இந்தியக் கடற்பரப்பில் வைத்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் கப்பல் ஒன்று இந்தியக் கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் பங்களாதேசிலிருந்து பாகிஸ்தான் செல்லும்போதே முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்தியக் கடற்பரப்பான கல்கத்தா பகுதியில் வைத்தே இந்தக் கப்பல் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், கப்பலின் கப்டன் இந்தியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் கூறுகின்றன.
குறித்த கப்பல் லைபீரியாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், ஆயுதங்கள் கொண்டுசெல்வதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் கப்பலில் இருக்கவில்லையென்றும் இந்தியக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் கப்பலில் இருந்து எறிகணைகள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், வெடிபொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக