ராதா மனோகர் : 1 January 2019 - . கேரளாவை அதிரவைத்த வனிதா மதிலுகள் என்ற மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வு!
ஆர் ஆர் எஸ் இன் பெண்ணடிமை கருத்துக்களுக்கு எதிராக கேரளா முழுவதும் பெண்கள் நடத்திய அந்த மனித சங்கிலி போராட்டம் அவ்வளவு சுலபத்தில் மறந்து விடமுடியாதது . .
இந்த வனிதா மதிலுகள் நிகழ்வின் எழுச்சியை குறித்து பல பாடல்கள் வெளியானது .
அவற்றில் இந்த பாடல் மிகவும் உத்வேகம் ஊட்டுவதாக இருக்கிறது .
கேரளாவில் பெண்கள் மீது நிலவிய கொடிய அடக்கு முறைகளை மீண்டும் கொண்டுவர முயலும் சனாதனவாதிகளுக்கு சம்மட்டி அடியாக இந்த பாடல் அமைந்துள்ளது .
அந்த கொடுமைகளை மீண்டும் "திரிச்சு கொண்டு வராண்டா".... என்ற வரிகள்
ஆயிரம் ஆண்டு அடிமைத்தனத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று சங்கிகளின் செவிகளில் இடி முழக்கமாக இருக்கட்டும்.
எத்தனையோ பெண் உரிமை எழுச்சி பாடல்களை கேட்டிருக்கிறேன்.
ஆனாலும் இந்த பாடல் மீண்டும் மீண்டும் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கிறது.
இன்று கேரளா வயநாடு இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
இன்னும் சில மணி நேரங்களில் அமரர் ராஜிவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி அங்கு வெற்றி கொடி நாட்டுவார்!
பிரியங்கா காந்தியின் எழுச்சி புதிய இந்தியாவின் வெற்றிக்கு கட்டியம் கூறும்
இந்த பாடல் அவரின் வெற்றி முழக்கமாகட்டும்!
Official theme song of Vanitha Mathil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக