மாலைமலர் : பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்ரவதை வழக்கில் இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் விசாரிக்க தொடங்கியது. போலீஸ் நிலையங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள் 'நைட் விஷன்' திறனுடன் இருக்க வேண்டும்.
புதுடெல்லி: நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சித்ரவதைகளை தடுக்க அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்ரவதை வழக்கில் இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் விசாரிக்க தொடங்கியது.
இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2021-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் விவகாரத்தில் மாநில, மாவட்ட அளவிலான மேற்பார்வை குழுக்களை அமைக்க வேண்டும்.
கண்காணிப்பு கேமராக்களை பொருத்த தேவையான நிதியை மாநில அரசுகள் உடனடியாக ஒதுக்க வேண்டும்.
போலீஸ் நிலையங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள் 'நைட் விஷன்' திறனுடன் இருக்க வேண்டும்.
அவற்றின் பதிவுகளை 18 மாதங்களுக்கு பாதுகாக்க வேண்டும்.
போலீஸ் நிலையங்களில் கைதிகள் தாக்கப்படுவது, சித்ரவதை, மரணம் போன்ற புகார்கள் தெரிவிக்கப்படும்பட்சத்தில் மாநில மனித உரிமை ஆணையமும், கோர்ட்டுகளும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கேட்டுப்பெற வேண்டும்.
சி.பி.ஐ., என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு, பொருளாதார நுண்ணறிவு பிரிவு, தீவிர குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக