ஞாயிறு, 26 டிசம்பர், 2021

பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்.. பின்னணி பாடல்களை தாண்டி நடிப்பிலும் அசத்தியவர்

  Mari S -  tamil.filmibeat.com :  சென்னை: பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 78. சியான் விக்ரமின் தில் படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான "கண்ணுக்குள்ள கெளுத்தி" பாடல் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானவர் மாணிக்க விநாயகம்.
திருடா திருடி படத்தில் நடிகர் தனுஷின் தந்தையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மாணிக்க விநாயகம் பல படங்களில் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார்.
திரு .மாணிக்க விநாயகம் அவர்கள் இன்று மாலை அவரது இல்லத்தில் மாரடைப்பினால் காலமானார். அவருக்கு வயது 78. சியான் விக்ரமின் தில் படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான "கண்ணுக்குள்ள கெளுத்தி" பாடல் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானவர் மாணிக்க விநாயகம்.


சினிமாவில் 800க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய மாணிக்க விநாயகம் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் ஆன்மிக பாடல்கள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

தில், தவசி, கன்னத்தில் முத்தமிட்டாள், ரன், தூள், சந்திரமுகி, சிங்கம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் பாடல்களை பாடியுள்ளார். நல்ல நடிகர் நல்ல நடிகர் பின்னணி பாடகராக மட்டுமல்லாமல் ஏகப்பட்ட சினிமா படங்களில் நல்ல நடிகராக குணசித்ர பாத்திரங்களை ஏற்று நடித்து அசத்தி உள்ளார்.

தனுஷ், விஷால், விஜய், சூர்யா, ஜெயம் ரவி, அர்ஜுன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படத்திலும் இவர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். திருடா திருடி திருடா திருடி கடந்த 2003ம் ஆண்டு வெளியான நடிகர் தனுஷின் திருடா திருடி படத்தில் தனுஷுக்கு அப்பாவாக சூப்பரான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் நிரூபித்து இருப்பார்.

திமிரு திமிரு கம்பீரம், பேரழகன், கிரி, அறிவுமணி, போஸ், கள்வனின் காதலி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த மாணிக்க விநாயகத்துக்கு விஷாலின் திமிரு படத்திலும் நல்ல கதாபாத்திரம் கிடைத்து இருந்தது. ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வேட்டைக்காரன் வேட்டைக்காரன் தளபதி விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் கல்லூரி மாணவியின் அப்பாவாக நடித்து இருப்பார். அவரிடம் தான் நடிகர் விஜய் ஆட்டோ வாடகைக்கு எடுத்து ஓட்டிக் கொண்டிருப்பார்.

விஜய்யின் தங்கை போல இருக்கும் அந்த கல்லூரி மாணவிக்கு ஒரு பிரச்சனை என்றதுமே விஜய் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகளில் மகளுக்காக உருகும் அப்பாவாக நடித்திருப்பார். ரசிகர்கள் சோகம் ரசிகர்கள் சோகம் பின்னணி பாடகரும், நடிகரும், நல்ல மனிதருமான மாணிக்க விநாயகம் கடந்த 2017ம் ஆண்டு என்பதெட்டு படத்தில் நடித்து இருந்தார். உடல் நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அவர் காலமானார் என்ற அதிர்ச்சியான செய்தி அறிந்ததும் ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்

கருத்துகள் இல்லை: