இந்தியாவில் 2.19 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர் என்று மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.
விருதுநகரில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்க திறன் மதிப்பீட்டு முகாம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய இணை அமைச்சர் நெப்போலியன்,
மத்திய சமூக நீதி துறையை எனது நண்பர்கள் நல்ல துறை இல்லை என்றனர். உண்மையில் இது நல்ல துறைதான் காரணம். வி.ஐ.பி.க்கள் தங்களது பிறந்தநாளில் மட்டுமே இது போன்ற உதவிகளை வழங்குவார்கள். நான் நாள் தோறும் இது போன்ற உதவிகளை எனது துறை மூலம் செய்து வருகிறேன்.
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசால் 9 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சென்னை மாநகராட்சி, இந்தியாவில் உள்ள 600 மாவட்டங்களில் சேலம் மாவட்டம், தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஆகியவற்றிற்கு விருது கிடைத்தது.
இந்தியாவில் 2 கோடியே 19 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை 3 முதல் 5 வயதிற்குள் பரிசோதனை செய்து குழந்தைகளிடம் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து நீக்க முன் வரவேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்காக வேலை வாய்ப்பு முகாம் நடத்த உள்ளோம். கண்டிப்பாக தகுதியுள்ள அனைவருக்கும் உதவிகள் வழங்கப்படும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக