ஞாயிறு, 10 ஜூலை, 2022

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா! பலரும் அறியாத மறுபக்கம்

Sri Lanka - Ranil Wickremesinghe warns of a food shortage in Sri Lanka -  Telegraph India

Ashroff Ali-அஷ்ரப் அலீ  :   இலங்கையில் பிறந்தமைக்காக முதன்முறையா வெட்கி தலை குனிகின்றேன்.
ரணில் என்ன செய்தார்?
* 49 வருட அரசியல்வாழ்வில் ஒருநாள் கூட சம்பளம், கொடுப்பனவு, வாகன பர்மிட், தனிப்பட்ட பிரதிபலன் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை
* ரணிலின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவின் சம்பளம் பல்கலைக்கழத்தில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்விக்கு நிதியுதவியாக அன்பளிப்புச் செய்யப்பட்டது
* ரணில் மற்றும் பேராசிரியர் மைத்திரி தங்களின் தனிப்பட்ட வருமானத்தில் ஐந்து அநாதை இல்லங்களை நடத்தி வருகின்றனர். அதில் பயின்ற பலர் இன்று மருத்துவர்களாக, பொறியியலாளர்களாக, சிறந்த ஊடகவியலாளர்களாக மாறியுள்ளனர்
அப்படிப்பட்ட பேராசிரியர் மைத்திரி கடுமையான மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் தான் அவர்கள் வசித்த வீடு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது


ரணில் இம்முறை பிரதமராக பதவியேற்கும் ​போது வெறும் ஐந்து மில்லியன் டொலர் மட்டுமே இலங்கையின் கையிருப்பாக இருந்தது. அது தற்போதைக்கு 19 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது
தம்மிக பெரேரா போன்ற நீண்ட காலமாக வரி செலுத்தாதவர்களை வரி செலுத்த வைத்தார். கசினோ விளையாட்டுக்கு வரி விதித்து நாட்டுக்கு பாரிய வருமானத்தை ஈட்ட வழி செய்தார்.
ரணில் மீது ஆயிரம் கோபதாபம் இருந்தாலும் அவர் செய்த நல்ல விடயங்களை கவனித்துப் பார்த்தால் இந்த நாட்டில் இருக்கும் அரசியல் வியாதிகள் மத்தியில் ரணில் ஒரு அரசியல்வாதியாக இருக்கின்றார் என்பது மிகவும் தெளிவானது. அதைப் புரிந்து கொள்ள நடுநிலை மனது வேண்டும்.
Copied: Ashoff Ali

Ashroff Ali-அஷ்ரப் அலீ  : ரணிலின் வீடு எரிப்பு மாபெரும் சதி
1. ஆரம்பத்தில் ரணில் வீட்டின் அருகே போராட்டக்காரர்கள் இருக்கவில்லை. நான் முன்னர் பகிர்ந்த படத்தில் ரணில் வீட்டின் அருகே யாரும் எதிர்ப்பு போராட்டம் நடத்தவில்லை
2.தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி மற்றும்  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் போராட்டத்துக்காக  போராட்டக்காரர்கள் சென்று கொண்டு இருக்கும் போது எந்தத் தொடர்பும் இல்லாத ரணில் வீட்டருகே சிரசவின் நான்கு ஊடகவியலாளர்கள் கூட்டாக வந்து நின்று லைவ் கொடுக்க ஆரம்பிக்கின்றனர். (அதற்கு முன் அவர்கள் பிரிந்து நின்று வெவ்வேறு இடங்களில் இருந்தே லைவ் கொடுத்தனர்)
 3. அதையடுத்து அங்கிருந்த பொலிஸ் அதிகாரி நேரடியாக ஊடகவியலாளர்களை தாக்குகின்றார். அதுவும் நேரலையில் ஔிபரப்பாகின்றது. (எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் நேரலை ஔிபரப்பில் ஊடகவியலாளரைத் தாக்க மாட்டார். ஆகவே அவர் கூலிக்கு அமர்த்தப்பட்டிருப்பார். பெரும் தொகையொன்று கைமாறியிருக்கும்)
4. அதையடுத்து பொலிசாரின் தாக்குதலுக்கு ரணில் காரணம் என்று சிரச/சக்தி தொடர்ச்சியாக மக்​களை உசுப்பேற்றுகின்றது. புதிய நபர்கள் திடுதிப்பென்று வாகனங்களில் வந்து இறங்குகின்றனர்
5. வாகனங்களில் வந்து இறங்கியவர்களைக் கண்டதும் பொலிசார் பின்வாங்க,(ஏற்கெனவே திட்டமிட்டு கவனிக்கப்பட்டிருப்பார்கள். அந்த நன்றிக்கடன்) குறித்த  மர்ம நபர்கள் ரணில் வீட்டுக்குள் நுழைகின்றனர்
6. அவர்கள் உள்ளே நுழைந்ததும் மின்சாரம் தடைப்படுகின்றது. மின்சாரம் மீண்டும் வரும்போது வீடு தீப்பற்றி எரிகின்றது. ஆகவே தீ வைத்தவர்களை யாரும் அடையாளம் காணமுடியவில்லை
7. ரணில் வீடு தீப்பற்றத் தொடங்கும் வரை அவர் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமாச் செய்த தகவலை சிரச/ சக்தி ஊடகம் ஔிபரப்பவேயில்லை
இதற்கு மேலும் ரணில் வீட்டை அப்பாவி போராட்டக்காரர்கள் தானாக முன்வந்து தீவைத்தார்கள் என்று நீங்கள் நினைத்தால் உங்களை நினைத்து அனுதாபப்படுகின்றேன்.

கருத்துகள் இல்லை: