சனி, 24 ஜூலை, 2010

கிழக்கு மக்கள் இனி நம்ப மாட்டார்கள்,புலிகள் அந்த அளவு பேதி கொடுத்தார்கள்

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இந்திய அரசின் முக்கிய அமைச்சர்கள் பலரையும் சந்தித்த சம்பந்தன் ்குழு வடக்கு,   கிழக்கை மீளவும்  இணைப்பதற்கு இந்தியா நடவடிக்கை  எடுக்கவேண்டும் வெளியிட்டிருக்கிறது
கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் பேசிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ், ‘வடக்கு,  கிழக்கை இணைக்கக் கோரும் உரிமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடையாது என்றும் அவர்கள் அதுபற்றித் தம்முடன் பேசாமல் இந்தியாவுடன் பேசியது தவறு’ என்றும் கூறியிருந்தார்.
அத்துடன் வடக்கு,  கிழக்கு இணைப்பை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது’ என்றும் அவர் கூறியிருந்தார்.   வடக்கு,    கிழக்கு இணைப்புத் தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அண்மைக்காலம் வரை வெளிப்படையாக   எந்தவொரு எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
இது தொடர்பாக நழுவல் போக்குள்ள கருத்தையே வெளியிட்டு வந்தது.   ஆனால் இப்போது வடக்கு,  கிழக்கு இணைப்பை ஏற்க முடியாது என்று கூறியிருக்கிறது.      வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்கப் போவதில்லை என்பது இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு.  இந்த இணைப்பு தமிழர்களின் விருப்பமாக இருந்தாலும் அது    நடக்கக் கூடிய காரியமா என்பது சந்தேகம் தான்.
 comments:
சம்பந்தன் சுரேஷ் மாவை போன்றோர் பல நடக்க முடியாத கோரிக்கைகளையும் எழுப்புவது வழக்கமான தமிழ் இனவாத அரசியல்வாதம். தங்களின் ஒரு மாத சம்பளத்தைத்தானும் அகதிகளுக்கு கொடுத்து உதவாத இந்த உதவாக்கரைகளை இன்னும் தமிழ் மக்களின் ஒரு பகுதியினர் நம்புவது துர்பாக்கியம். 
கிழக்கு மாகான தமிழ் மக்கள் இனி இணைந்த வட கிழக்கு மாகாண  அரசாங்கத்தை அமைக்க ஆதரவு தருவார்கள் என்று எந்த  அறிவாளியும் சத்தியமாக நம்ப மாட்டார்கள். அந்த அளவு புலிகள் கிழக்கு மாகாணத்திட்கு பேதி கொடுத்தார்கள். அங்கு மட்டும் 40000 விதைவைகள் உள்ளார்கள் . இனி போதும் வடக்காரே போதும்.

கருத்துகள் இல்லை: