11.05.2010 - செவ்வாய்க்கிழமை
யாழ் மாநகர பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று (11) நண்பகலுடன் இடைநிறுத்தி பணிகளைத் தொடருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டார்.
யாழ் மாநகர சபையின் பிரதி மேயர் துரைராஜா இளங்கோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி யாழ் மாநகர சபையின் அனைத்து பணியாளர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த நிலையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்ற யாழ் மாநகர சபை வளாகத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் போராட்டத்தை இன்று நண்பகல் 12.00 மணியுடன் இடைநிறுத்தி பணியாளர்கள் அனைவரும் தத்தமது கடமைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டார்.
அத்துடன் பிரதி மேயரின் கைது விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியிலான நடவடிக்கைகளின் மூலம் தீர்வு காணப்படும் என்றும் அதுவரையில் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு பணிகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
யாழ் மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவுடனும் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடனும் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பணியாளர்களிடம் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரினார்.
பிரதி மேயர் விடுவிக்கப்படாத பட்சத்தில் இன்று நடைபெற்ற அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் மேலும் விரிவுபடுத்தப்படுமென யாழ் மாநகர சபை பணியாளர்கள் தெரிவித்திருதமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக