திங்கள், 24 ஜூலை, 2023

முருகன் சமண கடவுள்? சரவணா - சமணம் மருவி ச்ராமணம்(sramana) என்றுதான்

Yahqappu Adaikkalam  : முருகனும் சரவண பெயரும்
முருகனுக்கு சரவணா என்ற பெயர் எப்படி வந்தது என்று தெரியுமா? இதை நான் தேடி போகும் போது யாரிடமும் பதில் இல்லை ,பல அர்த்தம் இல்லாத கதை தான் இருக்கிறது...
வடநாட்டில் சமணம் மருவி ச்ராமணம்(sramana) என்று அழைப்பர் இது கடும் தவத்தால் வீடுபேறு அடைகிற சமயங்களுக்கு உகந்த சொல்லாக வந்தது.( நாம் "சிரமம்" என்று சொல்வதும் இந்த மூலம் கொண்டிருக்கலாம்)
சைனர்கள், பௌத்தர்கள், அசிவிக்கர்(ஆசீவகர்), சாவக்கர் எல்லாம் இந்த "ச்ராமணா" சொல்லில் அடக்கம் ஆனால் இந்த சொல் பிற்காலத்தில் சைனத்துக்கு(Jain) மட்டும் பயன்பட்டு வந்தது. மௌரிய நாட்டிலிருந்து வந்த சைனர்கள் இப்ப உள்ள பெங்கலூரில் ஒரு வெள்ளைக்குளம் என்ற இடத்தில் தங்கியதால் அதற்கு சரவணபெலகுளா என்னும் கன்னடச் சொல் வந்தது.


இந்த சமணர்(இங்கே திகம்பர ஜைனர்) தங்கிய இடத்தின் பெயர் தான் சரவணபெலகுளா( வெள்ளைக்குளம்) இன்னும் இருக்கிறது, முருகனுக்கு சரவணா என்ற கன்னட பெயர் உள்ளது அல்லவா?  
அமணம்(தமிழ்) - சமணம்(பிற்காலத்து தமிழ்) - ச்ராமணம்(பிராக்கிருதம்)- சரவணம்(கன்னடம்) , சரவணன் - சரவணப்பொய்கையில் (சரவணபவ குளத்தில்) தோன்றியவன்
நாம் இவ்வளவு காலமாக வரலாற்று சொல்லும் சமண முருகனை தான் வைத்திருக்கிறோம் , முருகனுக்கு சரவணா என்ற பெயர் இருப்பதே இதற்கு சான்று....

கருத்துகள் இல்லை: