வெள்ளி, 15 ஜூலை, 2022

கொழும்பில் கொண்டாட்டம் -ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்து வந்த வரலாற்று பாதையில் சில பக்கங்கள்

 ராதா மனோகர் :  2005 ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிக்கு மிக அருகில் இருந்தார்
குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குகள் பெருவாரியாக ரணிலுக்கே கிடைக்கும் நிலை இருந்தது
இந்நிலையில் வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குகளை எப்படியாவது தடுத்து விட்டால் போதும் என்ற சூழ்நிலையில் ... லஞ்சம் மூலம் அதை சாதித்தார் .. இது வரலாறு
வாங்கிய பணத்திற்காக ராஜபக்சேவை யதார்த்தவாதி என்று பிரபாவால் புகழப்பட்ட  வேடிக்கை எல்லாம் அரங்கேறியது
இயக்கத்தின் கட்டளைப்படி தமிழர்கள் அத்தேர்தலை புறக்கணித்தார்கள்  ..
மீறி வாக்களிக்க சென்றோர் அந்த அன்பான சர்வாதிகாரிகளால் தாக்கப்பட்டார்கள்
இருவரும் சேர்ந்து ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை அன்று களவாடினார்கள்
கால சக்கரம் சுழன்றது ..இப்போது இடைவேளை
காலப்போக்கில் யாதார்த்தவாதியின் குடும்ப சர்வாதிகாரம் தங்களிடம் இருந்து லஞ்சம் பெற்றவரை போட்டு தள்ளியது  காலச்சக்கரம் மீண்டும் சுழன்றது

 
இப்போதும் ஒரு  இடைவேளை....
மூன்றாவது தடவையும் அந்த குடும்பம் பதவிக்கு வந்தது
இம்முறை யதார்த்தம் வேறுமாதிரி விளைந்தது
யதார்த்தவாதிகளின் உண்மையான யதார்த்தம் மக்களுக்கு உறைத்தது.
இத்திரைப்படத்தை இறுதிக்காட்சி
2005 இல்  யாரிடம் இருந்து ஜனாதிபதி பதவியை திருடினார்களோ அவரிடமே கையளிக்க வேண்டிய யதார்த்தம் பூதாகரமாக எழுந்தது
யதார்த்தத்தில் ரணில் தற்போது ஒரு வெறுமையான மனிதர் .
தேர்தலில் தொடர் தோல்விகளை  அடைந்து  காணாமல் போய்க்கொண்டிருந்தார்
அரசியலில் இப்படி ஒரு மனிதர் இருக்கிறார் என்று கூட பலரும் மறந்து விட்டார்கள்

ரணில் விக்கிரமசிங்காவை இலங்கை அரசியல் தொடர்ந்து     தோற்கடித்தாலும் .
அவரின் பொருளாதார கொள்கைகள்
அவரின் மதசார்பற்ற தன்மை
அவரின் நேர்மை போன்ற பல குணாம்சங்களால் உலகின் நற்பெயரை நம்பிக்கையை பெற்றிருந்தார்
உலகில் நல்ல அபிப்பிராயம்  திரு ரணில் விக்கிரமசிங்கா பெற்ற மிக பெரிய வெற்றி.

இந்த வெற்றிதான் இன்று  ரணில் விக்கிரமசிங்கவை  அழைத்து ஜனாதிபதி பதவியை  கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தை  இலங்கைக்கு உருவாக்கி உள்ளது
உண்மையான யதார்த்தவாதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காதான்   ராஜபக்சாக்கள் அல்ல !

கருத்துகள் இல்லை: