இங்கிலாந்தில் 3 விபச்சாரப் பெண்களை கொன்றதாக கொலைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த குற்றவியல் ஆராய்ச்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் ஆராய்சிப் பிரிவில் படித்து வந்தவர் ஸ்டீபன் கிரிபித்ஸ் (40). தனது பி.எச்.டி. டாக்டர் பட்டத்துக்காக '19ம் நூற்றாண்டில் கொலைகள்' என்ற தலைப்பில் குற்றவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.
பிராட்போர் பகுதியில் சூசனா பிளாமையர்ஸ் (36), ஷெல்லி ஆர்மிடேஜ் (31), சூசன் ரஷ்வோர்த் (43) ஆகிய மூன்று விபச்சாரப் பெண்கள் கொலையான வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார்.
நேற்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட இவரிடம், உன் பெயர் என்ன என்று நீதிபதி கேட்க, 'மனித மாமிசம் உண்ணும் வில்' (crossbow cannibal) என்று பதிலளித்து அதிர்ச்சி தந்தார்.
இவரால் கொல்லப்பட்ட பெண்களில் ஒருவர் இந்த வகை வில்லால் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.
கொல்லப்பட்டவர்களில் சூசனா பிளாமையர்சின் சில உடல் பகுதிகள் ஒரு ஆற்றுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மற்ற இருவரும் கடந்த ஜூன் மாதம் காணவில்லை. இவர்களது உடலோ, பாகங்களோ இன்னும் கிடைக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக