காற்றிலிருந்து மின் பிறப்பித்தல் திட்டத்தில் எழுவைதீவில் மின்சாரம் வழங்கும் நடவடிக்கை முதற்கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது.
சமூக நோக்குடைய பொறியியலாளர்களான அலெக்ஸ் அஞ்ஜலிற்றோ ஜே.அமலேந்திரன் கே. ரட்ணேஸ்வரன் வி.கோகுலசிங்கம் ஆகிய நால்வரும் இணைந்து காற்றிலிருந்து மின் பிறப்பித்தல் என்ற திட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஆய்வினை மேற்கொண்டு வந்தனர்.
இதன் பிரகாரம் எழுவை தீவுக்கு 100 கிலோ வாட்ஸ் மின்சாரத்தை வழங்குவதற்கான திட்டத்தை அமுல்படுத்த 50 மில்லியன் ரூபாய் நிதி தேவையென ஆய்வுக் குழுவினர் யாழ். அரச அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் எழுவை தீவில் ஐஸ் தொழில்சாலை தும்புத் தொழிற்சாலை மீன்படி வலைத் தொழிற்சாலை என்பன ஆரம்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதரமும் அதிகரிக்கும். அத்துடன் குறைந்த செலவில் கூடிய வருமானத் தைப் பெறக் கூடிய இத் திட்டத்தினால் இலங்கை மின்சார சபைக்கும் நன்மையளிக்கும். இதனை அமுல்படுத்த இரண்டு ஆண்டுகள் போதும். எழுவைத் தீவில் பரீசிலிக்கப்படும் இத் திட்டத்தின் சாதக நிலையைக் கொண்டு ஏனைய இடங்களிலும் இத் திட்டத்தை மேற்கொள்ள முடியும் என ஆய்வுக் குழுவினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக