ஞாயிறு, 6 அக்டோபர், 2024

ஹரியானா ஜம்மு காஷ்மீர் எக்சிட் போல் .. காங்கிரஸ் கூட்டணி மொத்தமாக அள்ளுகிறது.. திமுகவின் மகளிர் உரிமை தொகை ஹைலைட்

 tamil.oneindia.com -  Shyamsundar :   மோடிக்கு சிம்ம சொப்பனமாக மாறிய மகளிர் உரிமைத்தொகை! எக்சிட் போல் கணிப்பை பாருங்க.. பாஜகவிற்கு ஷாக்
சென்னை: தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட உரிமை தொகை திட்டம் நாடு முழுக்க பல மாநிலங்களில் அமலுக்கு வர தொடங்கி உள்ளது. ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் இந்த திட்டம் தேர்தல் சமயத்தில் பெரிய அளவில் கவனம் பெற்றது. காங்கிரஸ் மகளிர் உரிமை தொகை திட்டத்தை வாக்குறுதிகளாக அறிவித்து இருந்தது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டப் பேரவையின் 90 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 3 கட்டங்களாக 2024 செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 1 வரை சட்டமன்றத் தேர்தல்கள் நடந்தது. வாக்குகள் எண்ணப்பட்டு அக்டோபர் 8, 2024 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.



haryana assembly election 2024 jammu kashmir assembly election 2024 tamil nadu government notification magalir urimai thogai
தொடக்கூடாத இடம்.. பெண் நிர்வாகிக்கு காங்கிரஸ் மேடையிலேயே பாலியல் தொல்லை.. யார் அந்த பிரமுகர்?

ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ்-தேசிய மாநாட்டு (NC) கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஐந்து முக்கிய உத்தரவாதங்களை நிறைவேற்றும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறிவித்துள்ளார்.

காங்கிரஸின் ஐந்து வாக்குறுதிகள் பின்வருமாறு:

1) ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹25 லட்சம் வரையிலான காப்பீட்டுத் திட்டம்.
ஹரியானா சட்டசபை தேர்தல் 2024 வாக்குப்பதிவு LIVE:மாலை 3 மணி நிலவரப்படி 49.13% ஓட்டுப்பதிவு

2) காஷ்மீரி பண்டிட் பிரிவினருக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவது.

3) ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பெண் குடும்பத் தலைவிகளுக்கு ₹3,000 மாத வழங்கப்படும். அதாவது உரிமைத்தொகை வழங்கப்படும். பெண்களுக்கு ₹5 லட்சம் வட்டியில்லா கடன் சேர்க்கும்.

4) பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஒரு நபருக்கு 11 கிலோ தானியங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
ஹரியானா சட்டசபை தேர்தல்.. ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவு!

5) OBC கள் அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளைப் பெற இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படும் .

உரிமை தொகை திட்டம்: இதன் மூலம் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட உரிமை தொகை திட்டம் நாடு முழுக்க பல மாநிலங்களில் அமலுக்கு வர தொடங்கி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் இந்த திட்டத்தை காங்கிரஸ் அறிவித்தது.

அதேபோல் ஹரியானாவில் காங்கிரஸ் ரூ.2000 பெண்களுக்கு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஹரியானாவில் இருக்கும் 90 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. வருகிற 8ம் தேதி அங்கே வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இப்போது இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் வெல்லும் என்று எக்சிட் போல் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

எக்சிட் போல்: ஹரியானா எக்ஸிட் போல் வெளியாகி வரும் நிலையில், அங்கே காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்து உள்ளன. பாஜக படு தோல்வி அடையும், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்று ரீபப்ளிக் -மெட்ரைஸ் எக்சிட் போல் கணிப்பு வெளியிட்டு உள்ளது.

ரீபப்ளிக் -மெட்ரைஸ் கருத்துக்கணிப்பு: காங்கிரஸ் 55-62 இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறதுரிபப்ளிக்-மேட்ரைஸ் கருத்துக்கணிப்பின்படி, பாஜக 30.30% வாக்குகளுடன் 18-24 வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 35.80% வாக்குகளுடன் 55-62 வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. JJP+ 0-3 இடங்களை 6.60% வாக்குகளுடன் பெறும் வாய்ப்புகள் உள்ளன.

பாஜக 18-24; 30.30%
INC 55-62; 35.80%
JJP+ 0-3; 6.60%
INLD+ 3-6; 12.10%
இந்தியன் 2-5; 15.20%

அதேபோல் பாஜக படு தோல்வி அடையும், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்று Peoples Pulse அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது. ஹரியானாவில் காங்கிரஸ் 55 இடங்களைக் கைப்பற்றும் என்று Peoples Pulse எக்ஸிட் போல் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹரியானாவில் பாஜக 26 இடங்களைக் கைப்பற்றும் - Peoples Pulse எக்ஸிட் போல் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றும்- எக்ஸிட் போல் கணிப்பு தெரிவித்துள்ளது.

சிம்ம சொப்பனம்: தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் ஏற்கனவே கர்நாடகா, இமாச்சலப்பிரதேசம்,மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளன. அங்கே காங்கிரஸ் வெற்றிபெற இந்த திட்டம் முக்கிய காரணமாக இருந்தது. தமிழ்நாட்டின் இந்த திட்டம் நாடு முழுக்க பல நாடுகளுக்கு ரோல் மாடல் திட்டமாக மாறி உள்ளது. இப்போது மாநில தேர்தல்களில் இந்த திட்டம் பிரதமர் மோடிக்கும் , பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக மாறி உள்ளது.

கருத்துகள் இல்லை: