வியாழன், 19 மே, 2011

புலிப் பயங்கரவாத குற்றச் செயல்களையும், கொலைகளையும் விடுதலை என்ற பேரால் துரையப்பாவிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை

போர்க் குற்றமும் சர்வதேசமும் தமிழ்ச் சமூகமும்.
    தேவன். (கனடா)
You can absolutely disagree with someone but you do not have to put them down. -  Pierre E Trudeau.

மேற்குறிப்பிட்ட ஆழமான சிந்தனையை வெளிப்படுத்தியவர் காலஞ்சென்ற கனடிய பிரதமராக இருந்த
Trudeau. இக்கட்டுரைக்கு இவ்வர்தம் பொதிந்த சிந்தனையை தேர்வு செய்ததிற்கான காரணம் அண்மைக் காலமாக சர்வதேச சமூகத்திலும் இலங்கை அரசியலிலும், தமிழ் சமூகத்திலும் போர்க் குற்றம் சூடு பிடித்துள்ளதால் யாரையும் புண்படுத்தாது இதில் உள்ள தர்க்க நியாயங்களையும் யதார்த்த நிலவரங்களையும் முன்வைபபதே இக்கட்டுரையின் நோக்கம்.

உயர்ந்த மனிதர்கள் உயர்ந்த சிந்தனையையே வெளிப்படுத்துவார்கள் என்பதில் பியர் ரூடோ மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு மனிதருடைய கருத்தை பூரணமாக ஏற்றுக்கொள்ளாத போது அதற்காக அவரை கீழேபோட்டு அவமானப்படுத்த தேவையில்லை என்கிறார்.

கடந்த 30 வருட இருள்யுத்தத்துக்கும் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கும் மிக முக்கிய காரணங்களை தேடிச்செல்வதைவிடவும் பிறரை குறைகூறி விமர்சனம் செய்ய முன்பு நமது சமூகத்துக்குள்ளேயே அதற்கான காரணத்தை தேடுவதும் கற்றுக்கொள்வதுமே எதிர்காலத்தை செப்பனிடுவதற்காக பொருத்தமான அளவுகோலக இருக்கும்.

உண்மையாகவே நமது சமூகத்தினர் போர் குற்றத்திற்காக குரல் கொடுப்பதற்கு தகுதியுடையவர்களா? நாம் கடந்துவந்த வரலாற்றையும் அழிவுகளையும் ஒரு கணம் திரும்பி பார்க்கும்போது நமது சமூகத்தினர் சுயவிசாரணை அல்லது சுயவிமர்சனம் மேற்கொண்டார்களா?

குற்றச் செயல்களையும், கொலைகளையும் விடுதலை என்ற பேரால் துரையப்பாவிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை ஊக்குவித்தது, உற்சாகமூட்டியது யார்? 70களில், 80களில் நம் சமூகத்திற்கு தலைமை தாங்கிய அரசியல் தலைi8மகள் தங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்தியோர்க்கும், இந்தப் போராட்ட பாதை தமழ் சமூகத்தை அழிவில் கொண்டு செல்கிறது தவறாக வழிநடத்துகிறது என்று கருத்துக்கூறிய .டதுசாரிகளை தமிழ் மிதவாத தலைமைகள் நிராகரித்ததோடு இப்படியானவர்களுக்கு இயற்கை மரணம் இல்லை, செயற்கை மரணம்தான் என சூழுரைத்தார்கள்.

மேலும் தமிழ் ஈழப்போர் ஆரம்பித்த காலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வரை ஏற்பட்ட கொலைகள் குற்றச் செயல்கள், அழிவுகளால் தமிழ் சமூகம் மட்டும் பாதிக்கப்படவில்லை. இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களும் இந்தப் போரில் பெரியவிலை கொடுத்துள்ளது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

குறிப்பாக இயக்க சகோதரப்படுகொலைகள் மாற்குக் கருத்துஉடையோர் கல்விமான்கள், சாதாரண தமிழ் மக்கள், ஸ்லாமிய சமூகம், சிங்கள சமூகம், வழிபாட்டுத்தலங்கள், ஸ்லாமிய சிங்கள இனச்சுத்திகரிப்பு என விரித்துக்கொண்டே போகலாம்.

இத்தகைய அனர்த்தங்கள் கடந்த மூன்று சதாப்பங்களாக இலங்கையில் நடந்துகொண்டிருக்கும்போது தமிழ் சமூகமோ, சர்வதேசமோ சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றமோ கண்டித்து குரல்கொடுக்காது மௌனம் காத்தது. அத்துடன் இலங்கை சுதந்திரத்துக்கு பின்னான வரலாற்றில் தென்பகுதியில் இரண்டு ஆயுதக்கிளர்ச்சி அரச இயந்திரத்தால் முறியடிக்கப்பட்டது. அதுவும் ஒரே மொழி,  ஒரே இனம், ஒரே காலாசாரம். எப்போதெல்லாம் எந்த சர்வதேச அரசம், சர்வதேச நீதிமன்றமும் நிபுணர் குழு அமைப்பதற்கும், போர்க்குற்ற விசாரணை செய்வதற்கும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா சi சர்வதேச மன்னிப்பு சபை, அரசு காராத நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புக்கள் மேற்கின் எடுப்பார் கைப்பிள்ளையாகவே செயற்படுகிறது என்பது வரலாற்றின் நிதர்சமனாக இருக்கிறது. உதாரணமாக இவ்வமைப்புக்கள் ஆசியாவில், ஆபிரிக்காவில் கவனம் செலுத்துவது போல் மேற்றில் கவனம் செலுத்துவதில்லை. ஏனென்றால் வல்லரசு நாடுகளால் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் மத்திய கிழக்கிலும் ஆப்பாகானிஸ்தானிலும் புரியும் மனித உரிமை மீறல்களையும் துஸ்பிரயோகங்களையும் கண்டுகொள்வதில்லை.

ஆண்மைய சாட்சியாக ஈராக் யுத்தம், பலஸ்தீன - ஸ்ரேல் காசா விவகாரம், லிபியா, யெமன், ரூனுசியா, சவுதி அரேபியா, பாரேயின், எகிப்து போன்ற தேசங்களில் மேற்கின் நலன் சார்ந்த பொருளாதார நலன் அடிப்படையிலேயே அணுகுமுறைகள் நீதிக்கொள்கைகள் பக்க சார்பான நிலைகளை எடுப்பதை அவதானிக்கலாம்.

போர்க்குற்ற வரலாற்றில் பிளேயர், புஸ் விசாரிக்கப்பட வேண்டியவர்கள். சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள். ஆனால் அது நடைபெறவில்லை. அடுத்ததாக பல வருடத்துக்கு முன்பு உகண்டா சர்வதிகாரி இடியமீன் செய்யாத குற்றமா? ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொலை, கற்பழிப்பு, ஊழல் இவ்வளவையும் புரிந்துவிட்டு சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து இயற்கை மரணம் அடைந்தார்.

இந்த அனுபவங்களில் இருந்து என்ன வெளிப்படுகிறது என்றால் நமது உலகில் எந்தவிடையத்திலும் நீதி, நியாயம் இல்லாது பக்க சார்பாகவே இயங்குகின்றன. தற்போது இருக்கும் உலக அமைப்பில் நீதி சமத்துவம் போர்க்குற்றம் போன்ற விடையங்களில் முன்னுதாரணமாக ஒரு தேசத்தை
role model ஆக கூறுவதற்கு எந்த அதாரமும் இல்லை. அனைத்து தேசங்களும் ஏதோ ஒரு வகையில் இரத்தக்கறை படிந்ததாகவே இருக்கிறது.

பின்லேடனின் உருவாக்கமும் முடிவும் அமெரிக்காவே என்பது அனைவரும் அறிந்த வடையம். அவரது மரணத்தில்கூட சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

பயங்கரவாதம், வன்முறை, தீவிரவாதம் உண்டாவதற்கான காரணம் மேலாண்மை, கலாசார வேறுபாடு, வறுமை, சுரண்டல், ஊழல், மதசகிப்பின்மை, சமத்துவமின்மை போன்ற காரணியே என்பதை சமகால யதார்த்தம் உணர்த்துகிறது.

ரஸ்யா எதிர்கொள்கிற செச்சினிய அடிப்படைவாதம் இவ்வாறு குமுறுகிறது,
Blood will not be limited to our towes இப்படி கூறியது Chechen warlord  website - The war is coming to your cities இதேபோன்றுதான் அல் - கைதா, சோமாலியா, பாகிஸ்தான் தேசங்களில் இருக்கும் அடிப்படைவாத மதஅமைப்புக்கள் மேற்குலகத்தை மிரட்டுகின்றன.

வரலாறுகள் எப்படி இருந்தபோதும் இலங்கை மீதான நிபுணர் குழுவின் போர்க்குற்றச்சாட்டிற்கு மூலகாரணத்தை ஆராயும்போது அதற்கான காரணத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பும், புலம்பெயர் புலி ஆதரவாளர்களும், தமிழ் ஊடகங்களுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் முள்ளிவாய்கால் ஆபத்தை உணராது அனர்த்தங்களை எடைபோடாது பிரபாகரன் வெல்லப்படமுடியாதவர் என்றும் புலிகளே தமிழர், தமிழரே புலிகள் என்றும் கோசங்களை எழுப்பி ஈழத்துக்கான இறுதிப்போரை மகிந்த அரசு மீது திணித்திருந்தார்கள்.

சமாதான ஒப்பந்த காலகட்டத்தில்கூட அரசைவிட புலிகளே அதிக அத்துமீறல்களையும், கொலைகளையும் இலங்கை முழுவதிலும் கட்டவித்துவிட்டிருந்தார்கள்.

நம்மவர்கள் எப்படி அரசுக்கெதிராக புரட்சி செய்வது என்பதை எகிப்திய, ரூனுசிய மக்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். எகிப்திய 24 வயது படித்த இளைஞன் முஐபார் உNனிக்கு எதிரான ஆர்ப்பட்டத்தில் வன்முறையற்ற புரட்சியில் கலந்துகொண்டு இவ்வாறு கூறுகிறான்,
 I only eat dry bread. I cannot  afford meat. Hosni eats lobster and caviar every day. I want him to leave. I went his family to leave. I went them all to go. I am sick and tired of those cowards.இப்படியாக அரசு ஏவிவிட்ட வன்முறையையும் மீறி 19 நாட்களில் மக்கள் புரட்சியில் வெற்றி பெற்று மத்திய கிழக்கு வரலாற்றில் புதிய சரித்திரம் படைத்தார்கள்.

நம் சமூகத்துக்கு கிடைத்த தலைவர்களோ இளையதலைமுறையினரை உசுப்பிவிட்டு முள்ளிவாக்கால்வரை அழிவையம் ஏற்படுத்திவிட்டு அரசுடன் தமது நல்களை மட்டும் பேணுவதுடன் குறியாக இருந்துடன் போர்க்குற்ற ரிப்போட்டையும் வரவேற்பதாக கூறுகிறார்கள்.

அப்படியெனில் அதில் கூறப்பட்டுள்ள புலம்பெயர் தேசங்களில் முடக்கப்பட்ட நிதியைப் பற்றி ஏன் ஒன்றும் கதைக்கவில்லை? நமது மக்களுக்கும் ஒரு சரியான மாற்றீடு இல்லாததினால் சம்பந்தன் தலைமையிலான த.தே.கூட்டமைப்புக்கு வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இறுதியாக நிபுணர் குழுவின் போர்க்குற்ற அறிக்கைக்கு இலங்கை தரப்பில் ராஜதந்திர ரீதியாக எதிர்களெர்வதற்கு லக்ஸ்மன் கதிர்காமல் இல்லாதது ஒரு பெரிய குறையாகவே இருக்கிறது. அத்துடன் யுத்தத்தில் மனித நேயம் என்பது இல்லை. யுத்தம் என்றாலே சர்வநாசம் தான். அதுவும் மானிட இழப்பின்றி ஒருவர் மரணமின்றி யுத்தம் புரிவது எப்படி?

இலங்கையில் புலிப் பயங்கரவாதத்தை அழித்து இரண்டு வருடமாகும் இவ்வேளையில் இலங்கை அரசு இந்த மாத இறுதியில் பயங்கரவாதத்தை எப்படி அழித்திரு;கிறது எனும் அமர்வு மூலம் உலகுக்கு தெளிபடுத்தும் அதேவேளையில் இன்னொரு அரங்கில் உலகிலும் இலங்கையிலும் எதிர்காலத்தில் எப்படி பயங்கரவாதம் உருவாகாமல் மக்களை பாதுகாப்பது, நல்லாட்சி செய்வது, நல்லிணக்கத்தை பேணுவுது போன்ற விடையங்களை சமன் செய்ய முன்வந்தால் அதுவே வரலாற்றின் முன்னுதாரணமாக இருக்கும்
.

கருத்துகள் இல்லை: