வியாழன், 8 ஆகஸ்ட், 2024

Bangaladesh முகம்மது யூனுஸ் வங்கதேச இடைக்கால பிரதமராக பதவி ஏற்கிறார் - நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா்

  dinamani.com : வங்கதேச இடைக்கால அரசின் தலைவராகவுள்ள நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா் முகமது யூனுஸ் இன்று பிற்பகல் தலைநகர் டாக்கா வந்தடைந்தார்.
வங்கதேசத்தில் போராட்டங்கள் வன்முறையாக மாறியதையடுத்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். பின்னர் வங்கதேச நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் முகம்மது ஷஹாபுதீன் அறிவித்தார்.


இதையடுத்து வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. வங்கதேசத்தில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர் போராட்ட அமைப்புகள்,நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா் முகமது யூனுஸ் தலைமை ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

அதன்படி, வங்கதேச இடைக்கால அரசு இன்று(ஆக. 8) இரவு 8 மணிக்கு பொறுப்பேற்க உள்ளது. அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்க உள்ளார். தலைமைக் குழுவில் 15 பேர் இடம்பெற வாய்ப்புள்ளதாக ராணுவத் தளபதி வாக்கா்-உஸ்-ஸமான் தெரிவித்தார்.

பதவியேற்புக்காக துபாயில் இருந்து இன்று பிற்பகல் டாக்கா வந்த முகமது யூனுஸை ராணுவ தலைமைத் தளபதி வாக்கா்-உஸ்-ஸமான், மாணவர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்கள் வரவேற்றனர்.

முன்னதாக, வங்கதேசத்தின் பல பகுதிகளில் வன்முறைப் போராட்டங்கள் ஓயாத நிலையில் அவற்றைக் கைவிடுமாறு முகமது யூனுஸ் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை: