மாலை மலர் : டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குறுகிய காலத்தில் பிரம்மாண்டமான கூட்டத்தை கே.என்.நேரு ஏற்பாடு செய்துள்ளார்.
திருச்சியில் நடந்த பொதுக் கூட்டம் தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தில் அடித்தளமிட்டது. திருச்சிக்கும், திமுகவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. திமுகவின் கோட்டை திருச்சி.
பயிற்சி பாசறை கூட்டத்திற்கு வந்துள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துகள். சமூக வலைதளங்களில் செயல்படுவது குறித்தும் இந்த கூட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியே அடிப்படை என நாம் பணியாற்றி வருகிறோம்.
கொரோனா காலத்தில் திமுக தொண்டர்களை இழந்து மக்கள் பணி ஆற்றினோம். வெற்றி ஒன்றே நமது இலக்காக இருக்க வேண்டும். வெற்றிக்கான சரியான வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.
நமது சாதனைகளை மக்களுக்கு தொடர்ந்து எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து உடனடியாக தீர்க்க வேண்டும்.
உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்களர்களின் மொத்த விபரங்களையும் அறிந்திருக்க வேண்டும். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கொண்டு வரும் தகுதி வாய்ந்த கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றப்படும்.
சில வீடுகளில் நமக்கு வரவேற்பே இல்லாமல் இருக்கலாம். அதற்காக விட்டு விட கூடாது.
யாரும் குறை கூற முடியாத அளவிற்கு ஆட்சி நடந்து வருகிறது. அமைச்சர்கள் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பமும் ஏதோ ஒரு வகையில் பயனடையும் திட்டங்களை பார்த்து பார்த்து செய்கிறோம்.
யாரும் குறை கூற முடியாத அளவிற்கு ஆட்சி நடந்து வருகிறது. தற்போது, என்னிடம் வழங்கப்படுகின்ற கோரிக்கை மனுக்கள் குறைந்து கொண்டே வருகிறது.
எங்களுக்குள் எவ்வளவு பிரச்சினைகள் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் ஆட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை.
மகளிர் வளர்ச்சிக்கான ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. யார் எந்த பொய் பிரசாரத்தை செய்தாலும், நாம் நமது சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்ய வேண்டும்.
சமூக வலைதளங்கள் மூலம் நம் மீதான அவதூறுகளுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும்.
ஆளுநரை மாற்ற வேண்டாம். அவரே தொடரட்டும். நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ ஆளுநர் நமக்காக பிரசாரம் செய்கிறார்.
தமிழகத்தில் 40 தொகுதிகள் மட்டுமல்ல இந்தியா முழுவதும் நமது கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
மீண்டும் பாஜக வென்றால், ஜனநாயகம் இருக்காது. வரும் பாராளுமன்ற தேர்தல் மிக மிக முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக