![]() |
![]() |
ராதா மனோகர் : யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் மட்டுமல்ல கேரளம் ஆந்திரம் கர்நாடகம் ஒடிஷா போன்ற மாநிலங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு .
உதாரணமாக இலங்கையின் கரையோர பகுதிகள் முத்து குளிப்பில் உலக புகழ் பெற்ற இடங்களாக இருந்திருக்கிறது
வடமேற்கு பகுதியில் உள்ள மன்னார் கற்பிட்டி நீர்கொழும்பு போன்ற பகுதிகளும் கிழக்கு மாகாண மட்டக்களப்பு போன்ற பகுதிகளிலும் முத்து குளிப்பு பெரிய அளவில் நடந்திருக்கிறது.
சுமார் 1960 ஆம் ஆண்டுவரை இத்தொழில் நடந்திருக்கிறது.
அரபு நாடுகளில் இருந்து முத்துக்களை வாங்குவதற்கும் முத்து குளிக்கவும் கூட ஏராளமானோர் வந்திருக்கிறார்கள்
இவர்களின் வழித்தோன்றல்கள் கூட கணிசமான அளவில் இலங்கையில் தங்கி விட்டார்கள்.
அதிக அளவிலான முத்து குளிப்பவர்கள் தமிழகம் மாத்திரம் இல்லாமல் ஆந்திராவில் இருந்தும் வந்திருக்கிறார்கள்.
இவர்களில் பெரும்பாலும் முத்து குளிக்கும் காலம் முடிந்த பின்பு திரும்பி போய்விடுவர்கள்
சிலர் திரும்பி போகாமல் தங்கியும் விடுவார்கள்
இலங்கையின் முத்து குளிப்பு பற்றி உலக புகழ் பெட்ரா நஷனல் ஜியோகிராபி மிக விரிவான கட்டுரைகளை அன்று வெளியிட்டிருக்கிறது.
எந்த அளவுக்கு முத்து குளிப்பு நடந்திருக்கிறது என்பதை அறிவதற்கு ஒரு சுவாரசியமான செய்தி இருக்கிறது.
1960 இல் முத்து குளிப்பு அனுமதி வழங்கியதில் சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் இலங்கை அரசுக்கு பருமனாக கிடைத்திருக்கிறது என்ற செய்தி உள்ளது.
1960 இல் இரண்டு இலட்சம் என்பது மிக பெரிய தொகை!
இந்த தொழில் இப்போது ஏன் கைவிடப்பட்டுள்ளது என்பது பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட வேண்டும்!
விஜயவாடாவில் இப்போதும் இத்தொழில் நடக்கிறது
குடிப்பரம்பல்கள் சுமார் எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இருந்திருக்கிறது .
இலங்கை இந்திய தொடர்பு என்றதும் எல்லோரும் மலையக மக்கள் பற்றியே பேசுவார்கள் .
ஆனால் வடக்கு கிழக்கு மேற்கு பகுதிகளில் உள்ள தமிழர்களும் கூட ஏராளமான இந்திய தொடர்புகள் உடையவர்கள்தான் .
இது பற்றி போதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.
மேலும் நீர்கொழும்பு புத்தளம் போன்ற மேற்கு இலங்கையில் உள்ள தமிழர்கள் பலரும் பாதி சிங்களவர்களாக மாறிவிட்டனர்
பெரும்பான்மை இனத்தோடு ஓரளவு கலந்து விட்டனர் .
இவர்களின் வரவு பெரும்பாலும் புதுக்கோட்டை தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து ஆரம்பித்தது என்று கூறப்படுகிறது .
இந்த பகுதிக்கும் தூத்துக்குடிக்கு உள்ள தொடர்பு மிகவும் நெருக்கமானது .
புலிகளின் தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை போன்றவர்கள் இந்த தொடர்புகளை உள்ளவர்கள்தான் இவர் இலங்கையின் பிரதமராக வரக்கூடிய வாய்ப்புடன் இருந்தவராகும்.
புலிகள் இவரை கொன்றமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
யாழ் நகரை ஒட்டிய பகுதிகளில் அந்த காலத்தில் பிரபலமாக இருந்த உணவு சாலைகள் பெரிதும் தென்னிந்தியர்கள் தொடர்பு உணவைத்தான் ( தாமோதர விலாஸ் . பரீட்சித்து விலாஸ் .தில்லைபிள்ளை கிளப் . சுபாஷ் கபே இன்னும் பல.)
அப்போதெல்லாம் குடிவரவு சட்டங்கள் பெரிதாக இருந்திருக்கவில்லை .இருந்தாலும் அவை அமுல் படுத்த படவில்லை.
அவர்கள் யாழ்ப்பாண சமூகத்தவர்களாகவே எந்த சலசலப்பும் இல்லாமல் கலந்துவிட்டனர் .
புதிய தீவுக்கு பஞ்சம் பிழைக்க வந்தாலும் தங்கள் ஊர் பாரம்பரியம் மறக்காமல் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது .
இந்த விடயம் பற்றி போதிய ஆய்வு மேற்கொள்ள பலரும் தயங்குகிறார்கள் என்று தெரிகிறது
ஏற்கனவே முழு தமிழர்களையும் கள்ளத்தோணிகள் என்று சிங்கள தீவிர வாதிகள் கூறும்பொழுது இது போன்ற ஆய்வுகள் வீண் விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்று கருத இடம் உண்டு .
இங்கே யாழ்ப்பாணத்தில் மட்டும் உள்ள சில ஊர்களின் பெயர்களை தந்துள்ளேன் ..
இதர பகுதிகளின் ஊர் பெயர்களையும் ஆய்வு செய்தால் பல வரலாற்று செய்திகளை அறியலாம்
அச்சுவேலி , அராலி, அரியாலை, அளவெட்டி, ஆவரங்கால்,ஆனைக்கோட்டை ,இணுவில், இடைக்காடு, இருபாலை, இளவாலை, உடுவில் ,உரும்பிராய் ,ஊரெழு, ஏழாலை ,கட்டுடை, கந்தர்மடம், கந்தரோடை, கரந்தன் ,கரையூர் ,காங்கேசன்துறை ,
கட்டப்பிராய் ,குப்பிளான், குருநகர் ,கீரிமலை ,குரும்பசிட்டி கொக்குவில், கொல்லன்கலட்டி, கொழும்புத்துறை ,கோண்டாவில் ,கோப்பாய் சங்கானை சங்குவேலி சண்டிலிப்பாய் சித்தன்கேணி சில்லாலை சுண்டிக்குழி சுதுமலை சுழிபுரம் சுன்னாகம் தாவடி திருநெல்வேலி தெல்லிப்பழை தொல்புரம் நந்தாவில் நல்லூர் நவாலி நாவாந்துறை நாயன்மார்கட்டு நீர்வேலி நீராவியடி பண்டத்தரிப்பு பண்ணாகம்
பலாலி பன்னாலை பனிப்புலம் பாசையூர் புத்தூர் புன்னாலைக்கட்டுவன் பொன்னாலை மல்லாகம் மயிலிட்டி மாசியப்பிட்டி மாதகல் மாவிட்டபுரம் மானிப்பாய் மூளாய் யாழ்ப்பாண நகரம் வசாவிளான் வடலியடைப்பு வட்டுக்கோட்டை வண்ணார்பண்ணை அந்தணன் திடல் அறுகுவெளி இடைக் குறிச்சி உசன் எழுதுமட்டுவாள் ஒட்டுவெளி கச்சாய் கைதடி கெருடாவில் கேரதீவு கொடிகாமம் சரசாலை சாவகச்சேரி தச்சன்தோப்பு நாவற்காடு நாவற்குழி
நுணாவில் பளை மட்டுவில் மந்துவில் மறவன்புலவு மிருசுவில் மீசாலை முகமாலை வரணி விடத்தல் அம்பன் அல்வாய் ஆத்தியடி ஆளியவளை உடுத்துறை உடுப்பிட்டி உடையார்துறை கட்டைக்காடு கரணவாய் கரவெட்டி கம்பர்மலை கற்கோவளம் குடத்தனை குடாரப்பு கெருடாவில் சுண்டிக்குளம் செம்பியன்பற்று வதிரி வளலாய் தும்பளை துன்னாலை தொண்டமனாறு நல்லதண்ணித்தொடுவாய் நாகர்கோயில் நெல்லியடி பருத்தித்துறை புகலிடவனம் புலோலி பொலிகன்டி மணல்காடு மருதடிக்குளம் முள்ளியான்
வண்ணான்குளம் வல்லிபுரம் வல்வெட்டித்துறை வல்வெட்டி வல்லை வியாபாரிமூலை வெற்றிலைக்கேணி இறுப்பிட்டி குறிகாட்டுவான் பெருங்காடு மடத்துவெளி களபூமி காரைநகர் கோவளம் தங்கோடை
அல்லைப்பிட்டி மலையாளபுரம் ஊர்காவற்றுறை
கரம்பொன் சரவணை சுருவில் நாரந்தனைபரித்தியடைப்புபுளியங்கூடல்மண்கும்பான்வேலணைஆலங்கேணிகளபூமிகாரைநகர் குந்துவாடி கோவளம் சாமித்தோட்டமுனை தங்கோடை தீர்த்தக்கரை நெடுந்தீவு பெரியான்துறை பூமுனை மாவலித்துறை வெள்ளை எழுவைதீவு நயினாதீவு மண்டைதீவு கோண்டாவில் பொற்பதி கல்வியங்காடு கரவெட்டி கூழவடி அனலைதீவு சிறுபிட்டி வட்டுக்கோட்டை அச்செழு வறுத்தலைவிளான் மடத்தடி மல்லாகம் நாவாந்துறை







மீள் பதிவு


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக