Viru New
இந்தியாவில்
தள்ளாடும் ஏவியேஷன் வர்த்தகத்தில், சன் குழுமத்துக்கு சொந்தமான விமான
நிறுவனம் ஸ்பைஸ் ஜெட், ஆச்சரிய நிலையில் உள்ளது. தம்மிடமுள்ள இரு போயிங்
737-800 விமானங்களை சவுதி அரேபிய நாஸ் ஏர் விமான நிறுவனத்துக்கு வாடகைக்கு
(லீஸ்) விடப்போவதாக அறிவித்துள்ளது.
இந்திய தனியார் விமான நிறுவனங்கள் எல்லாம் (அரசுக்கு சொந்தமான ஏர்-இந்தியா மட்டுமென்ன வாழ்கிறதா?) தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்பைஸ் ஜெட் கடந்த திங்கட்கிழமை, முதலாவது காலாண்டுக்கு 56 கோடி லாபம் காண்பித்து ஆச்சரியப்பட வைத்திருந்தது. இப்போது இந்த லீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மழைக்கால விமான வர்த்தகம் எப்போதுமே ஸ்லோவாக இருப்பது வழக்கம். அப்படியான நேரத்தில், ஸ்பைஸ் ஜெட், தம்மிடமுள்ள அனைத்து விமானங்களையும் பயன்படுத்த முடியாது. உபரி விமானங்களை சும்மா தரையில் நிறுத்தி வைப்பதால், செலவுதான் அதிகம் ஏற்படும்.
அந்த வகையில், இரு விமானங்களை லீஸ் செய்ய ஒப்பந்தம் செய்திருப்பது. சரியான முடிவுதான். எந்தவொரு விமான நிறுவனமும் எடுக்கக்கூடிய முடிவுதான் அது. அதில் பெரிதாக ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
ஆச்சரியம் எங்கேயென்றால், விமானத்தை லீஸ் செய்துள்ள முறை.
ஸ்பைஸ் ஜெட், இந்த விமானங்களை வெட்-லீஸ் (wet lease) ஒப்பந்தம் செய்துள்ளது. வெட்-லீஸ் என்பது, விமானத்தை அதன் சிப்பந்திகள், மற்றும் சேவைகளுடன் கொடுப்பது. அது எப்படி என்றால், சவுதி நிறுவனத்தின் பெயரில் விமானம் ஓடினாலும், ஸ்பைஸ் ஜெட்டின் பைலட்டுகளே விமானத்தை செலுத்துவார்கள். விமான பணியாளர்கள், மெக்கானிக்குகள் அனைவரும் ஸ்பைஸ் ஜெட்டின் ஆட்களே.
சவுதி நிறுவனத்திடம் இருந்து, இவர்களால் வழங்கப்படும் சேவைகளுக்காக, ஸ்பைஸ் ஜெட்டுக்கு பணம் கிடைக்க போகிறது.
மழைக்காலத்தில் விமானங்களை தரையில் நிறுத்தி வைத்திருந்தாலும், இவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். அது ஸ்பைஸ் ஜெட்டின் பாக்கெட்டில் இருந்து போயிருக்கும். இப்போது அந்த பணம் லாபம். பிளஸ், அதைவிட அதிக பிரீமியம் சவுதி நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும்.
மற்றொரு வசதி, விமானத்துக்கான காப்புறுதி கட்டணத்தையும் ஸ்பைஸ் ஜெட் செலுத்தும். நீண்டகால காப்புறுதிக்கான குறைந்த பிரீமியத்தை கட்டிவிட்டு, குறுகிய காலத்துக்கான அதிக தொகை பிரீமியத்தை சவுதி நிறுவனத்திடம் இருந்து பெற்றுவிடும். அதிலும் லாபம்.
இவை எல்லாவற்றையும்விட பெரிய லாபம் எது தெரியுமா?
ஸ்பைஸ் ஜெட் வாடகைக்கு விடுவது, அவர்களது சொந்த விமானமல்ல! போயிங் 737-800 ரக விமான ரகத்தில் 35 விமானங்களை இயக்கும் ஸ்பைஸ் ஜெட், அவற்றில் 22 விமானங்களையே சொந்தமாக வைத்துள்ளது. மீதி விமானங்கள் ட்ரை லீஸ் (dry lease) அடிப்படையில் வெளியேயிருந்து நீண்டகால வாடகைக்கு எடுக்கப்பட்டவை.
ட்ரை-லீஸில் விமானம் மட்டுமே தருவார்கள். விலை குறைவு. அதுவும், விமான நிறுவனங்கள் தள்ளாடும் இந்த நாட்களில் கொள்ளை மலிவில் ட்ரை-லீஸிங் செய்யலாம்.
யாருடையதோ விமானம். அதை குறைந்த செலவில் வாடகைக்கு ட்ரை லீஸில் எடுத்து, அதிக பிரீமியத்தில் சவுதி நிறுவனத்துக்கு வெட் லீஸில் கொடுத்து, தமது ஊழியர்களின் ஊதியத்தையும் அங்கிருந்தே பெறுவது அட்டகாசமான திட்டமா, இல்லையா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக