செவ்வாய், 20 ஜூலை, 2010

13 விமான சேவை நிறுவனங்கள் இலங்கையில் விண்ணப்பித்துள்ளதாக

13 விமான சேவை நிறுவனங்கள் இலங்கையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை மேற்கொள்ள விமான சேவைகள் அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பவற்றிற்கு விண்ணப்பித்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு தேவையான சிறிய ரக விமானங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை ஜனாதிபதி செயலகத்திடம் கோரியுள்ளது. 60 நாட்களுக்குள் அனுமதி கிடைத்தவுடன் குறித்த விமான நிறுவனங்கள் சேவையை ஆரம்பிக்க உள்ளதன.
இதன் மூலம் இலங்கையின் பொழுதுபோக்குத் துறை அபிவிருத்தியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை விமானப் படை ஏற்கனவே யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கிற்கான வர்த்தக விமான சேவையை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
http://www.tamil.dailymirror.lk

கருத்துகள் இல்லை: