zee டிவியில் நேற்று இடம்பெற்ற சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிகவும் அவசியமாக எல்லோரும் பார்த்திருக்க வேண்டிய நிகழ்ச்சி
ஒரு இளம் காதலர்களை, நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனும் காதல் ஜோடிகளின் பெற்றோர்களும் இதர டிவி ஊழியர்களும் சேர்ந்து பிரித்து தத்தம் பெற்றோர்களுடன் அனுப்பி விட்டனர், இது மிகவும் சரியான ஒரு நடவடிக்கைதான் , வயது வந்த காதலர்களுக்கு சுயமாக தமது வாழ்வை தீர்மானிக்கும் உரிமை உண்டு என்ற கோட்பாட்டை தாண்டி சில விடயங்களை அவதானிக்க வேண்டி உள்ளது . இதை இந்த நிகழ்ச்சி மிக சரியாக காட்டி உள்ளது என்றே கூறவேண்டும் .
சுருக்கமாக கூறின் : ஒரு உதவாக்கரை பையன் போதாக்குறைக்கு அவனிடம் குடி மாறும் புகை போன்ற பழக்கங்களும் இருப்பது போல் தெரிகிறது , ஒரு விதமான தொழிலும் கிடையாது ,
உத்தியோக பெற்றோருக்கு பிறந்தும் படிப்பும் இல்லை, எல்லோருக்கும் முன்னிலையில் பெண்ணை பார்த்து அலட்சியமாக உனக்கு நான் வேணுமா உன் அப்பா வேணுமா என்று கேட்கிறான் , எந்தவித தகுதியும் அடக்கமும் இல்லாத ஒரு அடாவடி பையனுக்கு உரிய சகல சாமுத்திரிகா இலக்கணமும் அவனிடம் தாராளமாக தெரிகிறது ,
மறுபக்கம் பெண்ணின் தரப்பை பார்க்கும் பொழுது மிகவும் வறுமை பட்ட ஒரு குடும்பத்தில் மூத்த பெண்ணாக அவர் நன்றாக படித்து கொண்டு இருக்கிறார் , வறுமையிலும் பெற்றோர் அவளை எஞ்சினியரிங் காலேஜில் சேர்த்து உள்ளனர்,
இன்னும் சிலவருடங்கள் படிக்க வேண்டி உள்ளது , பேசும்பொழுது அந்த பையனைவிட சற்று நாகரீகமாகவே பேசுகிறாள்.
அந்த பெண் அவனோடு போவேன் என்று அடம்பிடிக்கிறாள் . பெற்றோரின் உழைப்பை பற்றி கவலைபடாமல் தெய்வீக காதல் கோட்பாடு தூக்கி பிடிக்க வேண்டும் அல்லது வயது வந்தவர்களுக்கு சகல உரிமையும் உண்டு என்ற கோட்பாட்டை கூட தைரியமாக எதிர்கொண்ட நிகழ்ச்சியை நிச்சயம் பாராட்ட வேண்டும், அந்த பெண்ணுக்கும் சரி பையனுக்கும் சரி பெற்றோருக்கு செலுத்த வேண்டிய கடன் பாக்கியை செலுத்தாமல் காதலே பெரிது என்று சொல்வதற்கு உரிமை இல்லை ,
இந்த விடயத்தில் திருமதி லக்ஷ்மி ராமகிருஷ்ணனை நிச்சயம் பாராட்ட தான் வேண்டும் , ஒரு unpopular ஸ்டாண்ட் எடுத்து கொண்டு நிறைவேற்றி காட்டுவது சுலபம் அல்ல . www.thiruttuvcd.me/tv/2013/08/29/solvathellam-unmai-29-08-2013-watch-online-solvathellam-unmai-shows-zee-tamil-programsaugust-months-shows/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக