கலைஞர் செய்திகள் - Praveen : இதன்படி நாய் பிடிக்கும் பணியாளர்கள் வலைகளை கொண்டு நாய்களை பிடித்த பின்னர் கால்நடை மருத்துவரால் அவற்றிற்கு வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தப்படும்.
பின்னர் அந்த நாய்களுக்கு வண்ண சாயம் (Vegetable dye) தெளித்து அடையாளப்படுத்தி அவை மீண்டும் அதே இடத்திலேயே விடுவிக்கப்படுகின்றன.
0இந்த சிறப்பு முகாம்களின் வாயிலாக இதுவரை திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு. வி.க நகர், தேனாம்பேட்டை, ஆலந்தூர், அடையாறு மற்றும் பெருங்குடி ஆகிய 10 மண்டலங்களில் இப்பணி நிறைவு பெற்றுள்ளது.
அவ்வாறாக, 31.10.2025 அன்று வரை திருவொற்றியூர் மண்டலத்தில் 9,496, மணலி மண்டலத்தில் 5,174, மாதவரம் மண்டலத்தில் 11,671, இராயபுரம் மண்டலத்தில் 8,211, திரு. வி.க நகர் மண்டலத்தில் 10,576, அண்ணா நகர் மண்டலத்தில் 2,942, தேனாம்பேட்டை மண்டலத்தில் 7,088, கோடம்பாக்கம் மண்டலத்தில் 5,534, ஆலந்தூர் மண்டலத்தில் 3,726, அடையாறு மண்டலத்தில் 7,937, பெருங்குடி மண்டலத்தில் 8,997, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 8,492 என 10 மண்டலங்களில் மொத்தம் 1,00,347 தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது, அண்ணா நகர், கோடம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அம்பத்தூர் மற்றும் வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களில் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து விரைவில் அளிக்கப்படவுள்ளது.
வெறிநாய்க்கடிநோய் இல்லாத சென்னை என்ற இலக்கை அடைவதற்கு பொது மக்களும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களும் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக