சீன அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அமைச்சர் டிலான் பெரேரா தலைமையில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்டின் உதயன் உட்பட பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சீனாவிற்கான தமது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து இன்று அதிகாலை நாடு திரும்பினார்கள்.
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா சில்வேஸ்திரி அலன்டின் உதயன் எஸ்.ஜீ.எம்.காரியவசம் எச்.ஏ.டபிள்யு.குணசேகர பி.வை.கமரலாகே எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா எஸ்.ஏ.சேமசிங்க ராஜதுரை பெருமாள் எஸ்.பீ.கே.விதானலாகே ஈ.ஆர்.ஆர்.எம்.வீரவர்த்தன ஆகிய பத்துப் பேரே சீனாவிற்கான விஜயத்தை மேற்கொண்டவர்களாவர்.
சுமார் பத்து நாட்கள் பயணமாக சீனா சென்ற இக்குழுவிற்கு அமைச்சர் டிலான் பெரேரா தலைமை தாங்கியதுடன் சீனாவின் அமைச்சர்கள் அமைச்சு செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதுடன் பல்வேறு சந்திப்புகளிலும் பங்குகொண்டிருந்தனர். சீனாவில் தங்கியிருந்த காலப்பகுதியில் விவசாயம் கல்வி சுற்றுலாத்துறை மற்றும் விவசாயம் தொடர்பாக தத்தமது நாடுகளின் செயற்பாடுகளை இரு நாடுகளினதும் அரசியல் முக்கியஸ்தர்கள் பகிர்ந்து கொண்டதுடன் சீனாவில் நடைமு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக