மின்னம்பலம் : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து பேசுவதன் மூலம் அதிமுகவைப் போல பாமகவும் பாஜக பிடிக்குள் போகப் போகிறது என திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை க. ராசேந்திரன் எச்சரித்துள்ளார். Ramadoss-Gurumoorthy Meeting
இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் விடுதலை க.ராசேந்திரன் கூறியுள்ளதாவது: பாமகவை மருத்துவர் ராமதாஸ் துவக்கிய போது பார்ப்பனர்களை கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று கூறினார்.
இப்போது பாமகவில் நடக்கும் குடும்பச் சண்டையை தீர்த்து வைக்க ராஜகுரு குருமூர்த்தி களம் இறக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில்மக்களுக்கு குருமூர்த்தி யார் என்று தெரியாது, ஆனால் அவர் தான் பாஜகவின் அதிகார மய்யம் அதிமுகவை இரண்டாக உடைத்ததில் இவரது பங்கு மிகவும் பெரியது.
ஓ. பன்னீர்செல்வத்தை தர்மயுத்தம் செய்ய உத்தரவிட்டவர் இதே ஆடிட்டர் தான். அதிமுகவினர் ஆண்மையற்றவர்கள்: காலில் விழக்கூடியவர்கள் என்று அவமானப்படுத்தினார்.
ஒரு வழியாக எடப்பாடியின் அதிமுக பாஜகவின் பிடிக்குள் வந்துவிட்டது. தினகரன் ஓபிஎஸ் குழுக்கள் பாஜகவின் உத்தரவுக்காகக் காத்து கிடக்கின்றன.
இப்போது பாமகவும் பாஜக பிடிக்குள் போகிறது.
தமிழ்நாட்டில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சியை எப்படியாவது ஒழித்தாக வேண்டும் என்று தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பாஜகவில் இருக்கும்”சூத்திர” அண்ணாமலைகளோ, நயினார்களோ, தமிழிசைகளோ சாலை ஓரத்தில் கூவுவதற்குத்தான் உரிமை. ஆனால் கட்சியின் அதிகாரம் மக்களுக்கே தெரியாத ஆடிட்டர் குருமூர்த்தியிடம்தான்.
உண்மையில் சொல்லப் போனால் இப்போது நடப்பது ஆரிய திராவிடப் போராட்டம் தான். இதில் நிச்சயம் திராவிடம் வென்றே தீரும். இவ்வாறு விடுதலை க.ராசேந்திரன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக