வியாழன், 21 நவம்பர், 2024

EXIT POLL : மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்ற போவது யார்?

 மின்னம்பலம் - christopher  ; மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் இன்று (நவம்பர் 20) முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை வரும் நவம்பர் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் ஆளும் கூட்டணி அரசான பாஜக – சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து மஹாயுதி கூட்டணி என்ற பெயரில் களமிறங்கின.



அதேபோல் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்து மஹா விகாஸ் அகாதி என்ற பெயரில் போட்டியிட்டன.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்த நிலையில், 58.22% வாக்குகள் பதிவாகி உள்ளன.

கடந்த சில தேர்தல்களாக தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அவ்வளவு துல்லியமாக இல்லாமலும், சில சமயங்களில் கருத்துக் கணிப்புக்கு மாறான முடிவுகளும் வெளியாகிவருகிறது.

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Pollster Matrize

பாஜக கூட்டணி – 150 – 170

காங்கிரஸ் கூட்டணி – 110 -130

மற்ற கட்சிகள் –

P-Marq

பாஜக கூட்டணி – 137 -157

காங்கிரஸ் கூட்டணி – 126 -146

மற்ற கட்சிகள் – 2-8

People’s Pulse

பாஜக – 175 – 195

காங்கிரஸ் – 85 -112

பிற கட்சிகள் –  7 -12

Republic

பாஜக – 137 -157

காங்கிரஸ் – 126 -146

பிற கட்சிகள் – 2-8

Times Now-JVC

பாஜக – 105 -126

காங்கிரஸ் – 68 -91

பிற கட்சிகள் – 8 -12

மேற்குறிப்பிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் படி பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி 128 மற்றும் 195 க்கு இடையேயான இடங்களின் எண்ணிக்கையுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியா கூட்டணியின்  மஹா விகாஸ் அகாதி 85 முதல் 146 இடங்களைக் கைப்பற்றும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மற்ற பங்கேற்பாளர்கள் இரண்டு முதல் 23 இடங்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை: