலைமோதியது.இங்குள்ள முனியப்பன் கோவில், பூங்கா ஆகிய இடங் களுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இது போல் ஏற்காட்டிலும் அங்கு ள்ள பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

முருகதாஸ் : சினிமாவில் நன்றியுணர்வு குறைந்து விட்டது ! சுத்தி வளைக்காமல் உண்மையை சொல்லுங்க சூர்யாவா?

ரிச்சர்ட், பார்த்தி, ஐஸ்வர்யா நடித்து, ஜெயப்ரதீப் டைரக்டு செய்து, எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் வெளியிடும் படம் ‘நேர் எதிர்.’ இந்த படத்தின் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. ஒரு படத்துக்கு தலைப்பு அமைவது, மிகவும் சிரமம். ‘நேர் எதிர்’ என்ற தலைப்பு அனைத்து தரப்பினரையும் கவர்கிற தலைப்பு. இது, எனக்கு தோன்றாமல் போய்விட்டது. நான் அடுத்து விஜய் படத்தை இயக்கப் போகிறேன். கதை எல்லாம் தயாராகி விட்டது. படப்பிடிப்புக்கு போகப்போகிறோம். ஆனால், தலைப்பு முடிவாகவில்லை. நான் இயக்கிய ‘துப்பாக்கி’ படத்தில் முதல் தோட்டா தயாரிப்பாளர் தாணு. தயாரிப்பாளர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று அம்மா மாதிரி. இன்னொன்ரு அப்பா மாதிரி. அம்மா மாதிரி உள்ளவர்கள் பிள்ளையை வயிற்றில் சுமப்பதில் இருந்து கடைசி வரை அதைப்பார்த்துக் கொள்கிற மாதிரி, படம் உருவாகிறபோது உடன்யிருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார்கள்.

டெல்லியில் மீண்டும் வெளிநாட்டுப்பெண் பாலியல் பலாத்காரம்



A Danish woman has alleged that she was gang-raped in the Indian capital of New Delhi - the latest high-profile case of sexual assault against women in the country.
Reports say the 51-year-old woman was in New Delhi for a week and had been visiting touristy sites in Agra and later the National Museum in the capital.
புதுடெல்லி : டெல்லியில் டென்மார்க் நாட்டை சேர்ந்த பெண் 8 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த  விவரம் வருமாறு: டென்மார்க் நாட்டை சேர்ந்த 51 வயது பெண் ஒருவர் கடந்த வாரம் சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்தார். செவ்வாய்கிழமை மாலையில் டெல்லி தேசிய அருங்காட்சியகத்தை பார்த்து விட்டு ஓட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சில கிலோ மீட்டர் தூரம் சென்றபிறகுதான், பாதை மாறி வந்தது தெரிந்தது.பாஹர்கஞ்ச் ரயில்நிலையம் அருகில் நின்றுகொண்டிருந்த நாடோடி கூட்டத்திடம், ஓட்டல் அமேக்சிற்கு எப்படி செல்ல  வேண்டும் என்று வழி கேட்டார். அந்தப் பெண் தனியாக வந்ததை தெரிந்து கொண்ட எட்டுபேர் கொண்ட கும்பல், அந்தப் பெண்ணை அடித்து உதைத்து, ஒதுக்குபுறமாக தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது. அவரிடம் இருந்த பணம், செல்போனை பறித்துக்கொண்டு சென்றுவிட்டது.

சோவின் வயிதெரிச்சல் கண்டு பிடிப்பு : ஆம் ஆத்மி கட்சியால் எந்த பயனும் இல்லை !

''பா.ஜ.,வை வெற்றி பெறச்செய்து, மோடியை பிரதமராக்குவது முதல் குறிக்கோள். ஒருவேளை, இதற்கு வாய்ப்பில்லை எனில், ஜெயலலிதா பிரதமராக, பா.ஜ., ஆதரவு அளிக்க வேண்டும்,'' என, 'துக்ளக்' வார இதழின் ஆசிரியர், சோ ராமசாமி கூறினார்.
'துக்ளக்' வார இதழின், 44ம் ஆண்டு விழா, சென்னையில் நடந்தது. இதில், சோ பேசியதாவது:'ஊழல் என்பது ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமல்ல' என, அரசியல் கட்சிகள் கூறுகின்றன. அதை ஏற்றுக் கொண்டாலும், ஊழலில், பா.ஜ., முதல் வகுப்பு மாணவனாக உள்ளது. காங்கிரஸ் - தி.மு.க., உட்பட, பல கட்சிகள், ஊழலில், பிஎச்.டி., பட்டம் பெற்றுள்ளன  
எந்த பயனுமில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலின், 'ஆம் ஆத்மி' கட்சி, டில்லியில், 28 சதவீத ஓட்டுகளைபெற்றுள்ளது. அக்கட்சிக்கு எதிராக, 72சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.ஆம் ஆத்மி, ஓட்டுகளை பிரிக்கும்கட்சியாகவே இருக்கும்; அதனால், எந்தப் பயனும் இல்லை. புதிய தலைமை செயலகத்தை வாஸ்துக்காக மாற்றியது, அரசு விசயங்களில் கண்டவர்களையும் தலையிட விட்டது, சசிகலா கூட்ட ஆதிக்கம், மற்றும் TANSI நிலா பேரம் போன்ற விசயங்களில் இருந்தே அம்மா எந்தவித சந்தேகமும் இல்லாமல் வீணாய்போனவர் என்பதை ஒரு அரசியல் விமர்சகரால் சொல்ல முடியவில்லை என்றால் அவரும் கூட வீணாய் போய் விட்டார் என்று அர்த்தம்

ராஜ்யசபா - எம்.பி.,யாகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்?

சமீபத்தில், விஜயகாந்தின் தே.மு.தி.க.,விலிருந்து விலகிய, பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு, அண்ணா விருது அறிவித்து, தமிழக அரசு கவுரவித்துள்ளது. அடுத்த கட்டமாக அவர், அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி., ஆக்கப்படுவார் என, செய்திகள் கசிந்துள்ளன.

விஜயகாந்த் கட்சியில், தனக்குரிய முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக கருதிய, பண்ருட்டி ராமச்சந்திரன், முதலில், தே.மு.தி.க., செயற்குழு கூட்டத்தை புறக்கணித்தார். அப்போது, விஜய காந்த் நேரடியாக தலையிட்டு, சமாதானம் செய்ததால், தாமதமாக கூட்டத்துக்கு வந்தார்.

லோக்சபா தேர்தல் கருத்து கணிப்பு ! நக்கீரன் சர்வே ! தி.மு.கவும் அ.தி.மு.கவும் சமபலத்துடன் ?


சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் கருத்து கணிப்புகளும் வரிசைகட்டி வெளியாகி கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் தேர்தல் களத்தில் அதிமுகவும், திமுகவும் சம பலத்துடன் மோதுவதாக நக்கீரன் வாரம் இருமுறை கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நக்கீரன் வாரம் இருமுறை இதழ் ஒவ்வொரு எம்.பி. தொகுதியிலும் 6 ஆயிரம் பேரிடம் கருத்து கணிப்பு நடத்தியது. தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 40 ஆயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட இந்த கருத்து கணிப்பு முடிவுகளையும் கடந்த 6 மாத கால அரசியல் நிலவரங்கள் அடிப்படையில் "நக்கீரனின் மெகா சர்வே" விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மொத்தம் 17 தொகுதிகள் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ளவை என்கிறது நக்கீரன் சர்வே
மதுரை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, ஆரணி, கள்ளக் குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், பெரம்பலூர், திருப்பூர் வடசென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர், தேனி, கன்னியாகுமரி, தர்மபுரி ஆகியவை அதிமுக வசமாகுமாம்
தேபோல் மொத்தம் 16 தொகுதிகள் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ளவையாம்.

புதன், 15 ஜனவரி, 2014

நிதான வாசிப்பு என்பது ஒரு சமூக நிகழ்வு ! புதிய கருத்தாக்கம் அல்ல.

இக்கட்டுரையை நீங்கள் அச்சில் படித்தால் நான் எழுதியதில் பாதியைத்தான் நீங்கள் படிப்பீர்கள். இணையத்தில் படிக்கும் வாய்ப்பு இருந்தால் ஐந்தில் ஒரு பகுதியைக்கூட முடித்திருக்க மாட்டீர்கள். அண்மையில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில் கட்டுரை களை முழுவதுமாகப் படிப்பதற்கான பொறுமை பெரும்பாலானோருக்கு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கல்வியாளர்களே ஈடுபாட்டோடு நூல்களைப் படிப்பதில்லை. மாணவர்கள் படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலைத் தான் சுருக்க வேண்டியிருந்ததாக விரிவுரையாளர் ஒருவர் கூறினார். இளைய ஆசிரியர்கள் முழுமையாகப் படிப்பதற்குப் பதிலாக தேடுபொறியை மட்டுமே வைத்து எளிதாக வேலையை முடித்துவிடுகிறார்கள்.
அப்படியென்றால் நாம் மேலும் முட்டாள்களாக ஆகிக்கொண்டிருக்கிறோமா? கிட்டத்தட்ட அப்படித்தான்.

சன் நியுஸ் தொலைக்காட்சியில் - விவாத மேடை நிகழ்ச்சியில் - கவிஞர் கலி. பூங்குன்றன்.


சென்னை: திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: சிதம்பரம் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்துள்ளது. திமுக ஆட்சியில், அந்த கோயில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதை எதிர்த்து, தீட்சிதர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். அதிலே அவர்கள் வெற்றி பெற முடியவில்லை. எம்.ஜி.ஆர் முதல்வராகவும், அறநிலையத் துறை அமைச்சராக ஆர்.எம்.வீரப்பனும் இருந்த போதே சிதம்பரம் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க 1987ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அப்போதே தீட்சிதர்கள் நீதிமன்றத்துக்கு சென்றார்கள்.

எதிர்கட்சி தலைவர் பதவியைஇப்போதே குறிவைக்கும் ராகுல்! பிரதமர் வேட்பாளராக தயாராம் !


புதுடெல்லி,
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டம் வருகிற ஜனவரி 17ந்தேதி கூடுகிறது.  இதில், பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்படுபவர் குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று கூறுகையில், தன்னிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதனை ஏற்கதான் தயார் என்று தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது நாட்டிற்கு நல்லது.  ஒரு பதவியை குறித்து கவனம் செலுத்தி அதன் மீது விவாதம் நடத்துவதை விடுத்து அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வருவது குறித்து விவாதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஒருவரது கருத்துகளை மட்டும் வைத்து நாட்டை வழிநடத்தி செல்ல இயலாது என்று அவர் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை தாக்கும் விதமாக பேசினார்.  நாட்டை ஒன்றுபடுத்தியது காங்கிரஸ்தான் என்றும் அவர் கூறியுள்ளார் dailythanthi.com

ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க 700க்கும் மேற்பட்ட வீரர்கள் 700 காளைகள் !பாலமேடு ஜல்லிக்கட்டு துவங்கியது..!

மதுரை பாலமேட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற  ஜல்லிகட்டு போட்டி துவங்கியது. பாலமேடு மஞ்சளாறுதிடலில் நடைபெற்று வரும் போட்டியில் 700 காளைகள் பங்குபெற்றுள்ளன. சீறிப்பாயும் காளைகளை அடக்க 700க்கும் மேற்பட்ட வீரர்கள்  களத்தில் இறங்கியுள்ளனர். முதல் முறையாக இந்த ஜல்லிகட்டு போட்டி ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மஞ்சளாறு திடலில் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். dinakaran.com

செருப்பு முதல் லேப்டாப் வரை கொடுத்தும் நம்பிக்கை இழக்கும் பெற்றோர்

இந்தியாவின் இதயம் கிராமங்களில் உள்ளது என்றார் காந்தி. தமிழகம் மட்டுமல்ல... நாட்டின் பல பகுதிகளிலும் கிராமங்களில் உள்ள திறமை மிகுந்த குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள்ளிகளையே நம்பி  உள்ளனர். கல்வித்துறை அளித்த கணக்குப்படி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் 92 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர் என்பது ஆறுதலான விஷயம். ஆனால் தனியார் பள்ளிகளை ஒப்பிடுகையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் ஆண்டு தோறும் குறைந்து வருவது தான் அதிர்ச்சியூட்டும் விஷயம்.
கடந்த 2009-10ம் ஆண்டில் அரசு ஆரம்ப பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 43.67 சதவீதம். அதே ஆண்டில் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கை விகிதம் 34.5 சதவீதம். ஆனால் கடந்தாண்டில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அரசு பள்ளி சேர்க்கை விகிதம் 36.58 சதவீதமாகவும், தனியார் பள்ளி சேர்க்கை விகிதம் 45.41 சதவீதமாகவும் உள்ளது.

ஜப்பான் மீது சர்வதேச நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும்: சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியின் சீனாவின் வளர்ச்சி குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் : சீனாவின் வளர்ச்சி உலகை மேலும் சிறப்புறச் செய்யும். ஜப்பானின் தலைவர்கள் அந்நாட்டை ஆபத்தான திசையில் கொண்டுச்செல்கின்றனர். எனவே சர்வதேச நாடுகள் ஜப்பான் மீது விழிப்புடன் இருந்து, மனிதகுல மனச்சாட்சியையும், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கையும் உறுதியாகப் பேணிகாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 14 ஜனவரி, 2014

மலை கிராமங்களில் 80 சதவீதம் குழந்தை திருமணங்கள் !விழிப்புணர்வு நோட்டீசுக்கு பதில் பள்ளிக்கூடத்தை திறங்கய்யா !

தமிழக மலை கிராமங்களில், 80 சதவீத திருமணம், குழந்தை திருமணங்களாக நடக்கும் அதிர்ச்சி தகவல், மலை கிராம குழந்தை தொழிலாளர் பள்ளி மாணவர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. "வாழ்விடத்திலேயே, பிளஸ் 2 வரை படிக்க வழி இல்லாதது, போதிய மருத்துவ வசதிகளை அரசு செய்து தராதது போன்றவை, இதற்கு முக்கிய காரணம்' என, ஆய்வின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு உள்ளது.
இளம் மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்ட, தேசிய அறிவியல் இயக்கம், மத்திய அரசின் உதவியோடு, 20 ஆண்டாக, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது. இதில், மாணவர்களின் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, "இளம் விஞ்ஞானி' விருது தரப்படும். இதன்படி, 21ம் ஆண்டு தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, மத்திய பிரதேசம், போபாலில், டிசம்பர் மாதம் நடந்தது. மாநில அளவில், மாணவர்களின் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. தமிழகத்தில், மாணவர்கள் சமர்பித்த, 210 கட்டுரைகளில், 30 கட்டுரைகள் தேசிய மாநாட்டிற்கு தேர்வாகியுள்ளன. தேசிய அளவில் இதுவரை இல்லாத வகையில், மலை கிராமத்தைச் சேர்ந்த, குழந்தை தொழிலாளர் பள்ளி மாணவர்கள் சமர்ப்பித்த, "குழந்தை திருமணங்களால் ஏற்படும் மனித ஆற்றல் இழப்பு' என்ற கட்டுரை இடம் பெற்றுள்ளது.

திமுக ,காங்கிரசுடன் பேசிக்கொண்டே பாஜகவுடன் கூட்டணி சேரும் விஜயகாந்த் ! நல்ல ரேட் கிடைக்கனும்லெ ! விநியோகஸ்தர்களிடம் பேசின அனுபவம்

விஜயகாந்தின் தே.மு.தி.க., கட்சியின் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில், பிப்., 2ம் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கருத்து கேட்கவுள்ளார்.
மாநாட்டிற்கு, 'ஊழல் ஒழிப்பு மாநாடு' என, பெயரிடப்பட்டு உள்ளது. மேலும், 'ஒன்றுபடுவோம்; ஊழலை ஒழிப்போம்' என்ற வாசகமும், ஒற்றை விரல் லச்சினையும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது : இதுதொடர்பாக, சென்னை கோயம்பேடு, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் இளைஞர் அணி செயலர், சுதீஷ் கூறியதாவது: அ.தி.மு.க., நல்லாட்சி தரும் என்று கருதியே, அக்கட்சியுடன், சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்தோம். அடடா உங்க படத்தில கூட இந்த மாதிரி ஒரு ஒரிஜினல் ஜோக் சொன்னதில்லையே ?

உலகிலேயே மிகப்பெரிய கோயில் அங்கோர்வாட்!! கம்போடிய கலைக்கோயில்கள்- (பகுதி-5/6)


மாத்தளைசோமு, அவுஸ்திரேலியா

விமா­னத்­தி­லி­ருந்து   இறங்கி விமான நிலை­யத்தைப் பார்த்தேன். சிறிய விமான நிலையம். ஆனால் கம்­போ­டிய மன்­னர்­களின் வர­லாற்றை நினைவு கூரும் வித­மாகக் கட்­டப்­பட்­டி­ருந்­தது. விமான நிலை­யத்­திற்குள் நுழையும் வாசலில் ஒரு கம்­போ­டிய இளம் பெண் பய­ணி­களை இரு கரம் குவித்து வர­வேற்றுக் கொண்­டி­ருந்தாள். அது எனக்கு ஆச்­ச­ரி­ய­மாக இருந்­தது. எத்­த­னையோ நாடு­களின் விமான நிலை­யத்­திற்குப் போயி­ருக்­கிறேன்.
அங்­கெல்லாம் இப்­படி ஒரு வர­வேற்பு  இல்லை. அவ­ளுக்குப் பதில் வணக்கம் செய்து விட்டு குடி­வ­ரவு அதி­கா­ரி­யிடம் 20 யு.எஸ். டொலர் கொடுத்து விசாவைப் பெற்­றுக்­கொண்டு நடந்த போது எதிர்ப்­பட கைத்­தொ­லை­பேசி விற்கும் கடை தெரிந்­தது. அந்தக் கடைக்குள் நுழைந்து புதிய ‘சிம்­கார்ட்டை’ வாங்­கினேன். சிம்மை விற்ற கம்­போ­டிய இளம் பெண் என் கைப்­பே­சியில் சிம்மைப் பொருத்தி கைப்­பே­சியை என்­னிடம் கொடுத்­து­விட்டு இரு­ கை ­கூப்பி வணக்கம் தெரி­வித்தாள்.
இது எனக்கு மட்­டு­மல்ல அந்தக் கடையில் வர்த்­தகம் செய்யும் எல்­லோ­ருக்கும் என்­பதைப் பார்த்தேன். மறு­ப­டியும் எனக்குள் ஆச்சரியம் செய்த உத­விக்கு நன்றி கூட சொல்லத் தயங்­கு­கிற இக்­கா­லத்தில் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு இப்படி ஒரு மரி­யா­தையா?

திங்கள், 13 ஜனவரி, 2014

திருப்பதி வைகுண்டம் கதவை உடைத்து வெளியேறிய பக்தர்கள் ! தரிசன அனுமதி தாமதம்

திருமலை: திருப்பதி கோயிலில் நீண்ட நேரமாக காத்திருந்தும் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்காததால், வைகுண்டம் மையத்தின் கதவுகளை உடைத்து பக்தர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பக்தர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிலர் காயம் அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருப்பதி கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி, துவாதசி என 2 நாட்கள் மட்டுமே சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை 1.30 மணிக்கு ஆகம முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி, சுவாமி தரிசனம் செய்ய யிரக்கணக்கான பக்தர்கள் கடந்த 3 நாட்களாக திருப்பதி கோயிலில் திரண்டிருந்தனர். வைகுண்ட ஏகாதசி அன்று தரிசனம் முடித்து 61 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வந்தனர்.

ஆம் ஆத்மி :வதேரா மீதான நிலபேர ஊழல் புகார் சுதந்திரமாக விசாரிக்கப்படவேண்டும்

சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேரா, தனது செல்வாக்கை பயன்படுத்தி அரியானா மாநிலத்தில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் ஆதரவுடன் குறைந்த விலைக்கு நிலங்கள் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. ராபர்ட் வதேரா, டி.எல்.எப். கட்டுமான நிறுவனத்திடம் இருந்து ரூ.65 கோடி வட்டியில்லாமல் கடன் வாங்கியதாகவும் சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். ஆனால், இந்த நிலபேர விவகாரத்தில் சில மாற்றங்களை செய்வதற்கு அப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த அஷோக் கெம்கா மறுத்தார். இதையடுத்து காங்கிரஸ் அரசு தனக்கு நெருக்கடி கொடுப்பதாக அஷோக் கெம்கா குற்றம் சாட்டினார். ஆனால், இதில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை என்று முதல்வர் ஹூடா அறிவித்தார்.

ஆம் ஆத்மிக்கு அஞ்சுகிறாரா நரேந்திர மோடி?,,,, ஆம்


மெட்ரோ ரயிலில் சென்று பதவியேற்றது, சொந்த வாகனத்தில் அலுவலகத்துக்குச் செல்வது, சொகுசு பங்களா, பாதுகாப்பு வேண்டாம் என புறக்கணித்தது, முதல்வராகும் முன்னரே மக்கள் தர்பார் நடத்தியது... டெல்லி தேர்தல் வெற்றிக்குப் பின் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் ஊடகங்களில் பிரவேசிக்காத நாட்கள் இல்லை.
தமிழக ஊடகங்களிலும் 'முதல்வன் பாணியில் ஒரு முதல்வர்' என்று அரவிந்த் கேஜ்ரிவால் முக்கியத்துவம் பெற்றுள்ளார். ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களிலும் முக்கிய விவாதப் பொருளாகி இருக்கிறார்.
பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பின்னர், இந்திய அரசியலில் ஒரு அலை ஏற்பட்டது. இது மோடி அலை என்று பாஜகவினரால் வருணிக்கப்பட்டது. இது ஒரு புறம் இருக்க, இந்த அலை ஏற்பட உபயமே ஊடகங்கள்தான் என காங்கிரஸ் கட்சியினரால் விமர்சிக்கவும்பட்டது.

பத்மப்ரியா மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம்

சென்னை:‘மிருகம்‘, ‘பட்டியல்‘, ‘சத்தம் போடாதே‘ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பத்மப்ரியா. கடந்த 2 ஆண்டாக நடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அவர் கூறியதாவது:நடிகை ஆக வேண்டும் என்பதற்கு முன் படிப்பில் சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். ஆனால் என்னை நடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். மனதில் ஒரு பக்கம் அந்த ஆசை இருந்ததால் நடிகையாகிவிட்டேன். என்னை தேடி வந்த வாய்ப்புகளை மட்டுமே ஏற்று நடித்தேன். யாரிடமும் போய் நான் சான்ஸ் கேட்டதில்லை.
நடிகையாக பயணித்துக்கொண்டிருந்தாலும் படிப்பின் மீதான ஆர்வம் குறையவில்லை. ஒரு கட்டத்தில் நடிப்புக்கு விடுமுறைவிட்டு படிப்பில் முழுகவனம் செலுத்த தொடங்கினேன். 2 வருடத்துக்கு முன் அமெரிக்கா சென்று அங்கு படிப்பை தொடர்ந்தேன். காலை 5.30 மணிக்கு எழுந்து யோகா செய்யத் தொடங்கி பிறகு கல்லூரி, லைப்ரரி என்று என்னுடைய நேரம் கழிந்தது. படிப்பும் முடிந்துவிட்டது. மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்பதைவிட அழுத்தமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். வழக்கமாகவே நல்ல வேடங்கள் கிடைப்பதற்காக ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் நிறைய இடைவெளி விட்டு
விடுவேன். - tamilmurasu.org

ஏற்காடு இடைத்தேர்தலில் ஆணையர் பிரவீன் குமாரும் ஜெயா கும்பலின் அராஜக ஆட்டங்களுக்குப் பக்கமேளம் !

டந்த டிசம்பர் 4-ஆம் தேதியன்று நடந்த ஏற்காடு தொகுதிக்கான இடைத்தேர்தலில் எதிர்பார்த்தபடியே ஆளும் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. பணத்தால் அடிப்பது, எதையும் விலை பேசுவது, எதிரியின் நிழலுக்கும் எலும்புத் துண்டை வீசுவது என்று தேர்தல் ஆணையக அதிகாரிகள் முன்னிலையிலேயே பாசிச ஜெயா பகிரங்கமாக ஏலத்தில் எடுத்து இந்த வெற்றியைச் சாதித்துள்ளார்.
ஏற்காடு தேர்தல்
பாசிச ஜெயா கும்பலின் பணநாயகத்துக்குப் பக்கமேளம்: அ.தி.மு.க.வினர் ஏற்காடு தொகுதியின் கிராமங்களில் பணத்தை வாரியிறைத்து வாக்காளர்களை விலைபேணிக் கொண்டிருந்த போது, தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனை என்ற பெயரில் பொதுமக்களிடம் பணத்தைப் பறிமுதல் செய்து சூரத்தனம் காட்டும் தேர்தல் ஆணையம்.
வாக்கு வித்தியாசத்தை முன்னைக்காட்டிலும் அதிகப்படுத்தி தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்வது, இதை முன்னுதாரணமாகக் காட்டி 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்றுவது என்பதே அவரது நோக்கமாக இருந்தது.

கோவா முதல்வரை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவிக்க வேண்டும்: ஆம் ஆத்மி


பனாஜி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பதிலாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி அறிவிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. கோவா முதல்வரை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவிக்க வேண்டும்: ஆம் ஆத்மி கோவா மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கோவா முதல்வர் பாரிக்கரின் எளிமையை நரேந்திர மொடி புகழ்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து இன்று கருத்து தெரிவித்துள்ள கோவா மாநில ஆம் ஆத்மியின் செய்தி தொடர்பாளர் தினேஷ் வகேலா, பாரதிய ஜனதாவுக்கு துணிச்சல் இருந்தால்.. எளிமை மீது நம்பிக்கை இருந்தால்.. மோடிக்கு பதிலாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கட்டுமே என்று கூறியுள்ளார்.
tamil.oneindia.in

அன்னிய செலாவணி மோசடி: கனிமொழி மீது குற்றப்பத்திரிகை- சொலிசிட்டர் ஜெனரல் திடீர் பரிந்துரை


டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரண் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் ரூ200 கோடியை கலைஞர் டிவி பெற்றது என்ற குற்றச்சாட்டில் அதன் பங்குதாரராக இருந்த கனிமொழி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து அவர் விடுதலையானார். அன்னிய செலாவணி மோசடி: கனிமொழி மீது குற்றப்பத்திரிகை- சொலிசிட்டர் ஜெனரல் திடீர் பரிந்துரை இது தொடர்பான வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  தந்தை பெரியாருக்கு பின்பு கனிமொழியை கண்டுதான் அவர்கள் அதிகம் பயபடுகிறார்கள்  என்பது தெளிவாக தெரிகிறது இதுதான் உண்மை !

ஏரியல் ஷரோன் -ஷப்ரா, ஷாடிலா பாலஸ்தீனியர்களை மொத்தமாகக் கொன்று குவித்தவர்!

அரசியல் தலைவர்களுக்குத் தொண்டர்கள் இருப்பது சாதாரணம். ரசிகர்கள் மிக்க தலைவர்கள் அரிது. நம்மூரில் எம்.ஜி.ஆருக்குத் தொண்டர்கள் அதிகமா? ரசிகர்கள் அதிகமா? ஆனால் ஏரியல் ஷரோன் சினிமாவில் இருந்து வந்தவரல்லர். அவர் மிலிட்டரிக்காரர். 1948ம் வருஷம் இஸ்ரேல் என்ற தேசம் உதயமானது முதல் இஸ்ரேலிய ராணுவத்தில் பணியாற்றியவர். 1974ம் வருடம் ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்று அரசியலுக்குள் நுழைந்து 81ம் வருடம் ராணுவ அமைச்சரானபோதே அவருக்கு இந்த ரசிகர் படை உண்டு. அவர் பிரதமராகிப் புகழ்பெறவில்லை. புகழோடு அந்தப் பதவிக்கு வந்தவர்.
கடந்த எட்டாண்டுக் காலமாக உடல் நலக் குறைவுடன் இருந்த ஏரியல் ஷரோன் கடந்த சனிக்கிழமை காலமானபோது உலகெங்கும் உள்ள யூதர்கள் ஒருத்தர் விடாமல் கண்ணீர் சிந்தினார்கள்.

திமுக 25, தேமுதிக 8 + ராஜ்யசபா, காங்கிரஸ் 7 தொகுதிகள் ஒதுக்கீடு?


திமுக 25, தேமுதிக 8 ப்ளஸ் ராஜ்யசபா, காங்கிரஸ் 7 தொகுதிகள் ஒதுக்கீடு?சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக 25 தொகுதிகள், தேமுதிக 8 , காங்கிரஸ் 7 தொகுதிகளில் போட்டியிடுவது என்ற உடன்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று தி.மு.க. பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து விஜயகாந்தின் தே.மு.தி.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் நடை பெற்றன.


பின்னர் அழகிரியின் எதிர்ப்பால் தேமுதிக பிரேக் போட்டது. இந்நிலையில் திடீரென மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், கருணாநிதியை சந்தித்து பேச களநிலைமை மாறியது.
திருமா சந்திப்பு
இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், விஜயகாந்தை சந்தித்தார்.

அழகிரி ஆதரவாளர் தற்கொலை...! திமுகவினர் அதிர்ச்சி


கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நகரில் திமுகவைச் சேர்ந்த நகர செயலாளர் ஆர்.பி.ஈஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். இவர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. அழகிரிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாக இவர் சில நாட்களாகவே வருத்தப்பட்டு வந்தாராம். இவரது திடீர் தற்கொலையால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கம்பம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ஆர்.பி.ஈஸ்வரன் (50). இவர் கம்பம் நகர தி.மு.க. செயலாளராக இருந்தார். இவருடைய மனைவி கடந்த 25 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவருடைய மூத்த மருமகன் அறிவழகன் நேற்று காலையில் வழக்கம் போல் ஈஸ்வரன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டு வளாகத்தில் இருந்த ஒரு மரத்தில் ஈஸ்வரன் துக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அறிவழகன் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

விஜயகாந்த் : கூட்டணி விஷயத்தில் அவசரப்படமாட்டேன் !

பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கட்சியினருடன் பொங்கல் பானையில் பொங்கலிடும் பிரேமலதா. உடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த். வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அவசரப்பட மாட்டேன் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.
தே.மு.தி.க. சார்பில் பொங்கல் விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நல்ல விலை தரும் விநியோகஸ்தர்களுக்கே/கட்சிகளுக்கே  ஏரியாக்கள் விற்கப்படும் அதாவது தொகுதிகளுங்கோ ! இந்த தமில் மக்கல் ரொம்ப நல்லவனுங்கோ சினிமால இருந்து எவன் வந்தாலும் இளிப்பானுங்கோ 

வழி தவறி சென்றால் கண்டுபிடிக்க ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஜிபிஎஸ் கருவி

திருச்சி : தமிழகத்தில் முதன்முறையாக திருச்சியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படுகிறது.தமிழர்களின் வீரமிகு விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு மிக முக்கியமானது. வீரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கிடைக்கிறதோ, அதே அளவிற்கு கவுரவமும் இதில் அடங்கியிருக்கிறது. ஒரு வீரர் ஒரு காளையை அடக்கும் முயற்சியில் வெற்றி பெற்று விட்டால் அவருக்கு பரிசுகளும், பாராட்டும் கிடைக்கும். ஆனால் காளையை அடக்க முயன்று தோல்வியை தழுவி விட்டால் விழுப்புண் அல்லது உயிரிழப்பு கூட நேரிடலாம்.