வியாழன், 14 ஜனவரி, 2021

சென்னைக்கு வந்தது கோவாக்சின் 20,000 டோஸ்

 

dinakaran : சென்னை: இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை பயன்படுத்த மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் வரும் 16ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்க உள்ளது. இதன்படி நாடு முழுவதும் தடுப்பூசியை அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்திற்கு முதல் கட்டமாக 5.56 லட்சம் டோஸ் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 5.36 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி நேற்று சென்னை வந்தது.      இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அனைத்து மாவட்டங்களுக்கும் தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று காலை விமானம் மூலம் 20 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வந்தடைந்தது. சென்னை வந்த கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின், சிறப்பு வாகனம் மூலம் டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கே பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை: