![]() |
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த இந்தியவர்களில் 6ம் இடத்தில் கே.பி ராமசாமி உள்ளார். கே.பி.ஆர் நிறுவனத்தின் நிறுவனரான இவரின் மொத்த சொத்து மதிப்பு 3.3 பில்லியன் டாலராகும். டாப் 100 பட்டியலில் 97வது இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் 5ம் இடத்தில் தொழிலதிபர் மல்லிகா ஸ்ரீனிவாசன் உள்ளார். TAFE நிறுவனத்தின் நிறுவனரான இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 3.35 பில்லியன் டாலராகும். டாப் 100 பட்டியலில் 96வது இடத்தில் உள்ளார்.
4ம் இடத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் நிறுவனர் வேணு ஸ்ரீனிவாசன் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 5.8 பில்லியன் டாலராகும். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள டாப் 100 பட்டியலில் 50வது இடத்தில் உள்ளார்.
3ம் இடத்தில் ZOHO நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 6 பில்லியன் டாலராகும். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள டாப் 100 பட்டியலில் 47வது இடத்தில் உள்ளார்.
2ம் இடத்தில் முருகப்பா நிறுவனத்தின் நிறுவனர் எம்எம் முருகப்பா உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 8.3 பில்லியன் டாலராகும். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள டாப் 100 பட்டியலில் 33வது இடத்தில் உள்ளார்.
இறுதியாக, நம்பர் ஒன் இடத்தில் HCL நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 33.2 பில்லியன் டாலராகும். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள டாப் 100 பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக