
தினத்தந்தி :
சவுதி அரேபியா பயணத்தின்போது பாகிஸ்தான்
வான்வழியை பயன்படுத்த பிரதமர் மோடியின் விமானத்திற்கு பாகிஸ்தான் அனுமதி
மறுத்துள்ளது.
இஸ்லாமாபாத்:
சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நாளை மறுநாள் 29-ம் தேதி சவுதி அரேபியாவுக்கு
செல்கிறார். அங்கு தங்கி இருக்கும் அவர், ரியாத்தில் நடைபெறும் எதிர்கால முதலீட்டு நிறுவன மன்றத்தின் 3-வது அமர்வில் கலந்து
கொள்கிறார். இதையடுத்து அவர் சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல்சாத் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் அல்சாத்தையும் சந்தித்து பேசுகிறார். கடந்த மூன்றரை ஆண்டுகளில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி சவுதி அரேபியா செல்கிறார்.
இந்நிலையில் அவர் செல்லும் விமானம் சவுதி அரேபிய சென்றடைவதற்கு பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி தர மறுத்துள்ளது. இதனை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி தனது முடிவு குறித்து இந்திய உயர் அதிகாரி ஒருவருக்கு எழுத்துப்பூர்வமாக அறிக்கை அனுப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு பிரதமர் மோடி செல்லும்
விமானத்தை தன் வான்வழியில் அனுமதிக்க பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக