ராதா மனோகர் : தமிழர்களின் ஆங்கில மேலாண்மை குறிவைக்கப்படுகிறது!
நாம் ஆங்கிலத்தில் பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருப்பது வெறும் உளறல் அல்ல. நயவஞ்சகம்!
குறிப்பாக தமிழகத்தின் ஆங்கில மேலாண்மையை அழித்து ஒழிப்பதற்கான முதல் படிதான் இந்த நயவஞ்சக பேச்சு.
கல்வி பொருளாதாரம் மருத்துவம் மட்டுமல்லாமல் தமிழர்கள் கடல் கடந்தும் அகல கால் வைப்பதற்கும், தமிழகத்தின் இரு மொழி கொள்கையும் அதன் காரணமாக பெற்ற ஆங்கில மேலாண்மையும் முக்கிய காரணமாகும்.
தமிழர்களின் ஆங்கில மேலாண்மையை ஒழித்து விட்டால் மட்டுமே தமிழர்களை இனி அடிமை படுத்த முடியும் என்ற முடிவுக்கு வடநாட்டு சங்கிகள் வந்துவிட்டார்கள்.
இந்த நிமிடம் வரை அந்த இலக்கை நோக்க்கி பயணிக்க முயற்சி செய்கிறார்கள்.
வட இந்திய மாநில மொழிகளை பேசுவோர் மீது உளவியல் ரீதியான ஒரு தாக்குதலை தொடுத்து வெற்றிகரமாக இந்தியை திணித்து விட்டார்கள்.
இன்று அவர்கள் தங்கள் வீடுகளில் ஓரளவாவது போஜ்புரி சந்தாலி ஹரியான்வி மைதிலி போன்ற மொழிகளை பேசினாலும்,
வெளியில் தங்களை ஹிந்தி மக்கள் என்று அழைப்பதை கவுரவம் என்று நம்புகிறார்கள்.
இது எப்பேர்ப்பட்ட வீழ்ச்சி?
வட இந்திய மண்ணின் மைந்தர்களை ஏமாற்றிய கூட்டம் திராவிட மக்களையும் ஏமாற்றி விடலாம் என்று நம்புகிறார்கள்.
இந்த நம்பிக்கை அவர்களுக்கு வருவதற்கு தென்னிந்தியாவில் கொஞ்சம் முளைவிட்டு கொண்டிருக்கும் பாஜகவின் வளர்ச்சியும் ஒரு காரணம்தான்/
இவர்கள் எங்கே சுற்றி எங்கே வந்து நிற்பார்கள் என்பதை திராவிட தலைவர்கள் சுமார் ஒரு நூறாண்டுகளுக்கு முன்பே கண்டு பிடித்து சொல்லிவிட்டார்கள்
நீதிக்கட்சி வரலாறு அதை தெளிவாகவே சொல்கிறது!
எந்த காலத்திலும் தமிழ் நாட்டில் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே அரசு மொழி.
தமிழ்நாட்டின் இந்த இருமொழி கொள்கை இப்போது தென்னிந்திய மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல் மகாராஷ்டிரம் போன்ற வடஇந்திய மாநிலங்களுக்கும் விஸ்தரிக்க படப்போகிறது,
பொறுத்து இருந்து பாருங்கள்,
திராவிடத்தின் இரு மொழி கொள்கையும் அதன் காரணமாக எழுச்சி பெற்ற ஆங்கில மேலாண்மையும் ஆர் எஸ் எஸ் / பாஜக சங்கிகளின் சரித்திரத்திற்கு இறுதி அத்தியாயம் எழுதப்போகிறது!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக