புதன், 1 டிசம்பர், 2010

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியவர் ப.சிதம்பரம்தான்

கடந்த சில நாட்களாக காங்கிரஸுக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் ஆவேசமாக கருத்துக்களைக் கூறி வருகிறார் முதல்வர் கருணாநிதி. இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ்தான் துரோகம் செய்தது என்று எதிர்வரும் காலங்களில் அவர் பேசக்கூடும் என்பதை நன்கு கணித்துள்ளனர் சிதம்பரம் ஆதரவாளர்கள்.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பிறந்தநாள் விழாவை இதற்காக பயன்படுத்திக் கொண்டனர்.

அவரது பிறந்தநாள் அன்று இலங்கை அகதிகள் முகாமுக்குச் சென்று அரிசி, பருப்பு, காய்கறிகளைக் கொடுத்து தாங்களும் இலங்கைத் தமிழர் ஆதரவாளர்கள் தான் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியவர் ப.சிதம்பரம்தான் என்றும் அவரது ஆதரவாளர்கள் பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

மறுபக்கம் இளங்கோவன் ஆதரவாளர்களும் படு குஷியில் இருக்கிறார்களாம்.கடந்த மாதம் சோனியா அழைப்பின் பேரில் டெல்லி சென்றார் இளங்கோவன். ஒரு சி.டி.யை காண்பித்து, ‘கருணாநிதியையும், தி.மு.க. அரசையும் விமர்சிக்கிறீர்களாமே’என்று கேட்டிருக்கிறார் சோனியா.



அதற்கு இளங்கோவன்,‘‘காங்கிரஸ் தலைவர்கள் சிலர் போல் நானும் தி.மு.க.வோடு அனுசரித்துப் போயிருந்தால் நிறைய ஆதாயம் பெற்றிருப்பேன்..’’என்று கூறிவிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் குறித்தும் சோனியாவிடம் எடுத்துக் கூறியிருக்கிறார்.இதனைக் கேட்ட சோனியா, கையில் இருந்த அந்த சி.டி.யை பக்கத்தில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டிருக்கிறார்.

இளங்கோவனைப் பற்றி புகார் செய்த அந்த காங்கிரஸ் தலைவர், சோனியா ‘அப்பாயிண்ட்மென்ட்’ கிடைக்காமல் ஒரு மாதமாகக் காத்திருக்
கிறார் என்றும் சொல்லி சந்தோஷப்படுகின்றனர் இளங்கோவன் ஆதரவாளர்கள்.

கருத்துகள் இல்லை: