கடந்த புதன்கிழமையன்று அவுஸ்திரேலியாவை நோக்கி ஒரு படகு வந்துக்கொண்டிருப்பதா அவுஸ்திரேலியா கடல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவுறுத்தப்பட்டது இப்படகை எல்லைப் பாதுகாப்பு படை கண்காணித்து வந்தபோதும் அது இடையில் காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்படுகிறது ஆகவே எல்லைப்பாதுகாப்பு படையும் மீட்பு விமானமும் கடலில் தேடுதலில் ஈடுபட்டதாகவும் அடுத்தநாள் மாலையில் அந்த படகு கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அவுஸ்திரேலியன் வலைத்தளச் செய்தி தெரிவிக்கிறது மேற்படி படகிலிருந்த இயந்திரம் பழுதடைந்தால் படகு அடித்துச் செல்லப்பட்டிருந்தது அப்படகுக்கு இருகே இருந்த சரக்கு படகுகள் உதவிக்கு அனுப்பப்பட்டு படகில் வந்த 8பேர் மீட்கப்பட்டதாகவும் மிகுதிப்பேர் படகிலேயே இருக்க அதை ஒரு கப்பல் கொக்கஸ் தீவுகளுக்கு இழுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது இப்படகில் 15 சிறுவர்கள் உட்பட 60பேர் பயணம் செய்தமை குறிப்பிடதக்கது. இந்த அகதிகள் கொடுத்த தகவலின்படியே ஐவர் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேற்படி 5 ஆண்களும் மூன்று நாட்களுக்கு முன்னதாக உயிர்காப்பு அங்கிகளை அணிந்துக் கொண்டு கடலில் குதித்தாக அகதிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இவர்களை கண்டுபிடிக்க தேடுதல் நடத்தப்பட்ட போதும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதேவேளை உயிர் காப்பு அங்கிகளும் டயர்களும் மீட்கப்பட்டுள்ளதால் இவை அந்த ஐவரும் பயன்படுத்தியதாக இருக்கலாம் என அவுஸ்திரேலிய உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சர் பிரண்டன் ஐகொன்னரின் பேச்சாளர் தெரிவித்துள்ளதாகவும் அதை தொடர்ந்து தேடுதல் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக