நக்கீரன் :
துக்ளக்
இதழின் 50 ஆவது
ஆண்டுவிழாவில் நடிகர் ரஜினிகாந்த பேசியது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்து ரஜினி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் மீது கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. துக்ளக் விழாவில் பேசிய ரஜினிகாந்த், சேலத்தில்
பெரியார் தலைமையில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில் ராமர் - சீதையின் ஆடையில்லா படங்கள் செருப்பு மாலையுடன் இடம்பெற்றதாகவும், அதனை துக்ளக் பத்திரிகை மட்டுமே தைரியமாக வெளியிட்டதாகவும் பேசினார். இந்த தகவல் தவறானது என பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் ரஜினியின் இந்த பேச்சு அமைதியை குலைக்கும் விதமாக இருப்பதாக கூறி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கோவை காவல்துறை ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக