இது பற்றி உலகம் தெரிந்து விடக்கூடாது என்பதில் மிக கவனமாக செயல்படுவது போல தெரிகிறது. புலிகளின் வெறும் வடக்கு தலைமைகள் மட்டுமே ஈழப்போராட்டம் என்பதாக போலி பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது
அதிலும் இன்னும் கொஞ்சம் ஆழமாக நோக்கினால் வடக்கிலும் கூட ஒரு குறிப்பிட்ட பிரதேச வாதம்தான் அங்கு ஆட்சி செய்தது .
வன்னி மாவட்டத்தில் மட்டுமல்லாமல் இதர மாவட்டங்களிலும் குடியேறி இருந்த மலையக மக்களின் வறிய நிலைமையை பயன்படுத்தி அவர்கள் மேல் சவாரி விட்டது புலிகள் இயக்கம்.
போர் முடிந்த பின்னாலும் கூட புலம்பெயர் தமிழர்கள் போராளி குடும்பங்களின் வறுமையை ஒரு அரசியல் காட்சி பொருளாக பயன்படுத்துகிறார்கள்,
ஆனால் காத்திரமான எந்த உதவியும் அவர்கள் செய்வதில்லை. உலக அரங்கில் அந்த மக்களின் வறுமையும் தகர குடிசைகளும் புலம்பெயர் தமிழர்களுக்கு ஒரு அரசியல் பொழுது போக்காகவே பயன்படுகிறது .
அந்த மக்கள் ஒரு அங்குலம் கூட முன்னேறிவிட கூடாது என்பதில் இந்த புலம்பெயர் அரசியல் மேதாவிகள் முனைப்பில் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாதது.
இன்னும் கூட புலிகளால் வலிந்து கவர்ந்து செல்லப்பட்ட மலையக இளைஞர்கள் எவ்வளவு பேர் உயிரிழந்தார்கள் என்ற விபரம் எவரிடமும் இல்லை .
இதை பற்றி கேட்டால் நாங்கள் வடக்கு கிழக்கு மலையகம் என்று பிரித்து பார்ப்பதில்லை எல்லோரும் தமிழர்கள்தான் என்று கூசாமல் பொய் சொல்வார்கள்
உலகம் முழுவதும் ஆழமாக காலூன்றி உள்ள புலியின் பணமுதலைகள் இந்த போரினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களை ஏன் இதுவரை திரும்பி பார்க்கவில்லை?
இங்கே திரு . மல்லியப்பூ சந்தி திலகர் (முன்னாள் நுவரெலியா நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய அவரது குறிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
புலிகளின் போராட்டத்தில் மலையக மக்களின் பங்களிப்பு அல்லது பாதிப்பு பற்றி பேசும்போதெல்லாம் ஏதோ அரசியல் நோக்கத்திற்காக கூறப்படும் வாதம் போல் இலகுவில் கடந்துவிடும் போக்கு காணப்படுகிறது .
இது பற்றிய புள்ளிவிபரம் தேவை படுகிறது . இந்த மக்களோடு நேரடியாக தொடர்புகள் வாய்ப்புக்கள் உள்ளவர்கள் இது பற்றி கவனம் எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்
திரு .மல்லியப்பூ சந்தி திலகர்: மூத்த மகனை உள்ளியக்க முரண்பாடுகளின்போதும், இரண்டாவது மகளை உள்நாட்டுப்போரில் மாவீரராகவும் பறிகொடுத்தார்.
மாவீரர் தாயாக அதற்கென கிடைத்த கல்வீட்டில் வாழ்ந்தவரை, இறுதி யுத்தம் வவுனியா 'அருணாச்சலம்' முகாமில் அடைத்தது.
யுத்தம் முடிந்து மீளவும் தன் கல்வீட்டுக்குச் சென்றபோது 'வீட்டு உரிமையாளர்' என நின்றவர் நீங்கள் யாரென ? என கேட்கவே,
அந்த அரசியலை விளங்கிக்கொள்ள முடியாதுபோன அப்பாவித்தாயானார் !
மல்லியப்புசந்தி திலகர் : வரலாற்றில் வாழ்வார் அத்தை !
மலையகத்தவர்களான எங்கள் குடும்பத்தை வடமாகாணம் நோக்கி நகர்த்தக் காரணமானவர். இவரை மணமுடித்தவர் தொழில்சார்ந்து வடமாகாணாத்துக்கு மாற்றலாகி செல்ல அதனைத் தொடர்ந்து சகோதர குடும்பங்கள் தாய் தந்தையருடன் அங்கே குடியேற நேர்ந்தது.
1971 ஆம் ஆண்டளவில் அது நடந்திருக்க இப்போது ஐம்பது வருடங்களாகிறது.
இந்த ஐம்பது வருடங்களில் முதல் பத்து வருட காலத்திலேயே கணவனால் கைவிடப்பட்டவரான இவர், தனது மூன்று பெண்பிள்ளைகளையும் ஒரு ஆண்குழந்தையையும் தனியாக நின்று வளர்த்தெடுத்தார்.
மூத்த மகனை உள்ளியக்க முரண்பாடுகளின்போதும், இரண்டாவது மகளை உள்நாட்டுப்போரில் மாவீரராகவும் பறிகொடுத்தார்.
மாவீரர் தாயாக அதற்கென கிடைத்த கல்வீட்டில் வாழ்ந்தவரை, இறுதி யுத்தம் வவுனியா 'அருணாச்சலம்' முகாமில் அடைத்தது.
யுத்தம் முடிந்து மீளவும் தன் கல்வீட்டுக்குச் சென்றபோது 'வீட்டு உரிமையாளர்' என நின்றவர் நீங்கள் யார் ? என கேட்கவே, அந்த அரசியலை விளங்கிக்கொள்ள முடியாதுபோன அப்பாவித் தாய் ஆனார் !
அந்த அதிர்ச்சியிலிருந்து அவரைத்தேற்ற எங்களோடு அழைத்துவந்து சிலகாலம் தங்க வைத்தோம். அந்த அரசியலைப் புரியவைத்தோம். புரிந்துகொண்டவர் அதன் பின்னர் ஊர் திரும்பி தன் இளைய மகளோடு சிறிய வீடொன்றில் வாழ்ந்தார்.
கடந்த ஒரு மாத காலமாக சுகவீனமுற்றிருந்த நிலையில் இன்று மறைந்தார்.
இறுதிச்சடங்குகளில் கூட கலந்து கொள்ள முடியாத இந்த கொரொனா இடர்காலத்தில் எம்மைவிட்டு பிரிந்து செல்கிறார்.
சென்று வாருங்கள் சிந்தாமணி அத்தை.
உங்களை வரவேற்க உங்கள் மகள் 'பூங்குயில்' காத்திருப்பாள்.
இன்று இறந்தாலும் ஒரு வரலாற்றின் அடையாளமாக வாழ்வீர்கள்.
அஞ்சலிகள் அத்தை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக