வியாழன், 2 டிசம்பர், 2010
ஈழப் போரின் இறுதி நாட்களில் நடந்தது என்னவென்ற மர்மத்துக்கு விக்கிலீக்ஸ் ஆவணங்களில் விடை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
விக்கிலீக்ஸ் இணையத்தளம், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ரகசிய தகவல் தொடர்புகள் குறித்த ஆவணங்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. விக்கிலீக்ஸ் இணையத்தளம் வசம், கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க அரசு உலகின் பல்வேறு நாடுகளுடன் வைத்திருக்கும் ராஜரீக உறவுகள் தொடர்பான 251,287 ஆவணங்கள் சிக்கியுள்ளன. அதில் மூவாயிரத்துக்கும் அதிகமானவை இலங்கையுடனான இராஜதந்திர உறவுகள் சம்பந்தப்பட்டவை. 1996ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரையான காலப் பகுதிக்குள் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராஜாங்கத் தொடர்புகள் தொடர்பான ஆவணங்கள் வெளியாகியுள்ளன. வரும் நாட்களில் இவை விக்கிலீக்ஸ் இணையத் தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையுடனான இராஜதந்திரத் தொடர்பின் இரகசிய விடயங்கள் அடங்கிய ஆவணங்கள் வெளிவருவது குறித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. புலிகளின் முதல்கட்ட தலைவர்கள் என்ன ஆனார்கள் மற்றும் போரின் இறுதி நாட்களில் பெருமளவில் மக்கள் கொல்லப்பட்டது போன்றவற்றுக்கான பதில்கள் இந்த ஆவணங்களில் இருக்கும் எனத் தெரிவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக