ஞாயிறு, 27 ஜூன், 2010

பெண்ணை எவ்வளவு கேவலமாக, கீழ்த்தரமாக சித்தரிக்க முடியுமோ அந்த அளவு தகாத வார்த்தைகளால்

இலக்கியவாதி முதல் சினிமா ஆண் எழுத்தாளர்கள் வரை : கனிமொழி பேச்சு

கோவையில் கடந்த 23ம் தேதி முதல் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடந்துவருகிறது.இன்றுடன் மாநாடு நிறைவுபெருகிறது.

மாநாட்டில் 21 ஆய்வரங்கம் அமைக் கப்பட்டுள்ளது. இங்குள்ள இளங்கோ அரங்கில் இலக்கியத்தில் நோக்கும், போக்கும் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடந்தது.
இதில் கனிமொழி எம்.பி. பேசினார்.
அப்போது அவர்,  ’’பெரும்பாலான இலக்கியங்களில் பெண்கள் பற்றி குறிப்பிடும் கவிஞர்கள் ஆண்களை பற்றி குறிப்பிடுவதில்லை.

சிலப் பதிகாரத்தில் கண்ணகி பற்றியும் ஆடல் கலை செய்த மாதவி பற்றியும் விரிவாக குறிப்பிடும் போது கோவலன் பற்றியோ அவனது செயல் பற்றியோ அதில் பேசுவதில்லை.

அன்றைய இலக்கியவாதி முதல் இன்றைய சினிமா ஆண் எழுத்தாளர்கள் வரை ஒரு பெண்ணை எவ்வளவு கேவலமாக, கீழ்த்தரமாக சித்தரிக்க முடியுமோ அந்த அளவு தகாத வார்த்தைகளால் வர்ணிப்பதாக கூறி பெண்களை ஒரு வியாபார பொருள் ஆக்கி இருக்கிறார்கள்.

ஆனால் ஒரு பெண் கவிதையில் தன்னுடைய பிரச்சினை பற்றி எழுதினால் அது கலாச்சார சீரழிவு என்கிறார்கள். அதிர்வுகள் இல்லாத இலக்கியம் அந்த கவிஞரோட கருத்துக்களுக்கு அவமரியாதை எது இலக்கணம்.

எது இலக்கியம் என்று எந்த ஒரு விமர்சனமும் எந்த ஒரு தனிமனிதனால் கூறி விட இயலாது. அது காலத்தின் கையில் உள்ளது. அதனை காலம் தான் நிர்ணயிக்கும்’’என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: