ஸ்பெக்ட்ரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தனியார் தொலைத் தொடர்பு அதிகாரிகளும் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
ஸ்பெக்ட்ரம் தொடர்பாக கைதாகி உள்ள 14 பேரும் மிகவும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர்கள். ஏ.சி.அறையிலேயே இருந்து பழக்கப்பட்ட அவர்களுக்கு டெல்லி வெயில் சமாளிக்க முடியாதபடி உள்ளது. வெப்பம் காரணமாக சூடு பிடித்து கொள்வதால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இந்த அவதியுடன் சிறை உள்ளே இருக்கும் குறைந்த வசதியுடனான இந்தியன் டைப் கழிவறை கஷ்டத்தையும் அவர்கள் அனுபவிக்க நேரிடுகிறது.
இந்தியன் டைப் கழிவறையால் தனக்கு தாங்க முடியாத அளவுக்கு முதுகு வலி வந்துவிட்டதாக யுனிடெக் வயர்லஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா ஜெயிலில் அதிகாரிகளிடம் கூறி உள்ளார். எனவே மென்மையான படுக்கை விரிப்பு தர அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயில் தண்டனை காரணமாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. மற்றும் தொலைதொடர்பு அதிகாரிகள் முன் எச்சரிக்கையாக உள்ளனர். இதற்கு அவர்கள் ஜெயிலுக்குள்ளேயே தினமும் பதஞ்சலி யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர ராசா, கனிமொழி இருவரும் தினமும் நடைப்பயிற்சியும் செய்கிறார்கள். மற்ற நேரங்களில் அவர்கள் பயன் உள்ள வகைகளில் பொழுதை கழிக்கிறார்கள்.
ஆ.ராசா சமீபகாலமாக அவர் இந்தி படிக்கத் தொடங்கி உள்ளார். போலி என்கவுண்டர் வழக்கில் கைதாகி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் உயர்அதிகாரி உதயவீர்ரதி தினமும் ஆ.ராசாவுக்கு இந்தி சொல்லி கொடுத்து வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக