புதன், 23 ஆகஸ்ட், 2023

கண்டி பெரஹெரா விழாவில் திமிறிய யானை! பெண் ஒருவர் காயம்

ilakkiyainfo.com : கண்டி பெரஹெரா விழாவில் திமிறிய யானை! பெண் ஒருவர் காயம்
கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையின் இரண்டாம் நாள் கும்பல் பெரஹெரவின் போது விஷ்ணு தேவாலயத்தைச் சேர்ந்த இரண்டு யானைகள் அட்டகாசம் செய்ததில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இரண்டு யானைகளும் வன்முறையில் ஈடுபட்டதை அடுத்து முன்னோக்கி வந்தன. அதன் பின்னர், ஸ்ரீ தலதா மாளிகைக்கு சொந்தமான மேலும் இரண்டு யானைகளும் வன்முறையில் ஈடுபட்டன.


தலதா மாளிகைக்கு சொந்தமான இரண்டு யானைகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு வீதிகளில் ஊர்வலமாகச் சென்றன. ஏனைய இரண்டு யானைகளும் குயின்ஸ் ஹோட்டல் அருகே கட்டப்பட்டிருந்தன.

சம்பவத்தின் போது, ​​பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலும் மூவர் பீதியடைந்து கண்டி ஏரியில் (நுவர வெவ) வீழ்ந்துள்ளனர்.

மூவரையும் காவல் துறையின் உயிர்காக்கும் பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: