tamil.asianetnews.com - vinoth kumar : ஈரோடு கொல்லம்பாளையம் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் மனோகரன். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி புவனேஸ்வரி (53). அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு மனோகரன் நடை பயிற்சிக்காக வெளியே சென்று விட்டார். வீட்டில் புவனேஸ்வரி மட்டும் இருந்துள்ளார்.
மனோகரன் நடைபயிற்சி முடித்து கொண்டு பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் கட்டிலில் புவனேஸ்வரி கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் புவனேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் ஆசிரியை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக