வியாழன், 8 ஜூலை, 2010

முட்டை வீசிய வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் தர குஷ்புவுக்கு உத்தரவு


மேட்டூர் கோர்ட்டுக்கு வந்தபோது முட்டை வீசிய வழக்கில் ஆகஸ்ட் 4ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தருமாறுநடிகை குஷ்புவுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு பேசிய கருத்துக்களை எதிர்த்து தமிழகம் [^] முழுவதும் அவருக்கு எதிராக போராட்டம் [^] வெடித்தது. தமிழ் அமைப்புகள், மகளிர் அமைப்புகள் என பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பல்வேறு கோர்ட்களில் வழக்குகளும் தொடரப்பட்டன.

மேட்டூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராக வந்த குஷ்பு மீது தக்காளி,முட்டைகளை வீசித் தாக்குதல் [^] நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக 41 பேர் மீது போலீஸார் மேட்டூர் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்குஇன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆகஸ்ட் 4ம் தேதி குஷ்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
பதிவு செய்தவர்: லாலி
பதிவு செய்தது: 07 Jul 2010 11:45 pm
இந்த கருத்தை குஸ்பு சொன்னபோது தமிழனின் மானமே போய்விட்டதுபோல தமிழகமே அல்லோலப்பட்டது. இப்ப அந்த கருத்தை சரின்னு கோர்ட் சொன்னப்ப ஒரு எதிர்ப்பும் இல்ல இப்ப எங்கபோச்சி தமிழனின் மானம். ..ம்ம் என்னத்த சொல்ல சரியான ஆட்டு மந்தை கூட்டம்.


கருத்துகள் இல்லை: