ஊழல் வழக்கில், அதிகபட்ச அபராதம் எவ்வளவு விதிப்பது என்பது குறித்து,
சட்டத்தில் கூறப்படவில்லை. ஜெ., வழக்கில், 100 கோடி ரூபாய் அபராதம்
விதித்திருப்பது, அதிக பட்சமானது என ஒரு தரப்பும், அதிகபட்சம் இல்லை என
மற்றொரு தரப்பிலும் கூறப்படுகிறது.
ரூ.100 கோடி அபராதம்:
சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு, 100 கோடி ரூபாய், சசிகலா,
இளவரசி, சுதாகரனுக்கு தலா, 10 கோடி ரூபாய் என, அபராதம்
விதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை,
அதிகபட்சமானது என, ஒருபுறம் கருத்து தெரிவிக்கப்படுகிறது. வருமானத்துக்கு
அதிகமாக, 66.65 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக குற்றம்
சாட்டப்பட்டாலும், 53.60 கோடி ரூபாய் அளவுக்கு தான், திருப்திகரமான கணக்கு
இல்லை என, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட
அபராதத் தொகை, அதிக பட்சமானது என, ஒருபுறம் கருத்து தெரிவிக்கப்படுகிறது. இந்த தண்டனை மிகவும் குறைவே... இந்த குற்றத்திற்கு ரெட்டை ஆயுள் தண்டனை
மற்றும் இவர் தவறான வழியில் சேர்த்த 66 கோடி சொத்துக்களையும் பறிமுதல்
செய்து ஏலத்தில் விட்டு அந்த தொகையை (தற்போதைய மதிப்பு 3300 கோடி)
கஜானாவில் சேர்க்க வேண்டும்.... 18 வருடம் வாய்தா வாங்கியதற்காக அந்த 100
கோடியை அபராதமாக அறிவிக்க வேண்டும்... தண்டனைகள் கடுமை ஆனால் தான்
குற்றங்கள் குறையும்.... அதுதான் வாய்மையே வெல்லும்... இல்லை என்றால்
வாய்தாவே வெல்லும் என்ற நிலை வரும்...
அதேநேரத்தில், இந்த அளவுக்கு அபராதம் விதிக்க முடியும் எனவும், கூறப்படுகிறது.
இதுகுறித்து, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜான் சத்யன் கூறியதாவது:செஷன்ஸ் நீதிபதிக்கு, அபராதத் தொகை விதிக்கும் அதிகாரம் உள்ளது. அதற்கு வானமே எல்லை. இருந்தாலும், 100 கோடி ரூபாய் அபராதம் என்பது, யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டது.ஒரு வழக்கில், சாதாரண தொழிலாளிக்கு, கடுமையான அபராதம் விதித்தால், அவரால் எப்படி அபராதம் செலுத்த முடியும்? அபராதத் தொகைக்கு, தடை விதிக்க கோரலாம். அதற்கு, உயர் நீதிமன்றம் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, வழக்கறிஞர் ஜான் சத்யன் கூறினார்.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வி.கண்ண தாசன் கூறியதாவது:இந்த அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக, எந்த அரசியல்வாதி மீதும், இதுவரை வழக்கு தொடரப்படவில்லை. கடந்த, 1991 - 96ம் ஆண்டு கால கட்டத்தில், 66.65 கோடி ரூபாய் சொத்துகள் சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் இப்போதைய மதிப்பை கணக்கிட்டால், பல மடங்கு தாண்டும். எனவே தான், அபராதத் தொகை, இந்த அளவுக்கு விதிக்கப்பட்டுள்ளது.தண்டனை காலம் எவ்வளவு என்பது, சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அபராதம் விதிப்பதற்கு, சட்டத்தில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. அது, நீதிபதியின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது.இவ்வாறு, வழக்கறிஞர் கண்ணதாசன் கூறினார்.
பெயர் வெளியிட விரும்பாத, குற்றவியல் வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது:அபராதத் தொகை எவ்வளவு என்பதற்கு, உச்சவரம்பு இல்லை. இருந்தாலும், அந்த நபரால், அபராதம் செலுத்த முடியும் வகையில் இருக்க வேண்டும்.ஒருவரது தகுதிக்கு மீறி அபராதம் விதித்தால், அவரால் எப்படி செலுத்த முடியும். 100 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் என்பது, அதிகபட்சமானது. சட்டத்தில், அபராதத்துக்குவரம்பு இல்லை என்பதற்காக, அதிகபட்ச அபராதம் விதிக்க முடியாது.இவ்வாறு, அந்த வழக்கறிஞர் கூறினார்.
அபராதத் தொகைக்கு, தடை விதிக்க கோர முடியும் என்றும், வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். பல வழக்குகளில், செஷன்ஸ் நீதிமன்றங்கள் விதிக்கும் அபராதத்துக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும், அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
- நமது நிருபர் - dinamalar.com

உயர் நீதிமன்றம் தடை:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக