டெல்லி கற்பழிப்பு வழக்கில் கற்பழிப்பு மற்றும் கொலை ஆகியவற்றில் மைனர்
சிறுவன் குற்றவாளி என கண்டறியப்பட்டதை தொடர்ந்து 3 வருட சிறை தண்டனை
விதித்து சிறுவர் நீதிமன்ற வாரியம் இன்று தீர்ப்பளித்தது. எனினும், இந்த
தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர் கூறும்போது, இந்த
தீர்ப்பை என்னால் ஏற்று கொள்ள இயலாது.
இந்த மனிதர்களால் எனது சகோதரி கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார். ஒவ்வொரு நாளும் ஆயிரம் முறை மரணத்தை சந்தித்து உள்ளார். எனது முழு குடும்பமும் இதனால் சிதறடிக்கப்பட்டு கிடக்கிறது. இந்த தீர்ப்பை என்னால் ஏற்க இயலாது. இந்த தண்டனையை கேட்டு எனது தாய் கதறி அழுதார் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், மாணவியின் தாய் கூறும்போது, இந்த தண்டனை மட்டுமே விதிப்பது என்றால், இதனை முன்னரே அறிவித்திருக்கலாம். இந்த தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை என்று கூறினார்.
குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விதிக்க கோரி மேல் நீதிமன்றத்தில் முறையிடுவோம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால், சட்ட நிபுணர்கள் கூறும்போது, தற்போதைய சட்டப்படி சிறுவனுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறுவன் தான் மேல் முறையீடு செய்ய முடியும் என தெரிவித்துள்ள

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக