இந்திய அரசியலமைப்பிற்கிணங்க மாநில அரசாங்கங்களுக்கு வழங்கப் பட்டுள்ள அதிகாரத்தை மீறி தமிழ் நாட்டு அரசாங்கம் மத்திய அரசுக்கு அழுத்தங்களையோ சிபாரிசுகளையோ வழங்க முடியாதென பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் தமிழக மாநில அரசாங்கத்துடன் தொடர்ந்தும் நல்லுறவைப் பேணும் என குறிப்பிட்ட அமைச்சர், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தமிழக முதல மைச்சராக செல்வி ஜெயலலிதா பதவியேற்ற போது தாம் இலங்கை அரசின் சார்பில் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மா நாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கம் மத்திய அரசாங்கத் துடனேயே முக்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது. அதுபற்றிய தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தமிழ் நாட்டுக்கு க்கிடையாது. தமிழ் நாடு மாநில அரசாங்கத்துடன் இலங்கை சம்பந்தப்பட்ட பல்வேறு பேச்சுவார்த்தைகளை எதிர்காலத்தில் மேற்கொள்வோம். அதில் எவ்வித பிரச்சினையுமில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக