Hemavandhana tamil.oneindia.com : சென்னை: எப்படியும் இந்த நவம்பரில் ரஜினி கட்சியை ஆரம்பித்துவிடுவார்கள் என்றார்கள்.. ஆனால், 2021
பிப்ரவரியில்தான் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அரசியல் வருகை குறித்த கால் நூற்றாண்டு எதிர்பார்ப்பு இருந்தாலும், சலித்து ஓய்ந்த ரஜினி ரசிகர்களுக்கு ஓரளவு நம்பிக்கை மிச்சம் மீதி ஒட்டிக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது.. அந்த நம்பிக்கையில்தான் "இப்போது இல்லை என்றால், எப்போதுமே இல்லை" என்று வெளிப்படையாகவே அதிருப்தியை வெளிப்படுத்தி போஸ்டர்களை தமிழகம் முழுவதும் அடித்து ஒட்டினர்.
R
ஆனால், இந்த போஸ்டர்களை பார்த்து டென்ஷன் ஆகிவிட்ட ரஜினி தரப்பு,
ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம், இனி இப்படியெல்லாம் போஸ்டர் அடித்து
ஒட்டக்கூடாது, தலைமை சொல்லும்வரை அமைதி காக்கவும் என்று தெரிவித்தது..
ஆனால், ரஜினி ரசிகர்கள், இதையும் போஸ்டர் அடித்து ஒட்டி, இனிமேல் அடிக்க
மாட்டோம் என்றனர்.
இதனிடையே மற்றொரு தகவல் வெளியானது.. ரஜினியின் தீவிர ரசிகர் முத்துமணி
என்பவர், மதுரையில்தான் முதல் ரசிகர் மன்றத்தை துவக்கினார்.. அதனால்,
நவம்பரில் ரஜினி கட்சி ஆரம்பித்தால், தன் முதல் மாநாட்டை மதுரையில்தான்
கூட்டுவார் என்றும் சொல்லப்பட்டது..
இதனால் ரஜினி ரசிகர்கள் மறுபடியும்
தெம்பானார்கள். ஆனால், இப்போது வரும் பிப்ரவரியில்தான் கட்சி ஆரம்பிப்பார்
என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.. இது எந்த அளவுக்கு உண்மை தெரியவில்லை.
பல கட்சிகள் தேர்தலுக்கான வேலைகள், கூட்டணிகள், சீட் பேரங்களில்
இறங்கிவிட்ட நிலையில், நவம்பரிலாவது ரஜினி கட்சி ஆரம்பித்ததும் வேலைகளை
ஜரூராக செய்யலாம் என்று மன்ற நிர்வாகிகள் காத்திருந்ததாக சொல்லப்பட்டது..
இப்போது பிப்ரவரி என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது..
தேர்தலுக்கு 3 மாசத்துக்கு முன்பு கட்சியை ஆரம்பித்தாலும், அது தங்களுக்கு
சரியாக இருக்கும் என்றே ரஜினி தரப்பு கருதுகிறதாம்.
எனினும், மாற்றத்தை தருவேன் என்றவர், புரட்சியை கண்ணால் பார்ப்பேன் என்று
கேட்டவர், ஆன்மீக அரசியலை முன்னெடுத்து செல்வேன் என்றவர், மறுபடியும்
மறுபடியும் இப்படி பின்வாங்குவது சரியா என்று மக்கள் முணுமுணுக்க
ஆரம்பித்துவிட்டனர்.. பிப்ரவரி மாதம் மட்டும் ரஜினி கட்சியை
ஆரம்பிக்காவிட்டால், ரசிகர்கள் மொத்தமாகவே டயர்ட் ஆகிவிடுவார்கள் என்பது
நிச்சயம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக