புதன், 12 மே, 2010
வங்கி ஏடிஎம் வாட்ச்மேன் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் பலி: 4 பேர் உயிர் ஊசல்
பாபநாசம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் வங்கி ஏடிஎம் காவலர் துப்பாகியால் சுட்டதில் சப்-இன்ஸ்பெக்டர் பலியானார். மேலும் 5 பொது மக்கள் படுகாயமடைந்தனர். இதில் 4 பேரின் நிலைமை மோசமாக உள்ளது.
பாபநாசம் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்மில் பணம் நிரப்ப இன்று பிற்பகலில் ஊழியர்கள் வந்தனர். அவர் எந்திரத்தில் பணம் நிரப்பிக் கொண்டிருந்த போது, பணம் எடுக்க வந்த பொது மக்களுக்கும், ஏ.டி.எம் காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து பணம் எடுக்க வந்தவர்களை காவலர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதைப் பார்த்த பணம் நிரப்ப வந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.
துப்பாக்கியால் சுட்ட வாட்ச்மேன் ஏ.டி.எம் மையத்துக்குள் சென்று பதுங்கிக் கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீ்ர்செல்வம் வங்கி ஏடிஎம்முக்கு விரைந்தார்.
ஏ.டி.எம்முக்குள் பதுங்கியிருந்த வாட்ச்மேனைப் பிடிக்க அவர் கதவை திறந்து உள்ளே செல்ல முயன்றார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்தையும் அவர் துப்பாக்கியால் சுட்டார்.
படுகாயமடைந்த பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வாட்சேன் சுட்டதில் படுகாயமடைந்த 5 பேரில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனால் பாபாநாசத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அ்கு போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக